- Advertisement -
Homeஜோதிடம்அட்சய திருதியை அன்று ராஜயோகம் பெரும் ராசிகள்

அட்சய திருதியை அன்று ராஜயோகம் பெரும் ராசிகள்

- Advertisement -

பல சிறப்புகள் நிறைந்த நாளாக தான் அட்சய திருதியை நாள் திகழ்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். அந்த நாளில் நாம் வாங்கக்கூடிய பொருட்கள் நமக்கு பல மடங்காக பெருகும் என்றும் அதனால் பலரும் தங்கம், வெள்ளி, வீடு, நிலம், சொத்து போன்ற அனைத்தையும் வாங்க முயற்சி செய்வார்கள் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அட்சய திருதியை நாள் அன்று ஒரு சில ராசிகளுக்கு ராஜயோகம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. அந்த ராசிகள் எவை என்பதை பற்றி தான் இந்த ஜோதிடம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ராஜயோகம் பெரும் ராசிகள்

பலவிதமான ராஜ யோகங்கள் இருக்கின்றன. அந்த ராஜ யோகங்களில் குறிப்பிட்ட சில ராஜ யோகங்கள் அட்சய திருதியை நாளன்று ஒரு சில ராசிகளுக்கு ஏற்பட உள்ளன. அந்த ராஜ யோகங்கள் எவை என்பதை முதலில் தெரிந்து கொண்டு பிறகு அந்த ராஜ யோகங்கள் எந்தெந்த ராசிக்கு வருகிறது? அதனால் அவர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை பார்ப்போம்.

- Advertisement -

கஜகேசரி யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏற்படப்போகிறது. இந்த யோகம் அவர்களுக்கு ஏற்படுவதால் செல்வம் செழிப்பு அதிகரிக்கும். புதிதாக சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாக்கும். முதலீடு செய்யக்கூடிய அனைத்து விஷயங்களிலும் லாபம் ஏற்படும். தொழில் மற்றும் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகளும் ஏற்படும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு லஷ்மி நாராயண ராஜ யோகம் ஏற்படப்போகிறது. இதனால் அவர்கள் வாழ்க்கையில் சுப நிகழ்வுகள் நடைபெறும். செல்வம் பெருகும். எதிர்பாராத உதவிகள் வரும். மேலும் வேலை செய்பவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அந்த வேலை கிடைப்பதோடு வேலையில் நல்ல பெயரும் ஏற்படும்.

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு சர்வத சித்தி யோகம் ஏற்படப்போகிறது. இதன் மூலம் அவர்களுக்கு நெடு நாட்களாக இருந்த கடன் பிரச்சனை முற்றிலும் தீரும். பள்ளி மாணவர்களாக இருந்தாலும் போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்களாக இருந்தாலும் தேர்வில் நல்ல வெற்றியை பெறுவார்கள். எதிர்பாராத விதத்தில் சொத்துக்களின் மூலம் லாபம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்திலும் தொழிலிலும் வேலையிலும் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு மால்வல்ய யோகம் ஏற்படப்போகிறது. இதனால் அவர்கள் வாழ்வில் இதுவரை இருந்து வந்த எதிர்மறையான செயல்கள் அனைத்தும் நீங்குவதோடு நேர்மறை மாற்றங்களும் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. இழந்த மதிப்பையும் மரியாதையையும் திரும்பப் பெறுவீர்கள். முதலீடு அதிகரிக்கும். குடும்ப உறவு சிறப்பாக இருக்கும்

- Advertisement -

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம் ஏற்படப்போகிறது. இதன் மூலம் புதிதாக வருமானம் அவர்களை தேடி வரும். மன வலிமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுப்பறியில் இருந்து வந்த நீதிமன்ற தீர்ப்புகள் தங்களுக்கு சாதகமாக உண்டாகும். முடிவு எடுக்கும் திறன் என்பது அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் வெற்றியும் தங்களுக்கு ஆதரவான கூட்டாளியும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

மகர ராசிக்காரர்களுக்கு மால்வல்ய யோகம் ஏற்படப்போகிறது. இதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கைக்கு தேவையான ஆடம்பரம் அனைத்தும் கிடைக்கும். வசதிகள் அதிகரிக்கும். புதிதாக சொத்துக்கள், வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பணி செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். நிதி நிலையில் இருந்து வந்த தொய்வுகள் அனைத்தும் நீங்கி உயர்வு ஏற்படும். நஷ்டம் அடைந்த தொழிலை மீண்டும் வெற்றிகரமாக நடத்துவதற்குரிய வாய்ப்புகள் உண்டாக்கும்.

மீன ராசிக்காரர்களுக்கு சதுர்க்ரதி யோகம் ஏற்படப்போகிறது. இதன் மூலம் புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும். பணம் அவர்களை தேடி வரும். வெளிநாடு தொடர்பாக நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த நல்ல செய்தி வந்து சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு வந்து மன மகிழ்ச்சியை தரும். மன அமைதி உண்டாக்கும்.

இதையும் படிக்கலாமே:மே மாதம் 4 கிரக சேர்க்கை

அட்சய திருதியை நாளன்று உண்டாக கூடிய கிரக சேர்க்கையின் காரணமாக மேற்சொன்ன ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் உண்டாகி அதன் மூலம் பல நன்மைகளை பெறுவார்கள் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்