உங்கள் வேலையில் மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு இதில் எதை வரமாகப் பெற வேண்டும்? கைமேல் பலன் கிடைக்க இந்த பரிகாரம் போதும்.

surya-bhagavan-job

வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்ற ஒரு பிரச்சனை மட்டும் தான் இருக்கும். அதுவே வேலையில் இருப்பவர்களுக்கு நினைத்த நேரத்தில் இடமாற்றம் வேண்டும். நல்ல பதவி கிடைக்க வேண்டும். நல்ல சம்பளம் கிடைக்க வேண்டும். நல்ல மரியாதை கிடைக்க வேண்டும். நமக்கு கீழாக நான்கைந்து பேர் பணிபுரிய வேண்டும். இப்படி ஆசைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். என்ன செய்வது? இல்லாதவருக்கு ஒரு பிரச்சனை. இருப்பவர்கோ பல பிரச்சனை. ஆனால் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு நம் முன்னோர்கள் பரிகாரத்திற்கும் எந்த ஒரு குறைபாட்டையும் வைக்கவில்லை.

job

உங்களது வாழ்க்கையில் விரும்பிய முன்னேற்றத்தை பெற வேண்டுமென்றால், முதலில் அதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். நாம் விரும்பிய முன்னேற்றத்தை அடைவது என்பது அவ்வளவு சுலபமல்ல. உங்களது முன்னேற்றத்தை படிப்படியாக உயர்த்துவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளை பார்த்து உங்களை சுற்றி இருப்பவர்கள் கண் திருஷ்டி வைத்தாலோ அல்லது உங்களுடைய முன்னேற்றத்தைப் பார்த்து பொறாமை அடைந்தாலோ, அதில் உண்டாகும் தடைகளை தகர்த்தெறிய பரிகாரங்கள் உள்ளதே தவிர, மாய மந்திர வித்தைகள் எல்லாம் செய்து உங்களை கோடான கோடி கோடீஸ்வரராக்க எந்த பரிகாரமும் இந்த உலகத்தில் இல்லை. அப்படியே இருந்தாலும் அதில் வரும் செல்வமானது நிலைக்காது. ஆகவே உங்களது முயற்சியானது வெற்றியாக அமைய இந்த பரிகாரங்களை செய்து வரலாம். அது என்னென்ன பரிகாரம் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகாலை வேளையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, 11 சிவப்பு வறமிளகாய்களை எடுத்து கொண்டு, வேலையில் என்ன மாற்றம் வேண்டுமோ, அந்த வேண்டுதலை மனதார நினைத்து கொண்டு, சூரியனை பார்த்தபடி கிழக்கு பக்கம் நோக்கி நின்று உங்களது தலையை அந்த 11 மிளகாயையும், 3 முறை சுற்றி தூக்கி எறிந்து விட வேண்டும். இந்தப் பரிகாரம் சூரியன் உதயமாகும் நேரம் காலை 6 மணியிலிருந்து 6.30முப்பதுக்குள் செய்து முடிக்க வேண்டும். இதை தொடர்ந்து 43 நாட்கள் செய்து வர நல்ல பலன் கிடைக்கும். 43 நாட்கள் நிறைவடையும் முன்பாகவே நல்ல பலன் கிடைத்து விட்டாலும், பரிகாரத்தை முழுமையாக 43 நாட்கள் செய்து முடித்து விடுங்கள்.

pacha-payaru

வேலையில்லாமல் தொடர்ந்து பணக் கஷ்டமும் துரத்திக்கொண்டே இருக்கின்றதா? பின்வரும் பரிகாரத்தில் ஏதாவது ஒன்றை, மனமார செய்தால் கூட நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -

சிறிய அளவில் மூடி போட்டது போல ஒரு செம்பு பாத்திரத்தை வாங்கி அதில் பச்சை பாசிப்பயிரை நிரப்பி ஓடும் ஆற்றில் விட்டுவிட வேண்டும்.

வலது கையில் வெள்ளி வளைய காப்பு அணிந்துகொள்வது நேர்மறை ஆற்றல் உண்டாகும்.

silver-brace

உப்பு, சர்க்கரை, கடலைப்பருப்பு, துவரை பருப்பு, சுத்தமான பசு நெய், கோதுமை மாவு, இவைகளில் ஏதாவது ஒன்றை கோவில் மடப்பள்ளிக்கோ அல்லது ஆசிரமத்திற்கு தானமாக கொடுக்கலாம். ஏற்கனவே கையில் காசு இல்லை. இதையெல்லாம் எப்படி வாங்குவது? என்று யோசிக்கிறீர்களா. ஒரு கிலோ வாங்குவதற்கு கையில் பணம் இருக்காதா. 100 கிராம் நெய் வாங்கி கொடுத்தாலும் அது தானம் தான். பரிகாரத்தை செய்து நல்ல வேலை கிடைத்தவுடன் நிறைய பொருட்களை வாங்கி தானமாக வழங்கலாம்.

காய்ச்சாத பசும்பால் சிறிதளவை நிறைகுடம் இருக்கும் தண்ணீரில் ஊற்றி, அந்த நீரை ஆலமரத்திற்கு தொடர்ந்து 7 நாட்கள் ஊற்றி வந்தால் நல்ல பலன் இருக்கும். ஆலமரத்திற்கு காய்ச்சாத பசும்பாலை மட்டும் தான் ஊற்ற வேண்டும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த காலகட்டத்தில்  பலருக்கு குடிப்பதற்கே பால் இல்லை. என்ற சூழ்நிலை இருக்க நம்முடைய சாஸ்திரத்தை சற்று மாற்றி வைத்துக் கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை.

இதையும் படிக்கலாமே
நம் குழந்தைகள் எல்லா விஷயத்திலும் படுசுட்டி தான். ஆனால் படிப்பு என்று சொன்னால் மட்டும் ஏன் பின் வாங்குகிறார்கள்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Velai vaippu jothidam Tamil. Velai kidaika poojai Tamil. Velai kidaika tips Tamil. Velaivaippu Tamil.