ஐப்பசி மாத சிறப்பு வழிபாடு

தமிழ் மாதங்களில் ஏழாவதாக வருவது ஐப்பசி மாதம் ஆகும். பருவகாலங்களில் முற்பனிகாலம் எனப்படும் பனிப்பொழிவு தொடங்கும் காலமாக இந்த ஐப்பசி மாதம் இருக்கிறது. பின்வரப்போகும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த தினங்கள், மாதங்களுக்கு தொடக்கமாக இருக்கும் ஐப்பசி மாதத்தில் புண்ணிய நாதி நீராடல், வழிபாடுகள் பல ஆலயங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படி இம்மாதத்தில் காவிரி நதியில் நீராடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

Srirangam Ranganathaswamy temple

நமது தமிழ் வருட கணக்கின் படி சூரியன் 12 ராசிகளில் ஏழாவது ராசியான “துலாம்” ராசியில் வருகின்ற காலம் தான் ஐப்பசி மாதம் ஆகும். மற்ற மாதங்களை போலவே இந்த ஐப்பசி மாதமும் ஆன்மீக சிறப்புக்கள் கொண்ட மாதமாகும். இந்த ஐப்பசி மாதத்தில் தான் நமது வாழ்வில் இருளை நீக்கி, வெளிச்சத்தை ஏற்படுத்தும் தீபாவளி திருநாள் வருகிறது. ஐப்பசி பௌர்ணமி தினத்தில் சிவபெருமான் ஆலயங்களில் செய்யப்படும் அன்னாபிஷேகத்தை தரிசிப்பது மிகுந்த நன்மைகளை ஏற்படுத்தும்.

புனிதமான ஐப்பசி மாதத்தின் 30 நாட்களும், அனைத்து புனித நதிகளும், தமிழகத்தில் ஓடும் தெய்வீக நதியான காவிரி நதியில் சங்கமிப்பதாக ஐதீகம். ஜோதிட ரீதியாக பார்க்கும் போது துலாம் ராசி நவகிரகங்களில் “சுக்கிரன்” பகவானின் அதிகத்திற்குரிய ராசியாகும். காவிரி நதிக்கு நடுவே இருக்கும் ஸ்ரீரங்கம் எனப்படும் திருவரங்கத்தில் வீற்றிருக்கும் “ஸ்ரீரங்கநாதர்” சுக்கிர பகவானின் அம்சம் நிறைந்தவராவார்.

இந்த ஐப்பசி மாதத்தில், ஏதாவது ஒரு தினத்தில் ஸ்ரீரங்கம் சென்று, காவிரி நதியில் நீராடி பின்பு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று, ஸ்ரீரங்கநாதர் மற்றும் ரங்கநாயகி, ஆண்டாள் தாயார்களையும் வழிபடுவதால் சகல பாவங்களும் நீங்கும். சுக்கிர பகவானின் தோஷங்கள் நீங்கும். கடன் பிரச்சனைகள் நீங்கி பொருளாதார நிலை மேம்படும். திருமணமாகாதவர்கள் மனதிற்கினிய வாழ்க்கை துணை கிடைக்க பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
அதிர்ஷ்டங்களை கொடுக்கும் விண்ட் சைம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Aippasi matha sirappu in Tamil.