அடுப்பை கவனிக்க மறந்துட்டீங்களா? பாத்திரம் விடாப்பிடியாக அடிபிடித்து விட்டதா? சிரமம் இல்லாமல் இப்படி செய்யுங்கள், சுத்தமா புதுசு போல மின்னும்!

vessel-strain-salt
- Advertisement -

நாம் சமையல் அறையில் எப்பொழுதும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. கொஞ்சம் கவனம் தவறினாலும் இரட்டிப்பு வேலை ஆகிவிடும் அபாயம் உண்டு. சில சமயங்களில் அடுப்பை கவனிக்காமல் போய்விடுவோம். அந்த சமயத்தில் அடுப்பில் இருக்கும் பாத்திரம் அடி பிடிக்க துவங்கியிருக்கும். கருவிய வாடை அடிக்கும் வரை நமக்கு அது தெரியவே தெரியாது. இப்படி விடாப்பிடியாக ஒட்டிக் கொண்டிருக்கும் கறையை சுத்தம் செய்வது என்பது மிகுந்த கடினமான ஒரு வேலையாக இருந்திருக்கும் ஆனால் இப்படி ட்ரை பண்ணி பாருங்க, கை வைக்காமல் கொஞ்சம் கூட சிரமம் இல்லாமல், சூப்பரா புதிது போல மின்ன செய்யலாம். அடிப்பிடித்த பாத்திரத்தை எப்படி சிரமம் இல்லாமல் சுத்தம் செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் இனி பார்க்க இருக்கிறோம்.

சமையலறையில் வேலை செய்யும் பொழுது கண்டிப்பாக அடுப்பில் கவனம் இருக்க வேண்டும். பாத்திரத்தை அடுப்பில் வைத்தது முதல் இறக்கும் வரை கவனமாக இருந்தால் தான் நம்முடைய வேலையும் சுலபமாக இருக்கும். இல்லை என்றால் இரண்டு வேலை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும். பாலை அப்பொழுது தான் அடுப்பில் வைத்திருப்போம். சரி நேரம் இருக்கிறது என்று அலட்சியமாக இருந்து விட்டால் பால் பொங்கி அடுப்பை நாசம் செய்து விடும்.

- Advertisement -

பிறகு பால் பாத்திரத்தை மட்டும் அல்லாமல், அடுப்பையும் சேர்த்து சுத்தம் செய்ய வேண்டியதாகி போய்விடும். இது நமக்கு தேவையா? எனவே அடுப்பில் எந்த ஒரு பொருளை வைத்தாலும் அதன் நேரத்தை நீங்கள் நிர்ணயம் செய்யக்கூடாது. அதற்கு பதிலாக அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு நீங்கள் உங்கள் வேலையை பார்க்கலாம். அப்போதும் உங்களுடைய சிந்தனையில் அடுப்பில் பாத்திரத்தை வைத்திருக்கிறோம் என்பது இருக்க வேண்டும். வேலையில் மூழ்கி விட்டால் பிறகு கஷ்டம் தான்.

பாத்திரத்தில் பால், குழம்பு, கூட்டு என்று எது வைத்திருந்தாலும், அது அடிப்பிடித்து பாத்திரத்தில் அதிகப் படியாக ஒட்டிக் கொண்டு விட்டால் அதனை போக்குவது ரொம்பவே கடினமான காரியமாக இருக்கும் ஆனால் இந்த முறையில் நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க! அடிபிடித்த பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முக்கால் பாகம் நிரம்பும் படி தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின் மீண்டும் அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வையுங்கள். ஒரு ரெண்டு நிமிடத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்து விடும். அந்த சமயத்தில் கொஞ்சம் உப்பை எடுத்து உள்ளே போடுங்கள். பின்னர் ஒரு ஸ்பூன் அளவுக்கு டிடர்ஜென்ட் பவுடர் சேர்த்துக் கொள்ளுங்கள். பத்திரம் தேய்க்கும் வாஷிங் பவுடரை விட, டிடர்ஜென்ட் பவுடர் வெகு விரைவாக வேலை செய்யும். இப்போது அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் டிடர்ஜென்ட் பவுடரில் இருக்கும் நுரை பொங்க ஆரம்பித்து விடும்.

ஒரு ரெண்டு நிமிடம் நன்கு கொதிக்க வைத்தால் சரியாக இருக்கும். பிறகு அடுப்பை அணைத்து அந்த பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை சிங்கிள் கொட்டி விடுங்கள். நன்கு அந்த பாத்திரத்தை ஆற விட்டு விடுங்கள். அதன் பிறகு லேசாக ஏதாவது ஒரு சோப் அல்லது லிக்விட் கொண்டு நீங்கள் எப்பொழுதும் போல உங்கள் அந்த பாத்திரத்தை தேய்த்து பாருங்கள், கொஞ்சம் கூட சிரமம் இல்லாமல் அடிபிடித்த கறை நீங்கிவிடும். புதிது போல பாத்திரம் மின்னும், கீறல்கள் விழாது. எனவே இந்த முறையை ட்ரை பண்ணி நீங்களும் பயனடையுங்கள்.

- Advertisement -