ஐப்பசி மாதம் துலா ஸ்நானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள். ஐப்பசி மாதம் முடிவதற்குள் ஒரு முறையாவது துலா ஸ்நானம் செய்திட வேண்டும்

sivan
- Advertisement -

உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் அனைவருமே ஒவ்வொரு விதமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவரைப் போன்று மற்றொருவர் வாழ்க்கை அமைவதில்லை. அவரவர் வாழ்க்கைக்கு ஏற்ப ஒரு சில குறைபாடுகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அவ்வாறு பணம் மட்டும் எனக்கு இருந்தால் போதும் எனது வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்னும் சிலரும், எனது மனைவிக்கு நல்ல குணம் அமைந்திருந்தால் எனது வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும் என்னும் கணவரும், எனது கணவர் என் மீது அன்பாக இருந்தால் எனது வாழ்க்கை சுகமாக இருக்கும் என்று என்னும் மனைவியும் இவ்வாறு பலரும் தனக்கான பல விஷயங்களை வாழ்க்கையில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு ஐப்பசி மாதம் துலா ஸ்நானம் செய்வதன் மூலம் நமது வாழ்க்கைக்குத் தேவையான பணம் குணம் கல்வி செல்வாக்கு போன்ற அனைத்தும் கிடைத்துவிடும் என்பது நமது முன்னோர்கள் பின்பற்றி வந்த ஐதீகமாகும். வாருங்கள் துலா ஸ்நானம் என்றால் என்ன? அதனை எவ்வாறு செய்ய வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Kanavan manaivi

ஐப்பசி மாதம்:
புரட்டாசி மாதம் எவ்வாறு பெருமாளுக்கு உரிய மாதமாக இருந்ததோ, அது போல ஐப்பசி மாதம் சிவபெருமானுக்கு உரிய மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் சிவபெருமானுக்கு பூஜைசெய்து வழிபடுவதன் மூலம் நமது வாழ்க்கைக்கு பல விதமான பலன்கள் உண்டாகிறது. ஐப்பசி மாதம் முதல் நாளான இன்று சிவபெருமானை பூஜித்து சிவபுராணத்தை வீட்டில் ஒலிக்க செய்வதன் மூலம் சிறந்த பலனை பெற முடியும்.

- Advertisement -

ஐப்பசி மாதம் என்பது பண்டிகை காலமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் பலவிதமான பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. அவ்வாறு நவராத்திரி முடிந்த நிலையில் அடுத்ததாக தீபாவளி, அஷ்டமி பெருநாள் கொண்டாடப்பட இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இது மிகவும் சிறப்பு வாய்ந்த அபிஷேகமாகும் அவ்வாறு இந்த ஐப்பசி மாதத்தில் சிவபெருமானை தரிசித்து வருவதன் மூலம் பசிப்பிணி நீங்கும் என்பதும் ஐதீகமாகும். அதுமட்டுமல்லாமல் இந்த அன்ன அபிஷேகத்திற்கு நம்மால் இயன்ற பொருளை தானமாக கொடுப்பதன் மூலம் நமது வீட்டில் உணவிற்கு பஞ்சம் ஏற்படாது.

diwali

சித்திரை மாதத்தில் உச்சமடையும் சூரியன் இந்த ஐப்பசி மாதத்தில் தான் நீட்சம் அடைகிறது. எனவே வடகிழக்கு பருவமழை தொடங்க கூடிய மாதமாக ஐப்பசி மாதம் இருக்கிறது. ஐப்பசி மாதத்தின் ஆரம்பத்தில் நீர் நிலைகளில் நீர் தட்டுப்பாடு ஏற்படுக்ன்ற சூழலும் ஏற்படுகின்ற வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நீர் தட்டுப்பாடு ஏற்படும் பொழுது காய்கறிகளின் விலை உயர்வும் அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஐப்பசி மாதத்தில் அனைத்து புண்ணிய நதிகளும் காவிரி நதியில் சங்கமிப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இவ்வாறு புண்ணிய நதிகள் சங்கமிக்கின்றன காவிரி ஆற்றில் இந்த ஐப்பசி மாதத்தில் ஏதேனும் ஒரு நாள் நிச்சயம் ஸ்நானம் செய்ய வேண்டும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஐப்பசி மாதம் தொடக்கம் முதல் முடிவு வரை ஏதேனும் ஒரு நாள் ஸ்ரீரங்கம் சென்று காவிரிஆறற்றில் ஸ்நானம் செய்து பெருமாளை தரிசித்து வருவது சிறந்த பலனை கொடுக்கிறது. இவ்வாறு புண்ணிய நதிகள் சங்கமிக்கின்றன ஐப்பசி மாதத்தில் காவிரியில் ஸ்நானம்செய்வததை தான் துலா ஸ்நானம் என்கின்றோம்.

lake

ஐப்பசி மாதத்தில் இவ்வாறு துலாஸ்நானம் செய்வதினால் கல்வி, செல்வம், அழகு, ஆரோக்கியம், வலிமை, சந்தான பாக்கியம் போன்ற அனைத்து விதமான வரங்களும் நமக்கு கிடைத்து விடும் என்பது நமது முன்னோர்கள் பின்பற்றி வந்த சம்பிரதாயங்களில் ஒன்றாகும். எனவே ஐப்பசி மாதத்தில்ஏததாவது ஒரு நாள் காவிரி ஆற்றில் துலா ஸ்நானம் செய்வது மிகவும் முக்கியமான ஒரு விஷயம் ஆகும்.

- Advertisement -