அட்சய திருதியை அன்று என்ன செய்யக்கூடாது?

mahalashmi5
- Advertisement -

நாளைய தினம் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து அட்சய திருதியை ஆனது வரவிருக்கின்றது. இந்த நாளில் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை தெரிந்து வைத்திருப்போம். ஆனால் நாளைய தினம் நாம் செய்ய வேண்டிய விஷயங்களை விட, செய்யக்கூடாத விஷயங்களை தான் முதலில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நமக்கு மேலும் மேலும் நல்லது நடக்கிறதோ இல்லையோ, மேலும் மேலும் கெட்டது நடக்கக்கூடாது. அதற்காக சில விஷயங்களை நாம் தெரிந்து வைத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். நாளைய தினம் உங்கள் வீட்டில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் எல்லாம் என்னென்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

அட்சய திருதியையில் செய்யக்கூடாதவை

நாளைய தினம் கைநீட்டி யாரிடமும் கடன் வாங்கிறாதீங்க. என்ன அவசர தேவையாக இருந்தாலும் கொஞ்சம் முன்கூட்டியே அந்த பணத்தை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். நாளைய தினம் முக்கியமாக கடன் வாங்கி தங்கம் வாங்கவே கூடாது. வீட்டில் இருக்கும் நகைகளை அடமானம் வைக்க கூடாது. பழைய நகைகளை மாற்றி புது நகை வாங்கக் கூடாது.

கையில் இருக்கும் பணத்தை கொடுத்து தான் நாளை புது தங்கம் வாங்க வேண்டுமே தவிர, வீட்டில் இருக்கும் மகாலட்சுமியை கொடுத்துவிட்டு, தங்கம் வாங்காதீங்க அதுவும் ஒரு வகையில் தவறுதான். நிறைய பேருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். இந்த நாளில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டலாமா என்று. வாங்கிய கடனை திருப்பிக் கொடுங்கள். ஆனால் அந்த கடனுக்கு வட்டியை செலுத்த வேண்டாம். மீண்டும் மீண்டும் வட்டி செலுத்தக்கூடிய நிலைமை பிறகு நமக்கு வந்து விடும். கடனை திருப்பி அடைத்தால், சீக்கிரம் கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்கும் யோகம் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

நாளைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் பெரும்பாலும் யார் வீட்டிலும் அசைவம் சமைக்க மாட்டாங்க. இருந்தாலும் நாளை அசைவம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம். அதேபோல கசப்பான எந்த ஒரு பொருளையும் பெண்கள் வீட்டில் சமைக்க வேண்டாம். பாவக்காய் சுண்டக்காய் கோவக்காய் போன்ற பொருட்களை சமைக்காமல் இருப்பது நல்லது.

நாளைய தினம் மருத்துவமனைக்கு செல்லாமல் இருக்கவும். மருந்துக்காக பணத்தை செலவு செய்யாதீர்கள். தினமும் மருந்து மாத்திரை சாப்பிடுபவர்களாக இருந்தாலும் கூட, நாளைய தினம் புதுசாக காசு கொடுத்து புது மருந்து வாங்காதீங்க. ஏதாவது அவசர தேவை உள்ளவர்கள் மருத்துவமனை சென்று தான் ஆக வேண்டும் அது தவிர்க்க முடியாதது.

- Advertisement -

நாளைய தினம் வீட்டிலும் சரி, வேலை செய்யும் இடத்திலும் சரி, தொழில் செய்யும் இடத்திலும் சரி, யாரிடமும் வாக்குவாதம் செய்து சண்டை போடக்கூடாது. அடுத்தவர்கள் மனதில் நோகும்படி பேசக்கூடாது.

நாளைய தினம் எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்காமல் இருப்பது நல்லது. நாளைய தினம் வீட்டை ஒட்டடை அடிக்க கூடாது, வீட்டை துடைக்க கூடாது, பூஜை அறை பாத்திரங்களை நாளைய தினம் தேய்த்து சுத்தம் செய்யக்கூடாது. எல்லா வேலைகளையும் இன்றே முடித்து வைத்துக் கொள்ளுங்கள். நாளை மகாலட்சுமிக்கு பூஜை மட்டும்தான் செய்ய வேண்டும். நாளைய தினம் இல்லத்தரசிகள் பாலை திரித்து செய்ய வேண்டிய வேலை எதையுமே செய்ய கூடாது.

இதையும் படிக்கலாமே: 10-05-2024 அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க நல்ல நேரம்

சில வீடுகளில் பாலை திரித்து பன்னீர் செய்வாங்க. அந்த வேலையை நாளைக்கு செய்யாதீங்க. அது மட்டும் இல்லாமல் வெண்ணெயை உருக்கி நெய் எடுக்கக் கூடாது. எந்த வெள்ளிக்கிழமையும் இந்த தவறை செய்யக்கூடாது. வருடம் முழுவதும் நல்லது நடக்க வேண்டும் என்றால் நாளை இப்படி சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் பார்த்து பக்குவமாக செய்வதில் தவறு ஒன்றும் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் இதையெல்லாம் பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -