இந்த 1 பொருளை எரித்து வீடு முழுவதும் புகை போட்டால் உங்களை வெல்ல எவராலும் முடியாது என்கிறார் அகத்தியர்! இதில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன?

agathiyar-sambrani
- Advertisement -

ஒவ்வொரு மூலிகை பொருட்களிலும் ஒவ்வொரு விதமான தெய்வீக சக்தி ஒளிந்து கொண்டுள்ளது. ஆசியாவின் கிழக்கு பகுதிகளில் அதிகம் வளரக்கூடிய ஒரு வகை மூலிகை மரத்திலிருந்து எடுக்கப்படும் இந்த ஒரு பொருளை எரித்து சாம்பலாக்கி, அதில் வரும் புகையை வீடு முழுவதும் பரவ செய்தால் எமனையும் வெல்லும் வரம் கிடைக்கும் என்கிறார் அகத்திய மாமுனிவர். அந்த ஒரு பொருள் என்ன? அதனுள் ஒளிந்து கொண்டிருக்கும் ரகசியம் தான் என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் இனி பார்ப்போம்

வீட்டுக்கு தேவையான மர சாமான்கள் செய்ய பயன்படுத்தும் இந்த மரத்தின் பெயர் ‘சால்’ என்று கூறப்படுகிறது. நன்கு உறுதியாக, உயரமாக வளரக்கூடிய இந்த மரத்தின் பட்டைகளில் இருந்து பெறப்படும் பிசின் ‘குங்கிலியம்’ என்று கூறப்படுகிறது. இந்த குங்கிலியம் மருத்துவம் மற்றும் ஆன்மீக பயன்பாடுகளுக்கு அதிக அளவு பயன்படுத்துகின்றனர். இந்தியாவை சுற்றி இருக்கும் பகுதிகளில் ஊதுபத்தி போன்ற நறுமணப் பொருட்கள் தயாரிக்க குங்கிலியம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

- Advertisement -

குங்கிலியம் சாம்பிராணி போலவே எரித்தால் நல்ல ஒரு நறுமணத்தைக் கொடுக்கக் கூடிய அற்புதமான மூலிகை ஆகும். ஆனால் இதுவும் சாம்பிராணியும் வெவ்வேறானவை! சிலருக்கு இது ரெண்டும் ஒன்று என்கிற குழப்பம் இருந்திருக்கக் கூடும். சாம்பிராணியை போலவே நறுமணத்தை கொடுக்கக்கூடிய இந்த குங்கிலியம் ‘வாத காவியம்’ என்னும் நூலில் அகத்தியர் புகழ்ந்து பாடியுள்ளார். சித்தர்களுக்கு ஒவ்வொரு மூலிகையின் பயன்களும் நன்கு தெரிந்திருக்கும்.

அதில் இந்த அற்புத மூலிகை பொருளாக இருக்கும் குங்கிலியத்தை சிவன் கோவில் மற்றும் சித்தர்கள் வாழும் இடங்களில் தினமும் சாம்பிராணி புகை போடுவது போல எரித்து புகை போட்டால் சித்தர்களுக்கு தெரிந்த தெய்வீக சூட்சும ரகசியங்கள் நமக்கும் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார். பொதுவாக மிகுந்த சக்தி வாய்ந்த சித்தர்களுக்கு இறப்பு இல்லாத நிலை உண்டு. எமனையும் வெல்ல கூடிய ஆற்றல் சித்தர்களுக்கு உண்டு என்பதால் குங்கிலியத்தை புகைப் போடுபவர்களுக்கு அவர்களை மட்டும் அல்லாமல், அவர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எமதூதர்களிடமிருந்து காப்பாற்றும் சக்தியை பெற முடியும் என்று விவரித்துள்ளார். அகத்தியர் அருளிய உபதேசங்களில் இதுவும் ஒன்று.

- Advertisement -

சால் எனப்படும் மரத்தினை குங்கிலிய மரம் என்றும் கூறப்படுவது உண்டு. இந்த குங்கிலிய மரத்திலிருந்து வடியும் ரப்பர் போன்ற பிசின் குங்கிலியம் என்று நாட்டு மருந்து கடைகள் அல்லது பூஜை பொருட்கள் விற்பனைக்கு இருக்கும் கடைகளில் கிடைக்கப் பெறுகின்றன. இந்த குங்கிலியத்தை இறை வழிபாடுகள் மதங்களை கடந்து பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. எல்லா மதத்தினரும் குங்கிலியத்தை பயன்படுத்துகிறார்கள்.

கொடிய கிருமிகள் மற்றும் துர்சக்திகள் போன்றவற்றை வீட்டில் இருந்து அகற்ற அக்காலத்தில் அரசர்கள் பெரும் செல்வந்தர்கள் வரை குங்கிலியத்தை எடுத்து அதை நெருப்பில் இட்டு புகையை எழுப்புவார்கள். இந்த புகையின் வாசனை அவர்களை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை அழிக்கும் என்று அவர்கள் ஆணித்தரமாக நம்பி வந்தனர். காற்றில் பரவும் மாசு மற்றும் விஷக்கிருமிகளை கூட அழிக்கக் கூடிய தன்மை இந்த குங்கிலியத்திற்கு உண்டு. இந்த குங்கிலிய புகையை சாம்பிராணி புகை போடுவது போல ஒவ்வொரு வாரமும் வீட்டில் மற்றும் தொழில் ஸ்தாபனங்களில் நீங்களும் போட்டு பயன் பெறுங்கள்.

- Advertisement -