வீட்டில், விளக்கு வைத்த பின்பு நகம் வெட்ட கூடாது! இந்த பழக்கத்தை மூடநம்பிக்கை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

nail-vilakku

நம்முடைய வீட்டில் விளக்கு வைத்த பின்பு சில விஷயங்களை செய்யக்கூடாது என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இந்தப் பட்டியலில் மாலை நேரத்தில் குறிப்பாக, 6 மணிக்கு பின்பு நகம் வெட்ட கூடாது என்ற கூற்றும் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. சிலபேர் சரிதான். 6 மணிக்கு பின்பு நகம் வெட்டக்கூடாது என்று ஒத்துக் கொள்வார்கள். சிலபேர் இதை மூடப்பழக்கம் என்றும் சொல்வார்கள். இதில் எந்த வரிசையில் நீங்கள் இருந்தாலும், எதனால் மாலை 6 மணிக்குப் பின்பு நகம் வெட்ட கூடாது என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த பதிவினை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

nail-cutting

ஆனால், கண்டிப்பாக இந்த பதிவின் இறுதியில், நம்முடைய முன்னோர்கள் யாரும் காரண காரியம் இல்லாமல், முட்டாள்தனமாக எதையும் சொல்லவில்லை என்பது மட்டும் நிச்சயமாக நம்மால் உணர முடியும். பின்வரும் குறிப்புகளை முழுமையாக படித்த பிறகும், நான் மாலை 6 மணிக்கு பிறகும் நகம் வெட்டுவேன் என்று விதண்டாவாதமாக பேசுபவர்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. அது அவரவர் இஷ்டம்.

முதலாவதாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக மின்சாரம் கிடையாது. இப்போது இரவில் இருக்கும் இருளை விட, அந்த காலங்களில் இருள் இன்னும் அடர்த்தியாக சூழ்ந்திருக்கும். பகல் பொழுதில் நகம்வெட்டி கீழே விழுந்தாலே, தேடுவதில் பல கடினம் இருக்கும். மாலை நேரத்தில் இருள் சூழ்ந்த பின்பு நகத்தை வெட்டும் போது கீழே விழுந்து விட்டால் அதை கட்டாயம் நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அதுவும் இல்லாமல் நம்முடைய உடலில் மிகவும் கடினமான ஒரு பாகம் என்றால் அது நகம். இது உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய ஒன்று. பொதுவாக நம்முடைய உடலில், நகத்தின் மூலமாக நோய்த்தொற்று உடலுக்குள் செல்லும் என்பதும் உண்மையான ஒன்று. இதனால்தான் நக இடுக்ககளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்கள். இவ்வளவு கேடுகளை விளைவிக்கும் அந்த நகத்தை, நாம் வெட்டும்போது அது தவரி நாம் சாப்பிடும் சாப்பாட்டில் விழுந்து விட்டால், அதை நாம் உண்டு விட்டால் நம் வயிற்றுக்கு தான் கேடு உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

nail-cutting

இந்த காலத்தில் இருப்பது போன்ற நக வெட்டிகள் எல்லாம், அந்த காலத்தில் இல்லை. கத்தியினாலோ அல்லது பிளேடினாலோ நகத்தை வெட்டுவார்கள். கண்ணுக்குத் தெரியாமல் விரலை வெட்டிக் கொண்டால், தேவையில்லாத காயம் படும் என்பதும் ஒரு காரணம். காயம் பட்டுவிட்டால் மருத்துவரிடம் உடனே செல்ல கூடிய சூழ்நிலையும் அன்று இல்லை என்பதுதான் வருத்தப்படக்கூடிய விஷயம்.

- Advertisement -

அந்த காலகட்டத்தில் பில்லி சூனியத்திற்கு எல்லாம் முதலிடம். ஒருவரை பிடிக்கவில்லை என்று நினைத்துவிட்டால் சுலபமாக இது போன்ற காரியங்களில் ஈடுபடுவார்கள். சூனியம் வைப்பதற்கு, கெடுதல் செய்வதற்கு அவர்களுடைய நகம் கிடைத்தால் கூட போதும். இப்படியிருக்க, மாலைநேரத்தில் வெட்டும் நகம் கீழே விழுந்து அது, உங்களுக்கு பிடிக்காதவர் யார் கையில் கிடைத்தாலும் அது பிரச்சினையை தேடித் தந்து விடும். சில சமயங்களில் கீழே விழும் உங்கள் நகங்களில் கெட்ட சக்தி விரைவாக, வந்து புகுந்து கொள்ளும் என்பதும் ஒரு நம்பிக்கையாக இருந்து வந்தது.

mahalakshmi

அதுமட்டுமில்லாமல் மாலையில் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய வருவாள் என்பது ஐதீகம். இப்படி இருக்கும் சமயத்தில், நம் வீட்டில் இருக்கும் கழிவுகளை வெளியில் அப்புறப்படுத்த கூடாது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.

இவையெல்லாம் தெரிந்தும், அந்த காலம் போல் இந்த காலம் இல்லை. எல்லாம் மாறிவிட்டது! என்று சொல்லி மாலை நேரத்தில் நகத்தை வெட்டாதீங்க! அது அவ்வளவு நல்லதல்ல. தரித்திரம் வரும் என்று தெரிந்தும் ஒரு செயலை செய்பவர்கள் முட்டாள்கள் பட்டியில் முதல் இடம் வகிப்பார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லிய நம் முன்னோர்கள் எந்த காலத்திலும் முட்டாள்கள் பட்டியலில் சேர்க்கபட மாட்டார்கள் என்பதும் நிதர்சனமான உண்மை என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவை முடிவு செய்துகொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
—-

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Cutting nails at night hindu. When to cut nails astrology. Nail cut in night. Cutting nails at night indian superstition. Cutting nails superstition.