உங்கள் தொழிலில் இருக்கும் எப்படிப்பட்ட முடக்கத்தையும் 48 நாட்களில் நீக்கி, அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய ஆகாயதாமரை.

agaya thamarai0

நம்முடைய தொழிலில் தொடர்ந்து ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கின்றது என்றால் என்ன காரணமாக இருக்கும்? என்பதை பல வகையில் நாம் சிந்தித்திருப்போம். முதலில் நாம் தொழில் செய்யும் இடத்தில் வாஸ்து சரியாக உள்ளதா? நம் வீட்டில் முன்னேற்றத்தை தடுப்பதற்காக ஏதேனும் கெட்ட சக்திகள் வந்து அமர்ந்து உள்ளதா? இல்லை நம் ஜாதகத்தில் நேரம் காலம் சரியாக இல்லையா? என்று பலவகையான சிந்தனைகள் நம் மனதில் எழுவது இயற்கையானது தான். சரி இதில் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் அதை சமாளித்து கொள்ள சுலபமான பரிகாரங்கள் உள்ளது. அது என்ன பரிகாரம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

lemon-glass

உங்களது வீட்டிலாக இருந்தாலும் சரி. அலுவலகத்திலாக இருந்தாலும் சரி. தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் சரி. கண்ணுக்குத் தெரியாத துர்தேவதைகள் வந்து அமர்ந்திருந்தால் உங்களால் எந்த ஒரு செயல்பாட்டிலும் வெற்றி அடைய முடியாது. தொழில் முடக்கம் ஆகத்தான் செய்யும். வருமானம் பின்தங்கியிருக்கும். கடன் தொல்லை அதிகரிக்கும். ஜாதகத்தில் நேரம் சரியில்லாமல் இருக்கும் சமயத்தில்தான் கெட்ட சக்திகள் நம்மை ஆட்டிப்படைக்கும். இதை சரிசெய்ய வியாழக்கிழமை அன்று ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான நீரை எடுத்துக் கொண்டு, அதில் ஒரு எலுமிச்சை பழம், 5 மிளகு இவைகளை போட்டு வடக்கு திசையில் வைத்து விடவேண்டும். அதிலும் பூச நட்சத்திரத்தில் வரும் வியாழக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்வது நல்ல பலனைத் தரும். வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று தண்ணீர், மிளகு, எலுமிச்சைப் பழம் இவை மூன்றையும் புதியதாக மாற்றிக் கொள்ளவும்.

அடுத்ததாக தடைகள். தொழில் முன்னேற்றத்தில் தடை. வருமானம் வருவதில் தடை. புதிய முயற்சியில் தடை. இப்படி எந்த ஒரு முயற்சியை எடுத்தாலும் தடை. இதற்கு ஒரு சிறிய பரிகாரம் உண்டு. இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை காலை 6 – 7 அல்லது மதியம் 1 – 2 அல்லது இரவு 8 – 9 இந்த மூன்று சமயத்தில் ஏதாவது ஒரு நேரத்தில் மட்டும்தான் செய்ய வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் குளங்கள் இருந்தால் அதிலிருந்து ஆகாயதாமரை செடியை பறித்துக் கொள்ளலாம். பறித்துக் கொள்ள முடியாதவர்கள் கடைகளில் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். நிச்சயம் வியாழக்கிழமை தான் வாங்க வேண்டும். முந்தைய நாள் வாங்கி வைத்துக் கொள்ளக் கூடாது. கிடைக்காது என்றால், முந்தைய நாளே ‘நாளைக்கு வேண்டும் என்றுசொல்லி’ வைத்துவிட்டு வியாழக்கிழமை அன்று பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்.

agaya thamarai2

அடுத்ததாக பரிகாரத்திற்கு உரிய அந்த நேரத்தில் ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக்கொண்டு அதில் இந்த ஆகாசய தாமரை செடியை வைத்து வெளியில் தெரியாதபடி நன்றாக முடிச்சுப் போட்டு கட்டி விட வேண்டும். இதை எவரும் தொடாத படி வடகிழக்கு மூலையில் மாட்டிவிட வேண்டும். 48 நாட்களுக்குள், எவர் கையும் இந்த முடிச்சின் மீது படக்கூடாது. பட்டால் நிச்சயம் பரிகாரம் பலிக்காது. 48 நாட்கள் கழித்து, அந்த முடிச்சினை எடுத்து அவிழ்த்து, ஆகாசத் தாமரையை தூக்கி ஓடும் நீரில் போட்டு விட்டு, புதியதாய் ஆகாசத் தாமரையை வைத்துக்கொள்ளலாம். இந்த பரிகாரம், உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட தடையையும் நீக்கும் சக்தி கொண்ட பரிகாரமாக இருக்கும். 48 நாட்களில் உங்களுக்கு நல்ல பலன் கிடைத்து விட்டால் திரும்பவும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

இதையும் படிக்கலாமே
தொழில் முடக்கமா? என்ன செய்வது? கோடி கணக்கில் லாபம் பெற மகாலட்சுமி மந்திர ரகசியம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Theeya sakthi neenga Tamil. Theeya sakthi vilaga Tamil. Thozhil prachanai theera in Tamil. Thozhil valarchi pariharam tamil