நீண்ட நாள் வியாதிகள் நீங்க சித்தர் அருளிய மந்திரம்

Agathiyar-1-1

எண்ணிலடங்கா கோடியானவர்கள் நம் தமிழ்ச் சித்தர்கள். இச்சித்தர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகையான தனித்தன்மை வாய்ந்தவர்கள். ஆனாலும் ஒரு சில சித்தர்களை மட்டுமே பெரும்பான்மையான மக்கள் அறிந்துள்ளனர். ஆதிசித்தனாகிய சிவபெருமானுக்கு அடுத்து சித்தர்களின் தலைமைக் குருவாகவும்,தமிழ் மொழிக்கு இலக்கணத்தை வகுத்ததாக கருதப்படுபவருமான “அகத்தியர் மாமுனி” அப்படிப்பட்டவர்களுள் ஒருவர். இவரின் தவவலிமையைப் புகழ்ந்து கூறும் புராணங்களும், இதிகாசங்களும் பல. அப்படியான அகத்திய மாமுனி மக்களின் நீண்ட நாள் உடல்நலக் குறைப்பாடுகளைப் போக்க ஈஸ்வரரை மையப்படுத்தி உருவாக்கிய மந்திரம் தான் இந்த அகஸ்தீஸ்வரர் மந்திரம்.

agathiyar

அகத்தியர் மந்திரம்:
“ஓம் அகத்தீஸ்வராய நமஹ”

இம்மந்திரத்தை விடியற்காலையில் எழுந்து குளித்து முடித்து சூரியன் உதிக்கின்ற நேரத்தில் அச்சூரியனைப் பார்த்துக் கொண்டே இம்மந்திரத்தை 21 முறை ஜெபிக்க வேண்டும். ஞாயிற்றுகிழமைகளில் 108 முறை ஜெபித்தல் சிறப்பு. இதைத் தினமும் செய்து வர அந்த அகத்தீஸ்வரர் அருளால் உங்கள் கர்ம வினைகள் காரணமாக, உங்களைப் பற்றியிருக்கும் நீண்ட நாள் வியாதிகள் எதுவாயினும் முற்றிலும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
எதையும் சாதிக்கும் துணிவு தரும் மந்திரம்

English overview:
Here we have Agathiyar mantra in Tamil to cure the disease in the human body. This mantra needs to be chanted 21 times per day to get benefits.