ஒரு குடும்பத்தில் சந்தோஷம் நிலையாக இருக்க வேண்டும் என்றால், அந்த வீட்டில் அடுத்தடுத்து நல்ல காரியங்கள், அதாவது சுப நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்க வேண்டும். சில வீடுகளில் எல்லாம் பார்த்தால் சுபகாரிய தடை இருக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடந்தே பல வருடங்கள் ஆயிருக்கும். திருமணத்திற்காக, திருமண வயதோடும், திருமண வயதை கடந்தும், ஆண் பெண் இருப்பாங்க.
திருமணம் ஆனவர்களுக்கு பல வருடங்கள் ஆகியும், குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பாங்க. இப்படி ஒரு வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்காமல் தடைப்பட்டு இருக்கிறது என்றால், அந்த குடும்பத்திற்கு ஏதோ ஒரு பிரச்சனை, தோஷம் இருக்கிறது என்று தான் அர்த்தம். வீட்டில் இருப்பவர்களுக்கு ஜாதகரீதியாக தோஷம் இருக்கலாம், வீட்டில் கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றலின் தாக்கமும் இருக்கலாம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து ஒரு குடும்பம் விடுபட வேண்டும், திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்க வேண்டும் என்றால், என்ன செய்வது. இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை நம்பிக்கையோடு செய்யுங்கள். உங்களுடைய வீட்டில் அடுத்தடுத்த நல்லது நிச்சயம் நடக்க தொடங்கிவிடும்.
சுப காரிய தடை விலக பரிகாரம்
பெரும்பாலும் எல்லோர் வீட்டு பூஜை அறையிலும் காமாட்சி அம்மன் விளக்கு இருக்கும். அந்த காமாட்சி அம்மன் விளக்கை தினமும் காலையில் 6:00 மணிக்கு வீட்டில் இருக்கும் பெண்கள் ஏற்றி குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். காமாட்சி அம்மன் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்ச திரி போட்டு, அந்த நல்லெண்ணையில் மூன்று டைமண்ட் கற்கண்டுகளை போடுங்க.
பிறகு விளக்கு ஏற்றுங்கள். டைமண்ட் கற்கண்டுகளை போட்டு ஒரு வீட்டில் தினமும் காமாட்சியம்மன் விளக்கு ஏற்றி இறைவழிபாடு செய்யும்போது, அந்த வீட்டில் இருக்கும் கசப்பான கஷ்டங்கள் நீங்கும். இனிப்பான இன்பமான நிறைய நல்லது நடக்க தொடங்கிவிடும். ஜாதக கட்டத்திலேயே தோஷம் இருந்தாலும் அதையெல்லாம் தகர்க்க கூடிய சக்தி இந்த விளக்கு வழிபாட்டிற்கு இருக்கிறது.
யாருக்கு பிரச்சனை இருக்கிறதோ, அவர்களை மனதில் நினைத்துக் கொண்டு இந்த விளக்கை ஏற்றி குலதெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதிலும் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த விளக்கு 1 மணி நேரம் காலை நேரத்தில் எரிந்தால் போதும். வெள்ளிக்கிழமை மட்டும் கிடையாது தினம் தோறும் இந்த வழிபாட்டை அப்படியே தொடர வேண்டும்.
காமாட்சி அம்மன் விளக்கில் இருக்கும் டைமண்ட் கற்கண்டு கரையும் வரை அதே டைமண்ட் கற்கண்டே பயன்படுத்தலாம். தினமும் அந்த கற்கண்டை மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் தினமும் காலையில் 6 மணிக்கு விளக்கை ஏற்றி விட வேண்டும். அவ்வளவுதான்.
இதையும் படிக்கலாமே: சங்கடங்கள் தீர விநாயகருக்கு ஏற்ற வேண்டிய விளக்கு
இந்த எளிமையான வழிபாட்டை ஒரு வீட்டில் தொடர்ந்து செய்து வந்தாலே போதும் உங்கள் பிரச்சனைகள் தீரும். வீட்டின் குடும்பத் தலைவி இந்த பரிகாரத்தை செய்தாலே அந்த குடும்பத்தில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கிடைத்து வடும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டு முறையை பின்பற்றி பலன் பெறவும்.