விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற உதவும் அகத்தியர் மந்திரம்

agathiyar1
- Advertisement -

சித்தர்களுக்கெல்லாம் முதன்மையானவரான அகத்தியர், சப்த ரிஷிகளுள் ஒருவராக அறியப்படுகிறார். இராமாயணத்தில் ராமன் வனவாசம் சென்றபோது அகத்தியரை சந்தித்து அவரிடம் இருந்து மந்திர பலமிக்க ஆயுதங்கள் சிலவற்றை வரமாக பெற்றார் என்கிறது இராமாயண காப்பியம். கடவுளுக்கு நிகராக அகத்தியரை பலர் வணங்குவதும் உண்டு. பல சிறப்புக்கள் மிக்க அகத்தியரை வழிபடும் முறை பற்றியும் அவருக்கான மந்திரம் என்ன என்பது பற்றியும் பார்ப்போம் வாருங்கள்.

agathiyar

அகத்தியர் மந்திரம்:

ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே
சித்த வேட்கை கொண்ட சிவ யோகியே
கடலுண்ட காருண்யரே
கும்பமுனி குருவே சரணம் சரணம்

- Advertisement -

ஒரு சிறு பலகையை எடுத்துக்கொண்டு அதை சுத்தம் செய்து மஞ்சள் பூசி அதன் மேல் ஒரு கோலமிட வேண்டும். கோலமிட்டு பின் அகத்தியர் படத்தை அதன் மேல் வைக்க வேண்டும். பின் மஞ்சள் குங்குமமிட்ட குத்துவிளக்கில் இருமுக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பின் ஒரு செம்பில்(செம்பால் செய்யப்பட்டது) சுத்தமான நீரை நிரப்பி அதை அகத்தியர் படத்தின் முன்பு வைக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், இளநீர், பழங்கள், பஞ்சாமிர்தம் போன்றவற்றில் உங்களால் முடிந்த ஏதோ ஒன்றை நிவேதனம் செய்யவும். அதன் பிறகு மேலே உள்ள மந்திரத்தை அமைதியாக ஜபிக்க வேண்டும்.

agathiyar

அதன் பிறகு கீழே உள்ள 16 போற்றிகளை ஜபிப்பது மேலும் சிறப்பு தரும்.
அகத்தியர் போற்றி :
தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
சித்த வைத்திய சிகரமே போற்றி!
சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
இசைஞான ஜோதியே போற்றி!
உலோப முத்திரையின் பதியே போற்றி!
காவேரி தந்த கருணையே போற்றி!
அகத்தியம் தந்த அருளே போற்றி!
இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
இன்னல்கள் போக்கி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!

- Advertisement -

மேலே உள்ள மந்திரத்தையும் போற்றியையையும் மனப்பாடம் செய்ய இயலாதோர் “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கலாம்.

agathiyar

இதையும் படிக்கலாமே:
ராகு தோஷம் மற்றும் நாகதோஷம் போக்கும் நாக ராஜா காயத்ரி மந்திரம்

மேலே கூறிய முறைகள் அனைத்தையும் புதன் கிழமைகளில் செய்வது சிறப்பு. இதன் மூலம் நமது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அதோடு புதன் பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும், உடம்பில் உள்ள நோய்கள் பறந்தோடும், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும், புகழ் கிடைக்கும்.

- Advertisement -