ஐயங்கார் வீட்டு அக்கார அடிசல் எப்படி ஈசியா 10 நிமிஷத்தில் செய்வது? தெரிந்து கொள்வோமா?

akaraadaisal
- Advertisement -

நாம் என்னதான் சுவையாக சமைப்பவர்களாக இருந்தாலும் ஒரு சில பொருட்கள் இவர்கள் செய்வது போல் நமக்கு வரவில்லையே என்று நினைப்பதுண்டு. குறிப்பாக கோவில்களில் கொடுக்கும் பிரசாதங்கள். இவைகளை நாமும் வீட்டில் என்ன தான் செய்து பார்த்து பழகினாலும் அவர்களின் கைப்பக்குவம் போல் நமக்கு வருவதில்லை. அதில் ஒன்று தான் இந்த அக்காஅடிசல். இது என்ன என்று யோசிக்க வேண்டாம். பாலிலே செய்யப்படும் சர்க்கரை பொங்கல் தான். இது ஐயர் வீடுகளில் மார்கழி மாதம் பெரும்பாலும் இதை தான் நெய்வேத்தியத்தியமாக செய்வார்கள். ஆண்டாள் கோவில்களில் இதை பிரசாதமாகவும் தருவார்கள். இதை நாமும் நம் வீட்டில் அவர்கள் செய்வது போலவே அதே ருசியுடன் செய்து நம் வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம் வாங்க.

தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1 கப், வெல்லம் – 3 கப், பயித்தம் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன், நெய் – 1/2 கப், பால் – 8 கப், முந்திரி திராட்சை -10 கிராம், ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்.

- Advertisement -

முதலில் அடுப்பில் வாணலியை வைத்து அதில் பயித்தம் பருப்பு போட்டு வறுக்க வேண்டும். பயித்தம் பருப்பு பாதியளவு வறுபட்டதும், பச்சரிசியும் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். (பச்சரிசி லேசாக வரப்பட்டு வந்தால் போதும்.) இரண்டையும் நன்றாக கலைந்த பின் குக்கரில் சேர்த்து விடுங்கள். இத்துடன் 6 கப் பால் சேர்த்து, 5 அல்லது 6 விசில் விடுங்கள். இவை இரண்டும் நன்றாக குழைய வேண்டும். (விசில் வரும் போது பால் பொங்காமல் இருக்க ஒரு டீஸ்பூனை குக்கருக்குள் போட்டு விடுங்கள்.)

மற்றொரு புறம் அடுப்பில் பாத்திரம் வைத்து மூன்று கப் வெல்லம், கால் கப் தண்ணீரும் சேர்த்து வெல்லத்தை நன்றாக கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு விசில் அடங்கிய குக்கரில் இருக்கும் அரிசி பருப்பு கலவையை எடுத்து நன்றாக குழைத்து வைத்துக் கொள்ளுங்கள் .(மறக்காமல் ஸ்பூனை எடுத்து விடுங்கள்.)

- Advertisement -

மறுபடியும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரி திராட்சை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதே கடாயில் மீதமிருக்கும் 2 கப் பாலை ஊற்றுங்கள். பால் நன்றாக கொதித்து வந்தவுடன், குழைத்து வேக வைத்த பச்சரிசி, பயத்தம் பருப்புடன் இந்தப் பாலை ஊற்றி, கூடவே கால் ஸ்பூன் அளவிற்கு அளவிற்கு ஏலக்காயையும் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து விடுங்கள்.

அதன் பிறகு கரைத்து வைத்த வெல்லத்தையும் சேர்த்து ஒரு ஐந்து நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடுங்கள். இடை இடையே மீதம் இருக்கும் நெய்யை கொஞ்சம் கொஞ்சம்மாக சேர்த்து விடுங்கள். எல்லாம் ஒன்றாக கலந்தவுடன் இறக்கி வைக்கும் போது வறுத்து வைத்த முந்திரி திராட்சை சேர்த்து இறக்கி விடுங்கள். அவ்வளவு தாங்க. சுவையான அக்கார அடிசல் ரெடி.

இது முழுக்க முழுக்க பாலில் தான் வேக வைக்க வேண்டும் தண்ணீர் சேர்த்தால் அத்தனை சுவையாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -