எந்த பாவத்தையும் இந்த பாடல் போக்கும் என்கிறார் அகத்திய சித்தர். உங்களுக்கு வரும் துன்பங்களுக்கு என்ன காரணம் எனவும் கூறுகிறார்.

agathiyar-manthiram
- Advertisement -

மனிதனாய் பிறந்து விட்டால் பாவம் செய்தே ஆக வேண்டுமா என்ன? பாவமே செய்யாமல் எந்த மனிதனும் வாழ்வதில்லையா? எவை எல்லாம் பாவம் என்று தெரிந்தால் தானே? அவையெல்லாம் செய்யாமல் இருக்க முடியும். நமக்கு தெரிந்த பாவங்கள் பட்டியலில் இல்லாத சில பாவங்களும் செய்து கொண்டிருக்கிறோம். அப்படி என்ன பாவங்கள்? என்ற ஸ்வாரஸ்யமான தகவல்களுடன் இப்பதிவை தொடரலாம் வாருங்கள்.

agathiyar

பாவம் செய்யாத மனிதனே இல்லை என்கிறார் அகத்தியர். அகத்தியாரின் அற்புத நூல்களில் ஒன்று ‘அகத்தியர் பரிபூரணம் 1200’ ஆகும். இதில் இருக்கும் பாடல்களில் பாவம் எந்த வகையில் எல்லாம் மறைமுகமாக வருகிறது என்றும், அந்த பாவங்களின் தண்டனையில் இருந்து எப்படி தப்பிப்பது என்றும் தெளிவாக கூறியுள்ளார்.

- Advertisement -

(1)
காணவே யின்னமொரு சூட்சங்ககேளு,
கருணையுட னுலத்தோடிருக்கும் போது,
பூணவே கண்ணாரக் கண்ட பாவம்,
புத்தியுடன் மனதாரச் செய்த பாவம்,
பேணவே காதாரக் கேட்டபாவம்,
பெண்வதைகள் கோவதைகள் செய்தபாவம்,
ஊணவே பலவுயிரைக் கொன்றபாவம்,
ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேள!!

agathiyar

இந்த பாடல் 677 வது பாடலாக இந்நூலில் வருகிறது. இதில் அகத்தியர் கூறுவது என்னவென்றால், ஒருவர் எந்த பாவமும் செய்யாமல் கருணை உள்ளம் கொண்டவராக இருந்தாலும் கூட அவர்களுக்கு பாவம் வந்து சேருகிறது. அது ஏன்? ஏனென்றால் நீங்கள் ‘கண்ணால் கண்ட பாவமும்’ அதாவது, பிறர் செய்யும் பாவத்தை கண்ணால் காண்கிறீர்கள், ஆனால் அதை தடுக்கவில்லை எனில் உங்களுக்கும் பாவம் வந்து சேரும். அதே போல் ‘காதாரக் கேட்ட பாவம்’ அதாவது, கெட்டவர்கள் அவச்சொல் பேசுவதும், தீய சொற்கள் வீசுவதும், வஞ்சகம் பேசுவதும் உங்கள் காதால் கேட்டும் அதை கண்டு கொள்ளாமல் செல்வதால் பாவம் வந்து சேருமாம்.

- Advertisement -

மேலும் ‘மனதாரச் செய்த பாவம்’ அதாவது, உங்களின் இன்பத்திற்காக பிறரை துன்பப்படுத்துவது, பெண்களை கொடுமை செய்வது, ‘கோ’ என்றால் பசு, பசுக்களை வதைப்பது, ஓரறிவிலிருந்து ஆரறிவு வரை உள்ள எந்த உயிர்களையும் கொள்வது, உங்களின் முன்னோர்கள் செய்த பாவம் என்று பல கோடி பாவங்கள் உள்ளன என்று அப்பாடல் கூறுகிறது. இந்த பாவங்களில் இருந்து விடுபட என்ன செய்வது? இதையும் மற்றொரு பாடல் மூலம் சூட்சமமாக விளக்கியுள்ளார் அகத்திய சித்தர்.

agathiyar

(2)
காரப்பா கருணைவிழி மனக்கண்ணாலே,
காலறிந்து யோகமதால் அங்லங்கென்று,
நேரப்பா நிலையறிந்து நிலையில்நின்று நீ,
மகனே நூற்றெட்டு உருவேசெய்தால்,
வீரப்பா கொண்டுயிரைக் கொண்டபாவம்,
வெகுகோடி பாவமெல்லாம் விலகுந்தானே!!.

- Advertisement -

agathiyar

சுத்தபத்தமாக சுத்தமான இடத்தில் கம்பளித்துணி விரித்து கொண்டு, வட மேற்கு திசையை நோக்கியபடி அமர்ந்து, நீங்கள் இடது புறத்தில் விடும் மூச்சை இழுத்து அடக்கிக் கொண்டு மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். பின்னர் ‘ஓம் அங் லங்’ என்ற மந்திரத்தை 108 முறை நேராக நிமிர்ந்த நிலையில் உட்கார்ந்து கொண்டு உச்சரிக்க வேண்டும். இப்படி செய்வதால் உயிரை கொன்ற பாவம் முதல் கோடி பாவ வகைகளில் எந்த பாவமாக இருந்தாலும் அதனால் உண்டாகும் கர்ம பலன்கள் நீங்கும் என்று அகத்தியர் கூறியுள்ளார். தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிறோம். இனியும் எந்த பாவமும் செய்துவிடாமல் நல்லதையே செய்து நல்ல வாழ்க்கை வாழ்வோம்.

இதையும் படிக்கலாமே
வீட்டில், விளக்கு வைத்த பின்பு நகம் வெட்ட கூடாது! இந்த பழக்கத்தை மூடநம்பிக்கை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Agathiyar paripooranam. Agathiyar padalgal Tamil. Agathiyar padalgal tamil vilakkam. Agathiyar songs Tamil. Agathiyar siddhar padalgal Tamil.

- Advertisement -