தங்கத்தை விட, விலை மதிக்க முடியாத இந்த பூவை ஒருமுறை உங்கள் வீட்டில் வைத்தாலும் போதும். மகாலட்சுமி அந்த பூவில் வந்து நிரந்தரமாக அமர்ந்து விடுவாள்.

mahalashmi

தங்கம் மகாலட்சுமியின் ஸ்வரூபம். நம்முடைய வாழ்க்கை எப்பவுமே தங்கம் போல ஜொலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் நம்முடைய, எல்லோரது ஆசையாகவும் இருக்கிறது. தங்கத்தை விட விலை மதிப்பு மிக்க எத்தனை உலகங்கள் இருந்தாலும் தங்கம், தங்கம் தான். நம்முடைய வாழ்க்கையும் தங்கம் போல பிரகாசமாக மின்னிக் கொண்டே இருக்க வேண்டும் என்றால், நம்முடைய வீட்டில் அந்த மகாலட்சுமியை நிரந்தரமாக அமரச் செய்ய வேண்டும். மகாலட்சுமியை நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வைக்க, எந்த பூவை வைத்து எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mahalakshmi

நம்முடைய வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் மங்கி போகாமல், தங்கம் போல பிரகாசமாக ஜொலிக்க வைக்கக்கூடிய அற்புத சக்தி இந்த பூவுக்கு உண்டு என்றால், அது தங்கத்தை விட விலை மதிக்க முடியாத ஒரு பூ தானே! அது எந்த பூ? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? மகாலட்சுமிக்கு உகந்த பூவின் வரிசையில் முதலிடம் பிடிப்பது தாமரை. முடிந்தவரை நம் வீட்டில் இருக்கும் மகாலட்சுமிக்கு வாரத்தில் ஒருமுறை வெள்ளிக்கிழமை தாமரை பூவை சூட்டினால், மிகவும் நல்லது. இதன் மூலம் நம்முடைய வீடு லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக மாறும்.

தாமரை பூவுக்கு அடுத்ததாக சொல்லப்பட்டுள்ளது மல்லிகைப்பூ. மல்லிகை பூவின் வாசத்திற்கு எல்லா நல்ல தேவதைகளும் வசமாகும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை. மகாலட்சுமிக்கு விருப்பமான பூக்களில் இந்த மல்லிகைப்பூவும் அடங்கும். குறிப்பாக மல்லிகை பூ வகைகளில் அடுக்குமல்லி பூவுக்கு அதிகப்படியான முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்கு மல்லிகை பூவை, குண்டுமல்லிகை என்றுகூட சிலர் சொல்லுவார்கள்.

senthamarai

தாமரைப்பூ அடுக்கடுக்காக பெரியதாக இருக்கும். அடுக்கு மல்லி என்பது பல அடுக்குகளை கொண்டு, மிகுந்த வாசத்தோடு, சிறிய அளவில் இருந்தாலும் மகாலட்சுமியை வசியப்படுத்தும் தன்மை கொண்டது என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த அடுக்கு மல்லிகை பூவை வாரத்தில் ஒருமுறை வெள்ளிக்கிழமையில் மட்டுமாவது வாங்கிவர வேண்டும். எல்லா இடங்களிலும் இந்த அடுக்கு மல்லி கிடைத்துவிடாது. சில வீடுகளில் பூச்செடிகளில் இந்த அடுக்கு மல்லி பூக்கும். முடிந்தால் உங்களுடைய வீட்டு வாசலிலும் அடுக்குமல்லி பூச்செடியை வைத்து வளர்க்கலாம். அப்படி இல்லை என்றால் பூ கடைக்காரர்களிடம் முன்பே சொல்லி வைத்து வெள்ளிக்கிழமை உங்கள் கைக்கு இந்தப் பூ கிடைக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

வீட்டின் தென்மேற்கு பகுதியில் ஒரு சிறிய கண்ணாடி தம்ளரில் நிரம்ப தண்ணீரை நிரப்பி வைத்து, அதில் 3 ஒரு ரூபாய் நாணயங்களை போட்டு, அந்த தண்ணீரில் ஒரு சிட்டிகை கஸ்தூரி மஞ்சள் கலந்து விட்டு, ஒரே ஒரு அடுக்கு அடுக்கு மல்லி கிடைத்தாலும் கூட அந்த தண்ணீரில் மிதக்க விடுங்கள். நிச்சயமாக இந்த அடுக்கு குண்டுமல்லிகையின் வாசத்திற்கு மகாலட்சுமி அந்த இடத்தில் வந்து நிரந்தரமாகத் தங்கி விடுவார்கள். தண்ணீரில் இருக்கும் குண்டுமல்லி வாடிய பின்பு தண்ணீரையும் குண்டு மல்லியும் மாற்றினால் போதும். உள்ளே இருக்கும் அதே நாணயங்களைப் மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தப் பூவை தண்ணீரில் போடும்போது மகாலட்சுமி வந்து அந்த பூவில் அமர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

malli

அடுக்கு மல்லிகை பூவை வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு சூட்டவேண்டும். மகாலட்சுமியின் பாதத்தில் ஒரு அடுக்கு மல்லிகை பூவை வைத்து, அந்த மல்லிகையை  உங்கள் பணப் பெட்டியில் வைத்து விடுங்கள். நிச்சயமாக உங்களுடைய பணம் வீண் விரையம் ஆகாது. வாழ்க்கையில் பண கஷ்டம் வராது. உங்களுடைய வாழ்க்கையும் வாழ்நாள் முழுவதும் தங்கம் போல பல பலனு ஜொலிக்க ஆரம்பிக்கும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. மேல் சொன்ன எல்லா விஷயங்களையும் முடிந்தவரை மகாலட்சுமிக்கு சொந்தமான வெள்ளிக்கிழமை அன்று செய்வது மிகவும் சிறப்பானது. நம்பிக்கையோடு செய்தால் நல்ல பலன் பெறலாம். நல்லதே நடக்கும்.