மே மாதம் என்றதும் நம் அனைவருக்கும் சூரிய பகவானின் தாக்கம் தான் ஞாபகத்திற்கு வரும். மிகவும் உக்கிரமாக இருக்கக்கூடிய சூரிய பகவான் 25 நாட்கள் அதி தீவிரமான உத்திரநிலையில் இருப்பார். அதைத்தான் அக்னி நட்சத்திரம் என்று கூறுவோம். அந்த நாட்களில் வெயிலின் தாக்கம் என்பது மிகவும் அதிகமாகவே இருக்கும். சில ராசிக்காரர்களுக்கு இது தோஷமாக கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அப்படிப்பட்ட அக்னி நட்சத்திர தோஷம் நீங்குவதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அக்னி நட்சத்திர தோஷம் நீங்க
ஒவ்வொரு ராசியிலும் சூரிய பகவான் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை பொறுத்து அவர்களுடைய பலன்கள் என்பது மாறுபடும். அந்த வகையில் மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் பொழுது ஒரு சில ராசிக்காரர்களுக்கு தோஷங்கள் ஏற்படும். ஏன் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் பொழுது கோவில்களில் இருக்கக்கூடிய தெய்வத்திற்கு விசேஷமான அபிஷேக ஆராதனைகள் செய்யும் வழக்கமும் வைத்திருப்பார்கள். அப்படிப்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கு என்று சில குறிப்பிட்ட பொருட்கள் இருக்கின்றன. அந்த பொருட்களுள் எதை நாம் நம்முடைய வீட்டில் வைத்தால் இந்த தோஷம் நீங்கும் என்று தெரிந்து கொள்வோம்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடிய நாட்களில் வீட்டு நிலை வாசலில் பலரும் வெயிலினால் ஏற்படக்கூடிய தொற்று நோய்கள் வராமல் இருப்பதற்காக வேப்பிலையை சொருகி வைப்பார்கள். இது ஒரு வகையான மருத்துவ குணம் மிகுந்த செயலாகவே கருதப்பட்டாலும் இதை ஒரு பரிகாரமாகவே மேற்கொள்கிறார்கள். இதோடு சேர்த்து உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய சில விஷயங்களையும் நாம் மேற்கொள்வதன் மூலம் அக்னி நட்சத்திரத்தால் ஏற்படக்கூடிய நோய்களின் தாக்கம் என்பது குறையும். அதில் மிகவும் முக்கியமாக கருதப்படக் கூடியது தான் வெட்டிவேர். பொதுவாக வெட்டிவேர் என்பது குளிர்ச்சித் தன்மை உடையதாக திகழ்கிறது.
இந்த வெட்டிவேரை நம்முடைய வீட்டு பூஜை அறையில் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் பொழுது வாங்கி வந்து வைத்து அக்னி நட்சத்திரம் நிறைவடைந்ததும் அதை ஓடுகின்ற நீரில் போட வேண்டும். மேலும் இதிலிருந்து வரக்கூடிய வாசனை தெய்வீக சக்தியை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. தெய்வத்திற்கு குளிர்ச்சியையும் தெய்வீக சக்தியையும் அதிகரிக்க கூடிய இந்த வெட்டிவேரை நாம் முறையாக பயன்படுத்தும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் பல நன்மைகள் உண்டாகும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு அக்னி நட்சத்திரத்தால் எந்தவித தோஷமும் ஏற்படாது. அதேபோல் நாம் அனுதினமும் குளிக்கும் பொழுது குளிக்கும் தண்ணீரில் வெட்டிவேரை சிறிது நேரம் போட்டு வைத்து பிறகு குளிப்பதன் மூலம் நம்முடைய உடல் குளிர்ச்சி அடைந்து வெப்பத்தால் ஏற்படக்கூடிய நோய்களின் தாக்கம் என்பது குறைய ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே:சுபிக்ஷம் ஏற்பட அக்னி நட்சத்திர நாளில் செய்ய வேண்டியவை
உஷ்ணம் அதிகமாக இருக்கக்கூடிய அக்னி நட்சத்திர நாளில் குளிர்ச்சியை தரக்கூடிய இந்த ஒரு பொருளை வீட்டில் வைப்பதன் மூலம் நம்முடைய வீட்டில் அக்னி நட்சத்திரத்தால் எந்தவித தோஷமும் ஏற்படாது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.