எதையும் சாதிக்கும் துணிவு தரும் மந்திரம்

Hanuman-1
- Advertisement -

ஒருவர் தன் வாழ்வில் மிகப்பெரும் சாதனைகள் புரிவதற்க்கு திடமான தன்னம்பிக்கையும், தைரியமாக முடிவுகள் எடுக்கும் திறனும் அவசியம்.
ஆனால் நம்மில் பலருக்கு இத்தகைய அம்சங்கள் இருப்பதில்லை. அதற்கு நாம் பிறக்கும் போதே நம்மிடம் அமைந்த குணாதிசியமும், நாம் வளர்ந்த சூழ்நிலைகளும் காரணமாக இருக்கலாம். இத்தகைய குறைகளை போக்கி நமக்கு மனோபலம் தர வல்லவர் ஸ்ரீராமரின் தூதுவரான ஆஞ்சநேயர். அவரைத் கீழே உள்ள மந்திரம் கூறி வணங்குவதன் மூலம் எதையும் சாதிக்கும் துணிவும், தன்னம்பிக்கையும் நம்மில் வளரும்.

Lord Hanuman

மந்திரம்:
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதாம் |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||

- Advertisement -

பொது பொருள்:
“ஸ்ரீஆஞ்சநேயரைத் துதிப்பதால் புத்தி, மனோபலம், தைரியம், யாருக்கும் அஞ்சா நிலை, உடல்நலம், நல்ல சிந்தனைத் திறன், சிறந்த பேச்சாற்றல் எனக்குக் கிடைக்கட்டும்” என்பது இம்மந்திரத்தின் பொதுவான பொருள்.

இதையும் படிக்கலாமே:
வருமானம் பன் மடங்கு அதிகரிக்க உதவும் சொர்ண பைரவர் மந்திரம்

இம்மந்திரத்தை தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேலையும் 9 முறை அல்லது காலையில் மட்டும் 108 முறை ஜெபம் செய்வது சிறந்தது. மேலும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் சந்நிதிக்குச் சென்று வெற்றிலை மாலையை ஆஞ்சநேயருக்குச் சாற்றி இம்மந்திரத்தை 108 முறையோ, முடிந்தால் 1008 முறையோ ஜெபித்தால் மேலே கூறப்பட்ட அனைத்துப் பலன்களையும் நிச்சயம் பெற்று இன்பமாக வாழலாம்.

- Advertisement -