2022 அக்னி நட்சத்திர காலத்தில் மறந்தும் செய்யக் கூடாத ஒரு விஷயம்! மறக்காமல் செய்ய வேண்டிய விஷயம் ஒன்று என்ன?

sooriyan-sun
- Advertisement -

பொதுவாகவே அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆகிவிட்டாலே கோடை வெயில் அதிகரிக்கத் துவங்கி விடும். இருபத்தியோரு நாட்கள் வரை பயணிக்கும் இந்த அக்னி நட்சத்திரம் இவ்வருடம் சற்று அதிகமாகவே இருக்கிறது. கோடை வெயிலின் தாக்கம் நம்மை பாதிக்காமல் இருக்க கண்டிப்பாக உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. அது மட்டுமல்லாமல் அக்னி நட்சத்திர காலத்தில் மறந்தும் செய்யக் கூடாத விஷயம் என்ன? மறக்காமல் செய்ய வேண்டிய ஒரு விஷயம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் அலச இருக்கிறோம்.

கிராம புறங்களில் ‘சித்திரை வெயில் பல்லை இளிக்கிறது’ என்று சொல்லுவார்கள். சித்திரை ஆரம்பம் ஆகிவிட்டாலே வெயில் படிப்படியாக உயரத் தொடங்கும். அதிலும் அக்னி நட்சத்திர காலம் நம்மை வியர்வை குளியல் செய்து விடும். இந்த சூரியனுடைய வெப்பத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஏராளம். சரும நோய்கள், பூஞ்சை தொற்று, நீர் கடுப்பு, சுவாச பிரச்சனைகள் வரக்கூடும். இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நம்மை நாம் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அக்னி நட்சத்திர காலத்தில் பொதுவாக எந்த ஒரு பயணம் செய்தாலும் அது தோல்வியில் முடியும் என்று கூறுவார்கள். தொலை தூர பயணங்களையும், அலைச்சலை கொடுக்கக்கூடிய பயணங்களையும் கூடுமானவரை நீங்கள் ஒத்தி வைப்பது மிகவும் நல்லது. அக்னி நட்சத்திர காலத்தில் கொடுத்த பணம் திரும்ப வராது என்றும் கூறுவார்கள். அக்னியில் ஒருவருக்கு கடன் கொடுப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அக்னி நட்சத்திரத்தில் வரக்கூடிய நோய்கள் அவ்வளவு எளிதில் குணமடையாது என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. எனவே நோய் தாக்குதலுக்கு ஆளாகாமல் நம்மை நாம் பத்திரப்படுத்தி, பாதுகாத்து கொள்ள வேண்டும்.

மற்ற காலத்தை விட அக்னி நட்சத்திர காலத்தில் வெளியில் அதிகம் அலைவதைத் தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் பயணம் செய்யலாம். மற்ற நேரங்களில் வீட்டில் பாதுகாப்பான முறையில் இருப்பது நல்லது. வெப்ப அலைகள் அதிகமாக இருப்பதால் சுபகாரியங்களை அக்னி நட்சத்திர காலத்தில் தவிர்ப்பது வழக்கம். சுப காரியங்களை செய்யக் கூடாது. அது போல அஸ்திவாரம் அமைப்பது, வீடு கட்டுவது போன்ற விஷயங்களையும் கண்டிப்பாக அக்னியில் தவிர்க்க வேண்டும். அதே போல அக்னி நட்சத்திர காலத்தில் புதிதாக விதைகளை விதைக்க கூடாது. கோடை வெயில் அதிகம் இருப்பதால் புதிய விதைகள் நல்ல வளர்ச்சியை எட்டாது. எனவே விதைகளை விதைப்பது சற்று ஒத்தி வைக்க வேண்டும்.

- Advertisement -

அக்னியில் இருக்கின்ற மரத்தை வெட்டுபவர்களுக்கு தோஷம் ஏற்படும். எனவே அக்னி நட்சத்திர காலத்தில் மரத்தை வெட்டுவது அல்லது மரத்தை நடுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். அக்னி நட்சத்திரத்தில் தண்ணீர் பிரச்சனை தாண்டவமாடும், பஞ்சம் ஏற்படும். எனவே தண்ணீர் பந்தல் அமைப்பது, நீர் தானம், நீர்மோர் தானம் செய்வது போன்றவை புண்ணியத்தை சேர்க்கும். எனவே தண்ணீர் பந்தல் அமைக்க முடியா விட்டாலும், உங்கள் வீட்டில் மொட்டை மாடி அல்லது வெளிப்புற பகுதிகளில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி வையுங்கள், மற்ற ஜீவராசிகள் தாகம் தீர்த்துக் கொள்ளும். முடிந்தால் பானைத் தண்ணீரை வீட்டு வாசலில் வைத்தால் வழிப்போக்கர்கள் தாகத்திற்கு தண்ணீர் அருந்தி விட்டு செல்வார்கள். இதன் மூலம் உங்களுக்கு நீங்கள் செய்த புண்ணியத்தின் பலன் இரட்டிப்பாகும் என்கிறது ஆன்மீகம்.

குடை தானம், விசிறி தானம், செருப்பு தானம் போன்ற தானங்கள் அக்னி நட்சத்திர காலத்தில் செய்ய வேண்டிய முக்கிய தானங்களாகும். அது மட்டுமல்லாமல் குளிர்ச்சியான தயிர்சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றையும் கோவில்களில் தானம் கொடுப்பது புண்ணியத்தை சேர்க்கும். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது ஏழேழு ஜென்மங்களுக்கும் புண்ணியத்தை சேர்க்கும் நல்ல விஷயங்கள் ஆகும். எனவே அக்னி நட்சத்திர காலத்தில் செய்ய வேண்டியதை செய்தும், செய்யக்கூடாதவையை தவிர்த்தும் இருப்பது உசிதமானது.

- Advertisement -