சில பேர் குடும்பத்தில் வாழ்ந்தவர்கள், எதிர்பாராத விபத்திலோ அல்லது தாங்களே தங்களுடைய உயிரை மாய்த்துக் கொண்டு அகால மரணம் அடைந்திருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை சாந்தி செய்ய, மஹாளய அமாவாசை அன்று எப்படி வழிபாடு செய்வது.
சாதாரணமாக இறந்தவர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது போல, அகால மரணம் அடைந்தவர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தால், அதெல்லாம் அவர்களை போய் சேராது என்றும் நம்முடைய சாஸ்திரம் சொல்கிறது. வழக்கம் போல தான் நம்பிக்கை இருந்தால் இதை நீங்கள் பின்பற்றி பலன் அடையலாம்.
அகால மரணம் அடைந்தவர்களை சாந்தி செய்ய
அகால மரணம் அடைந்தவர்களை சாந்தி அடைய செய்ய வேண்டும் என்றால், சித்தர்கள் வாழக்கூடிய இடத்தில் அவர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்கலாம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது சக்தி வாய்ந்த மரங்கள் இருக்கக்கூடிய இடத்தில் திதி தர்ப்பணம் கொடுக்கும்போது, அகால மரணம் அடைந்தவர்களை அது போய் சேரும் என்பது நம்பிக்கை.
உதாரணத்திற்கு வில்வ மரம், நெல்லி மரம், ஆலமரம், அரசமரம், வேப்பமரம் இந்த ஐந்து மரங்களும் தெய்வீக அம்சம் பொருந்திய மரங்கள். இந்த ஐந்து மரங்களிலும் சித்தர்கள் வசிப்பதாகவும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்த மரத்திற்கு அடியில் அமர்ந்து அகல மரணம் அடைந்தவர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது சிறப்பான பலனை தரும்.
சில மரங்கள் இருக்கக்கூடிய இடத்தில் பார்த்தால் மின்மினி பூச்சிகள் அதிகமாக இருக்கும். அதுபோல ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து கூட அகால மரணம் அடைந்தவர்களுக்கு திதி தர்ப்பணம் காரியங்களை செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். தெய்வீக மரங்களுக்கு எப்போதுமே ஒரு சக்தி இருக்குங்க. அந்த இடத்தில் கண்ணுக்கு தெரியாத ஆத்மாக்களும் இருக்கும் என்பதுதான் நம்முடைய முன்னோர்களின் நம்பிக்கையாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: மகாளய அமாவாசையில் பெண்கள் செய்யக்கூடாத தவறு
உங்களுடைய குடும்பத்தில் யாரேனும் சிறுவயதிலேயே இருந்திருந்தாலோ அல்லது அகால மரணம் அடைந்திருந்தாலோ தங்களை தங்களுடைய உயிரை மாய்த்துக்கொண்டு இருந்திருந்தாலும் மேலே சொன்ன முறைகளை பின்பற்றி திதி தர்ப்பணம் கொடுத்துப் பாருங்கள். உங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய தீர கஷ்டங்கள் துன்பங்கள் துயரங்கள் குறைவதற்கு இந்த வழிபாட்டு முறையும் ஒரு நல்ல வழியை காட்டித் தரும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.