ராகு தோஷம் மற்றும் நாகதோஷம் போக்கும் நாக ராஜா காயத்ரி மந்திரம்

naga-dhosam

ஒருவருடைய ஜாதகத்தில் நாக தோஷம் அல்லது ராகு தோஷம் இருக்க பற்பல காரணங்கள் உள்ளன. இந்த தோஷம் காரணமாக பலருக்கு திருமண தடை ஏற்படும், திருமணம் ஆன பிறகும் குழந்தை பாக்கியம் பெறுவதில் தடை ஏற்படும், செய்யும் தொழிலில் திடீர் நஷ்டம் ஏற்படும். சிலருக்கு தோல் சம்மந்தமான வியாதிகளும் வரக்கூடும். ஆகையால் ராகு தோஷத்தில் இருந்து விடுபடுவது மிக அவசியம். தோஷ நிவர்த்திக்கு நாக ராஜா காயத்ரி மந்திரம் ஒரு சிறந்த தீர்வாகும். இதோ அந்த மந்திரம்

ragu ketu

நாக ராஜா காயத்ரி மந்திரம்:

ஓம் சர்பராஜாய வித்மஹே
நாகராஜாய தீமஹி
தன்னோ னந்தஹ் ப்ரசோதயாத்

பொது பொருள்:
சர்பங்களுக்கெல்லாம் தலைவனான நாக ராஜனே உங்களை வணங்குகிறான். நித்தமும் உங்களை நினைக்கும் இந்த அடியேனுக்கு ஆசி வழங்கி அருள்புரிய வேண்டுகிறேன்.

இதையும் படிக்கலாமே:
சொத்து சேர்க்க, கெளரவம் பெறுக உதவும் குலசுந்தரி தேவி காயத்ரி மந்திரம்

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக நாகராஜனின் அருளால் தோஷங்கள் விலகும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள், குழந்தை செல்வம் இல்லாமல் தவிப்போர் இந்த மந்திரத்தை ஜபித்து பயன் பெறலாம்.