தென்னாபிரிக்க வீரர் அல்பி மோர்கல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்

albie-morkel

தென்னாபிரிக்க அணியின் ஆல்ரவுண்டரானா அல்பி மோர்கல் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது 37 வயதாகும் மோர்கல் தென்னாபிரிக்க அணிக்காக 58 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று உள்ளார். மேலும் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 50 டி20 போட்டிகளில் தென்னாபிரிக்க அணிக்காக பங்கேற்று விளையாடியுள்ளார்.

albie

இதுமட்டுமில்லாமல் உலகின் பல்வேறு இடங்களில் நடைபெறும் டி20 போட்டிகளில் விளையாடிய அவர் ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். அவரது பின்வரிசை அதிரடி பேட்டிங் சென்னை அணியில் விளையாடி போட்டிகளில் நீங்கள் பார்த்திருக்க முடியும். மேலும் பந்துவீச்சில் அவர் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் தென்னாபிரிக்க அணியின் டிவில்லியர்ஸ் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் அணியின் மற்றொரு வீரரான மோர்கல் ஓய்வு முடிவினை அறிவித்துள்ளார். அல்பி மோர்கல்லின் தம்பியான மோர்னே மோர்கல் தென்னாபிரிக்க அணிக்காக தற்போது விளையாடிவருகிறார்.

ஒரு காலத்தில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த அல்பி மோர்கல் ஓய்வு முடிவினை அறிவித்ததால் அவருடன் விளையாடிய கிரிக்கெட் பிரபலங்கள் அவருக்கு சமூக வலைத்தளங்களின் மூலம் வாழ்த்துகளையும் அவர்களது நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

அடுத்த 5 (அ ) 6 வருடங்களுக்கு இந்திய அணி கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தும் – அனில் கும்ளே

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்