உங்கள் தலையெழுத்தை மாற்றி எழுதக்கூடிய சக்தி இந்த 1 தீபத்திற்கு உண்டு! பூஜை அறையில் இந்த தீபம் எரியும் வரை உங்கள் வாழ்க்கை பிரகாசமாகத் தான் இருக்கும்.

deepam4

நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்த காலங்களிலிருந்து, இன்றைய காலம் வரை தீபமேற்றி வழிபாடு செய்யும் பழக்க வழக்கங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கடைபிடித்து வருகின்றார்கள். தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதில் பல வகைகள் உள்ளது. எல்லா தீப வழிபாட்டிற்கும் முதன்மையாக இருப்பது அந்த அக்னிதேவன் தான். நம்மிடம் இருக்கும் கஷ்டங்களை விளக்கக் கூடிய சக்தி இந்த விளக்கிற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. தீபவழிபாட்டில் முதன்மையாக சொல்லப்பட்டிருக்கும் சக்தி வாய்ந்த அகண்ட தீப வழிபாட்டைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தீபத்தினை நந்தா தீபம், ஜோதி தீபம், அணையா தீபம் என்று கூட  சொல்லுவார்கள்.

vilakku

சிலர் இந்த அகண்ட தீபத்தினை நவராத்திரி கொலு சமயங்களில் தொடர்ந்து 9 நாட்கள் அணையா தீபமாக தங்களுடைய வீட்டில் ஏற்றி வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்த அகண்ட தீப வழிபாட்டினை நவராத்திரி கொலு சமயத்தில் மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

சாதாரணமாக ஒரு வீட்டில் அணையா தீபம் எரிந்து கொண்டே இருந்தால் அந்த வீட்டில் கெட்ட சக்தி நெருங்குவதற்கு ஒரு துளி அளவும் வாய்ப்பு கிடையாது. நல்ல தேவதைகள் வீடு தேடி வர, இந்த அணையா தீபம் துணை நிற்கும். சரி இந்த அகண்ட தீபத்தினை நம்முடைய வீட்டில் எப்படி ஏற்றுவது என்பதை பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வோமா?

vilakku1

அகண்ட தீபம், ஜோதி தீபம், நந்தா தீபம் என்று கேட்டாலே கொஞ்சம் பெரிய அளவில் விளக்குகள் உங்களுக்கு கடைகளில் கிடைக்கும். வீட்டில் அணையா தீபம் ஏற்றிவைக்க வேண்டும் என்றால், அதில் திரி நடுவில் எரிய வேண்டும். அதாவது ஜோதி வடிவத்தில்! சாதாரண விளக்கில் திரியை பக்கவாட்டில் தான் போடுவோம். ஆனால் அணையா தீபத்திற்கு திரி நடுவே எரிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

இந்த தீபத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாம். அணையா தீபம் என்பதால் எண்ணெய் கொஞ்சம் கூடுதலாகத்தான் தேவைப்படும். அதேசமயம் பஞ்சு திரி, நூல் திரி இப்படிப்பட்ட திரிகளை இந்த தீபத்திற்கு பயன்படுத்த கூடாது. கடைகளில் விற்கும் சுத்தமான வெள்ளை நிறத்தில் இருக்கும் காட்டன் துணியை வாங்கி, அதை நன்றாக துவைத்து உலர வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அந்த துணியை வெட்டி திரி போல் திரித்து, அதை இந்த அகண்ட தீபத்தில் போட்டு தான் தீபம் ஏற்ற வேண்டும்.

24 மணி நேரமும் அணையாமல் தீபம் எரிய வேண்டும் என்பதால் இந்த விளக்கை கொஞ்சம் பெரிய அளவில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். முதன் முதலாக இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் நீங்கள் ஏற்று போகும் அந்த நாள் நல்ல முகூர்த்த நாளாக இருக்க வேண்டும். வளர்பிறை நாளில் ஏற்ற வேண்டும். முதலில் இந்த தீபத்தை உங்கள் வீட்டில் ஏற்றக்கூடிய நேரம் என்பது பிரம்ம முகூர்த்த நேரம் ஆக இருக்க வேண்டும்.

vilakku

மேல் சொன்ன விஷயங்களின் படி தீபத்தை தயார் செய்துவிட்டு ஒரு நல்ல முகூர்த்த நாள் பார்த்து வீட்டில் இருக்கும் பெண்களின் கையால் பிரம்ம முகூர்த்தத்தில் இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, உங்களுடைய வேண்டுதலை இறைவனிடம் சொல்லிவிடுங்கள். அதன் பின்பு உங்களுக்கு எவ்வளவு தான் கெட்ட நேரம் இருந்தாலும், அதையும் தாண்டி உங்களுடைய வேண்டுதலை நிறைவேற்ற கூடிய வேலைகளை இந்த அகண்ட தீபம் பார்த்துக் கொள்ளும்.

vilaku

இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு அதை அணையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். சிறிய தீயில் இந்த தீபத்தை ஒளிர வைத்தால் போதும். எண்ணெய் குறைவாக எடுத்துக் கொள்ளும். எதிர்பாராத சூழ்நிலையில் இந்த தீபம் அணைந்து விட்டால் அது தவறு கிடையாது. வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அந்த தீபத்தில் இருக்கும் கருப்பு நிறத்தை நீக்கிவிட்டு, மீண்டும் தீபத்தை பொருத்திவிட வேண்டும்.

திரையில் இருந்து எடுத்த அந்த கருப்பு நிற சாம்பலை ஒரு சிறிய பாத்திரத்தில் வைத்துக்கொண்டு தினம்தோறும் நெற்றியில் இட்டுக்கொண்டால் துஷ்ட சக்தி அண்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றளவும் நிறைய கோவில்கள், பெரிய பெரிய சமாதிகள், பல வீடுகளில் இந்த அகண்ட தீபம் எரிந்து கொண்டுதான் வருகின்றது. இந்த தீபத்தை ஏற்றி கஷ்டத்தில் இருந்தவர்கள் பலபேர் சுபிட்சம் அடைந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.