ஒரு துளி எண்ணெய் பிசுக்கு கூட இல்லாமல் கார்த்திகை தீபத்திற்கு ஏற்றிய அகல் விளக்குகளை 10 நிமிடத்தில் சுத்தம் செய்ய சூப்பர் ஐடியா உங்களுக்காக.

agal
- Advertisement -

கார்த்திகை தீபம் முடிந்து ஒரு சில நாட்களே ஆகி இருக்கின்றது. நம்முடைய வீட்டில் ஏற்றிய விளக்குகளை சுத்தம் செய்ய முடியாமல், அதாவது எண்ணெய் பிசுக்கு போக சுத்தம் செய்ய முடியாமல் அப்படியே வைத்திருப்போம். எண்ணெய் பிசுக்கை சுத்தமாக நீக்க சுலபமான ஒரு ட்ப்ஸைதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க. 10 நிமிஷத்துல கை நோகாமல் விளக்குகளை புதுசு போல எண்ணெய் பிசுக்கு இல்லாமல் மாற்றிவிடலாம்.

agal1

முதலில் மண் அகல் விளக்குகளில் இருக்கக்கூடிய எரிந்த திரிகளை அப்புறப்படுத்தி விட வேண்டும். மண் அகல் விளக்குகளுக்கு உள்ளே மீதமிருக்கும் எண்ணெய், கருப்பு நிறம் படிந்து இருக்கும் அழுக்குகளை ஒரு காட்டன் துணியை வைத்தோ அல்லது டிஷ்யூ பேப்பரை வைத்தோ துடைத்து எடுத்துவிடுங்கள். இப்போது ஆகல் விளக்குகள் கழுவுவதற்கு தயாராக இருக்கிறது.

- Advertisement -

உங்கள் வீட்டில் எத்தனை மண் அகல் விளக்குகள் இருக்கின்றதோ, அத்தனை விளக்குகளும் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கொதிக்கும் தண்ணீரில் 3 ஸ்பூன் ஆப்ப சோடா உப்பு, 1 எலுமிச்சம் பழச்சாறு, எலுமிச்சை பழத் தோலையும் இந்த தண்ணீரிலேயே போட்டுவிடுங்கள். துணி துவைக்கும் பவுடர் 1 டேபிள்ஸ்பூன், ஹேண்ட் வாஷ் 2 டேபிள் ஸ்பூன். இந்தப் பொருட்களையெல்லாம் ஒரு கரண்டியை வைத்து நன்றாக கலந்து விட்டு தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். (உங்கள் வீட்டில் கை கழுவ எந்த ஹேண்ட் வாஷ் பயன்படுத்தினாலும், எந்த பிராண்ட் பயன்படுத்தினாலும் அதில் இருந்து 2 டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள்.)

agal3

கொதிக்கின்ற இந்த தண்ணீரில் விளக்குகளை ஒவ்வொன்றாக போட்டு விடவேண்டும். கொதிக்கின்ற தண்ணீரில் விளக்குகளை போட்டுவிட்டு மீண்டும் 5 நிமிடம் தண்ணீரை கொதிக்க வைக்கும் வேண்டும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். சுடுதண்ணீர் நன்றாக ஆற வேண்டும். அதுவரை அகல் விளக்குகள் அந்த தண்ணீரிலேயே ஊறட்டும். (சுடு தண்ணீரில் மண் அகல் விளக்கில் இருக்கும் எண்ணெய் அழுக்குகள் பிரிந்து வந்து மிதப்பதை நாமே பார்க்கலாம்.)

- Advertisement -

இப்போது பாத்திரத்தில் தண்ணீரில் இருக்கும் மண் அகல் விளக்குகளை ஒவ்வொன்றாக உங்களுடைய கையில் எடுத்துப் பாருங்கள். அப்படியே ஒரு பாத்திரத்தில் நல்ல தண்ணீரை வைத்து அதில் இந்த அகல் விளக்குகளை போட்டு எடுத்தாலே வேலை முடிந்தது. அகல் விளக்குகளில் ஒரு சொட்டு எண்ணெய் பிசுக்கு கூட இருக்காது. ஆனால் நீங்கள் திரி போட்டு தீபம் ஏற்றி இருக்கும் இடத்தில் அந்த கருப்பு இலேசாக ஒட்டி இருக்கத்தான் செய்யும். அந்த கருப்பை நீக்க வேண்டுமென்றால் ஸ்பாஞ்ச் ஸ்க்ரப்பரை எடுத்து அந்த இடத்தில் கொஞ்சம் தேய்த்து கழுவ வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

agal2

எல்லா விளக்கையும் ஒரு துணியை வைத்து தண்ணீரை சுத்தமாக துடைத்து விட்டு, வெயிலில் உலர வைத்து ஒரு அட்டைப் பெட்டியில் போட்டு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவருடம் தீபம் ஏற்றுவதற்கு பிசுபிசுப்பாக இல்லாத விளக்கு தயாராக இருக்கும். உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -