துலாம் ராசியினர் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் ஏற்பட இவற்றை செய்தால் போதும்

thulam

இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கச் செய்யும் சஞ்சீவி மந்திரத்தை அறிந்தவர் சுக்கிராச்சாரியார் எனப்படும் சுக்கிர பகவானாவார். அதனால் தான் அசுரர்கள் சுக்கிரிராச்சாரியாரை தங்களுக்கு குருவாக எண்ணி பின்பற்றினர். எனவே சுக்கிர பகவானுக்கு அசுரகுரு என்கிற பெயரும் உண்டாயிற்று. அப்படியான சுக்கிர பகவானின் ஆதிக்கம் பெற்ற துலாம் ராசியில் பிறந்தவர்கள், தங்களின் மிகுதியான செல்வங்களையும், என்னற்ற அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் பெறுவதற்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படும் ராசி கட்டங்களில் ஏழாவதாக வரும் ராசி துலாம் ராசியாகும். இந்த ராசியின் அதிபதியாக இன்பங்களுக்கு காரகனான சுக்கிர பகவான் இருக்கிறார். இந்த ராசியில் பிறந்த ஆண் மற்றும் பெண்கள் நல்ல தோற்ற பொலிவோடு, பிறரை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி தன்மையை கொண்டிருப்பார்கள். இத்தகைய துலாம் ராசியினர் வாழ்வில் மிகுதியான அதிர்ஷ்டங்களும்,யோகங்களும் பெற கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வர வேண்டும்.

நவ கிரகங்களில் சுக்கிர பகவானின் ஆதிக்கத்திற்குள் வருகின்ற துலாம் ராசியினர் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர தினங்களில் திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலுக்கு சென்று ரங்கநாதரையும், தாயாரையும் அர்ச்சனை செய்து வழிபடுவது அதிர்ஷ்டமான வாழ்வு உண்டாகும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது. வெள்ளிக்கிழமைகள் தோறும் வீட்டிலேயே சுக்கிர பகவானுக்கு விரதமிருந்து வழிபடுவதால் வாழ்வில் செல்வமும், சகல சுகபோகங்களும் பெருகும். திருமால் கோயிலில் பெருமாளுக்கு சாற்ற புனுகு, சந்தனம், அத்தர் போன்ற வாசனைத் திரவியங்கள் தானம் செய்ததும் வாழ்வில் மங்களங்கள் உண்டாக்குச் செய்யும் ஒரு பரிகாரமாகும்.

feeding birds

புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து வருபவர்களுக்கு சுக்கிர பகவானின் அருள் முழுமையாகக் கிடைக்கும். பறவைகள், மீன்கள் மற்றும் இன்ன பிற ஜீவராசிகளுக்கு உணவும், நீரும் வைப்பது சுக்கிர பகவானின் அருளாசிகளை உங்களுக்கு முழுமையாக கிடைக்க செய்யும். உடன் பிறந்த சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த எந்த ஒரு அன்பளிப்பை கொடுப்பதும், உங்கள் வாழ்வில் ஏற்றம் தரும் சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு நிலையான வருமானம் கிடைக்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Thulam rasi tips in Tamil. It is also called Thulam rasi pariharam in Tamil or Jothida rasi pariharam in Tamil or Rasi pariharam in Tamil or Thulam rasi in Tamil.