உங்களுக்கு உயர்ந்த பதவிகள், பூர்வீக சொத்துகள் கிடைக்க இதை செய்யுங்கள்

suriyan

சூரியன் இல்லாமல் பூமியில் உயிர்கள் என்பதே இல்லை என்கிற உண்மையை விஞ்ஞானமும், மெய்ஞானமும் ஒரு சேர ஏற்றுக் கொள்கிறது. சூரியக்கோளில் மாற்றங்கள் ஏற்படும் காலத்தில் மனிதர்களின் உடல்நலம் அதிகம் பாதிக்கப்படுவதாக மேலை நாட்டினர் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இந்த உண்மையை பல நூறாண்டுகளுக்கு முன்பாகவே வானியல் விஞ்ஞானம் அடிப்படையிலான நமது ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படியான அந்த சூரிய பகவான் ஒருவர் ஜாதகத்தில் பாதகமான நிலையில் வருகின்ற போது அந்நபர் பல துன்பங்களை அனுபவிக்க நேர்கிறது. சூரியனால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தையும் நீக்கி நன்மைகளை பெற செய்யப்படும் ஹோமம் ஆதித்ய ஹோமம் அல்லது சூரிய ஹோமம் எனப்படுகிறது. இந்த சூரிய ஹோமம் செய்வதால் என்னென்ன நன்மைகளை நாம் பெற முடியும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

தை, சித்திரை மாத பிறப்பு தினங்கள், சுபமுகூர்த்த வளர்பிறை ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் சூரிய பகவானுக்குரிய நட்சத்திர தினங்கள், உங்கள் ஜென்ம நட்சத்திர தினங்களில் இந்த சூரிய ஹோமத்தை செய்து கொள்ளலாம். இந்த சூரிய ஹோமம் அல்லது ஆதித்ய ஹோமத்தை வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்துகொள்ளலாம். கோயில்களில் செய்வது பலன்களை விரைவாக தர வல்லதாகும். யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களை துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது.

சூரிய ஹோமம் செய்யும் தினத்தன்று ஹோம பூஜை செய்யும் நபர்கள் காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பான பலன்களை தரும். உணவு சாப்பிட விரும்புபவர்கள் உப்பு, புளி, காரம் சேர்க்காத உணவுகள் அல்லது பழம், பால் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம்.

suriyan

சூரிய ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய சூரிய கிரக தோஷங்களை போக்குகிறது.

- Advertisement -

இந்த சூரிய ஹோமம் அல்லது ஆதித்திய ஹோமம் செய்து கொள்ளும் நபர்களுக்கு ஜாதகத்தில் சூரிய திசை, சூரிய புக்தி போன்றவை நடைபெறும் காலங்களில் சூரிய கிரகத்தால் ஏற்படுகின்ற தோஷங்கள், பாதகமான பலன்கள் போன்றவை ஏற்படாமல் தடுத்து நன்மைகளை உண்டாக்கும். தந்தைக்கு ஏற்பட்டிருக்கின்ற உடற்பிணிகள் போன்றவை நீங்கும். தந்தை வழி முன்னோர்களின் சொத்துக்களை அடைவதில் இருந்த தடைகள் நீங்கும்.

Homam

நீண்டகாலமாக உடலில் இருந்த நோய் பாதிப்புகள் நீங்கி, உடல் நன்கு வலிமை பெறும். இதயம், கண்கள் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கும். மக்கள் செல்வாக்கு ஏற்படும். அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு வெகுவிரைவில் உயர்ந்த பதவிகளை பெறக்கூடிய யோகம் ஏற்படும். வாழ்வில் அனைத்து விடயங்களிலும் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
துலாம் ராசியினருக்கான அதிர்ஷ்ட பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Aditya homam in Tamil. It is also called as Surya homam in Tamil or Homangal in Tamil or Homam pooja in Tamil or Homangal palangal in Tamil.