- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீட்டில் ஐஸ்வர்யம் சேர்க்கும் பால்

வீட்டில் ஐஸ்வர்யம் சேர்க்கும் பால்

- Advertisement -

வீட்டில் வறுமை இல்லாமல் அஷ்ட ஐஸ்வர்யங்களும் நிறைந்து இருக்க அனைவருக்கும் ஆசை தான், ஆனால் எல்லோருக்கும் அப்படியான வாழ்க்கை முறை அமைந்து விடுகிறதா என்ன? நம் வாழ்க்கை முறையில் சில சூட்சமமான உண்மைகளை தெரிந்து வைத்துக் கொண்டால் நம் வீட்டிலும் செல்வம் கொழிக்க ஆரம்பிக்கும். மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் பாலை தினந்தோறும் நாம் எப்படி கையாண்டால் ஐஸ்வரியம் வீட்டில் நிலைத்து நிற்கும்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறியவிருக்கிறோம்.

காலையில் எழுந்ததும் முதலில் நாம் பயன்படுத்தும் ஒரு பொருள் பால்! பசுவில் இருந்து கிடைக்கக் கூடிய இந்த பாலை தான் மனிதன் தன் வாழ்நாளில் அதிகம் எடுத்துக் கொள்ளும் உணவாகவும் இருக்கிறது. காலையில் எழுந்ததும் பால் பாக்கெட்டை பிரித்தவுடன் அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தொட்டு வணங்கி அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். காலையிலேயே பாலை தொட்டு வணங்குவதால், அந்த நாள் முழுவதும் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரும் என்பது சூட்சம குறிப்பு.

- Advertisement -

பால் எப்போதும் வற்றாத ஜீவநதி போல, வீட்டில் குறைவில்லாமல் இருக்க வேண்டும். பால் பிடிக்கவில்லை என்று சொல்பவர்களிடத்தில் பணமும் தங்குவதில்லை. பால் மகாலட்சுமியின் ஸ்வரூபம். புது வீட்டிற்கு போகும் பொழுது பாலை காய்ச்சி பொங்க விடுவது வழக்கம். முதன் முதலில் பால் காய்ச்சி அந்த வீட்டில் ஆரம்பிக்கும் பொழுது தான் சுபகாரியங்கள் தொடர்கிறது. கெட்ட விஷயங்கள் எல்லாம் வெளியேறி போகும்.

அப்படிப்பட்ட இந்த பாலை தினமும் தொட்டு வணங்கி காய்ச்சிய பிறகு ஒரு டம்ளர் முதல் பாலை இனிப்பு எதுவும் சேர்க்காமல் பூஜை அறையில் வைத்து விடுங்கள். இதையெல்லாம் செய்வதற்கு நாம் குளிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பாலை இறைவனுக்கு சமர்ப்பித்து விட்டு, நீங்கள் பயன்படுத்த ஆரம்பித்தால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் உங்களை தேடி வரும்.

- Advertisement -

வீட்டில் பால் காய்ச்சும் பொழுது பாலை அதிகம் சுண்ட விடக் கூடாது. பால் திரிந்து போகக் கூடாது. பால் சுண்டினால் வீட்டில் இருக்கும் பண வளமும் சுண்டும். ஐஸ்வர்யங்கள் வெளியேறிவிடும். பால் காய்ச்சும் பாத்திரம் அடிப்பிடிக்கக் கூடாது. பால் அல்லது பால் பாத்திரம் தீயவே கூடாது. இது எதிர்மறை சக்திகளை வீட்டிற்கு வரவழைக்கும். காலையில் காய்ச்சும் பால் பொங்கி வழிந்து நெருப்பில் படக் கூடாது. நெருப்பில் படாமல் பால் சரியாக காய்ச்சினால் ஐஸ்வரியம் வரும். காய்ச்சும் பொழுது பாலில் நான்கைந்து பச்சரிசியை போட்டு காய்ச்ச வேண்டும். அப்படி பாலும், அரிசியும் சேர்ந்து கொதிக்கும் பொழுது அங்கு ஐஸ்வர்யத்திற்கு குறைவிருக்காது என்பது சூட்சம குறிப்பாகும்.

இதையும் படிக்கலாமே:
19-11-2024- செவ்வாய்க்கிழமை சங்கடஹர சதுர்த்தி பரிகாரம்

பொழுது சாய்ந்த பிறகு பாலை யாருக்கும் தானம் கொடுக்கக் கூடாது. இனிப்பு சேர்க்காமல் காலையில் பூஜைக்கு வைத்த பாலை குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர்கள் பகிர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். பூஜையில் வைத்த இந்த முதல் பாலை குடிக்கும் பொழுது மகாலட்சுமியின் சக்தி உங்களுக்கு கிடைக்கும். இதனால் ஐஸ்வர்யம் கொழிக்கும் அளவிற்கு உங்களால் சம்பாதிக்க முடியும். பாலும், பால் சார்ந்த பொருட்களும் உணவில் அதிகம் இடம் பிடித்தால் அந்த வீட்டில் ஐஸ்வரியம் குறையாது. உங்கள் ஆரோக்கியத்திற்கு தகுந்தவாறு பால் சார்ந்த பொருட்களை காலையில் முதல் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள், ஐஸ்வர்யம் சேரும்.

சற்று முன்