முடிவில்லாமல் நம்முடைய வாழ்க்கையை தொடர்ந்து வரும் கடனுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாளை ஐப்பசி மாதம் முதல் தேதி. வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து பிறக்கப் போகின்றது. நாளைதினம் நம்முடைய வீட்டில் மகாலட்சுமியை நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொண்டால், அடுத்து வரக்கூடிய ஒரு மாதத்திற்குள் அதாவது ஐப்பசி மாதம் முடிவதற்குள் உங்களுடைய கடன் பிரச்சனையிலிருந்து விடுபடக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
லட்சக்கணக்கில் பணம் கடனாக வாங்கி வைத்துள்ளீர்கள். அதையெல்லாம் ஒரே மாதத்தில் திருப்பித் தர முடியுமா என்ற கேள்விகளோ சந்தேகங்களோ எழ வேண்டாம். உங்களுடைய தகுதிக்கு மீறி கடன் வாங்கி இருந்தால் அதை அடைப்பதற்கு கொஞ்சம் காலம் நேரம் அதிகமாக தான் எடுக்கும். உங்களுடைய தகுதிக்கு உட்பட்ட கடனை நீங்கள் வாங்கி இருந்தால் அதை சுலபமாக திருப்பித் தர வழிகளை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டித் தரும்.
ஐப்பசி முதல் நாள் மகாலட்சுமி வழிபாடு
நாளைய தினம் காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். இன்று கொஞ்சமாக மருதாணிப் பூக்களை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இது கிராமப்புறங்களில் சுலபமாக கிடைக்கும். உங்களுக்கு பிரஷ்ஷாக மருதாணி பூ கிடைக்கவில்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் காய்ந்த மருதாணி பூக்கள் கிடைக்கும். அதையும் வாங்கி பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம். அதுவும் கிடைக்கவில்லை என்பவர்கள் மருதாணி இலையை கொண்டும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
அழகாக செடியிலிருந்து பறித்த மருதாணி பூ கிடைத்தால் நாளைய தினம் அதை மகாலட்சுமிக்கு சூட்டினால் மிக மிக நல்லது. உங்களுடைய செல்வ கடாட்சமானது உயரும். ஒரு தாம்பூல தட்டில், ஒரு மண் அகல் விளக்கு வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். இந்த விளக்கை சுற்றி மருதாணி பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.
புதுசாக பறித்த மருதாணி பூ கிடைக்காதவர்கள் காய்ந்த மருதாணி பூக்களை போடுங்கள். அதுவும் கிடைக்காதவர்கள் மருதாணி இலையை போட்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். மகாலட்சுமிக்கு டைமண்ட் கற்கண்டுகளை நெய்வேத்தியமாக வைக்கவும். ‘ஓம் ஸ்ரீம் மகாலட்சுமி தாயே போற்றி போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி மருதாணி இலைகளால் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்து நாளைய தினம் வழிபாட்டை மேற்கொண்டால், உங்களுடைய மொத்த கடனும் சீக்கிரத்தில் அடையும் என்பது நம்பிக்கை.
இந்த வழிபாட்டை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் செய்ய வேண்டும் தவறவிட்டவர்கள் மாலை 8:00 மணியில் இருந்து 9:00 மணிக்குள் செய்ய வேண்டும். மேலே சொன்னது போல தான் தகுதிக்கு மீறி கடன் வாங்கி இருந்தீர்கள் என்றால் அதை அடக்க சில சிரமங்கள் வரும். பரவாயில்லை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்.
இதையும் படிக்கலாமே: பௌர்ணமி சிவபெருமான் மந்திரம்
வாரத்தில் ஒரு நாளோ, இரண்டு நாளோ மகாலட்சுமிக்கு இப்படி மருதாணி இலைகளை பூக்களை போட்டு அர்ச்சித்து வழிபாடு செய்து வர சீக்கிரம் உங்களுடைய கடன் பிரச்சனை தீர்ந்துவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் செல்லும் இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறவும்.