அடுத்த 5 (அ ) 6 வருடங்களுக்கு இந்திய அணி கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தும் – அனில் கும்ளே

Kumble
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை (2-1) என்ற கணக்கில் வென்ற இந்திய அணி 71 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் 71 டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்து. இந்திய அணியின் சிறப்பான ஆட்டம் இந்த தொடர் முழுவதும் இருந்தது அனைவரையும் வியக்க வைத்தது.

kohli

இந்நிலையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி குறித்து முன்னாள் வீரரான அனில் கும்ப்ளே தனது கருத்தினை தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த இந்த டெஸ்ட் தொடர் போட்டியில் இந்திய அணியின் ஒட்டு மொத்த உழைப்பும் கொடுத்து இந்திய அணி விளையாடியது. இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் சிறப்பாக இருந்தது.

- Advertisement -

கும்ளே : விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இப்போது பலம்வாய்ந்த ஒரு அணியாக திகழ்கிறது. இந்திய அணியின் தரம் இப்போது உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் எந்த அணியையும் எதிர்க்கும் அணியாக இந்தியா இருக்கிறது. இந்திய அணியின் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சு என பவுலிங் யூனிட் அருமையாக உள்ளது. கோலி தலைமையில் பேட்டிங்கும் சிறப்பாக உள்ளது.

koli

எனது கணிப்பின்படி இந்திய அணி ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வெல்லும் என்று நான் ஒருமாதத்திற்கு முன்பே கணித்தேன். மேலும் அடுத்த 5,6 வருடங்களுக்கு யாராலும் அசைக்க முடியாத பலத்துடன் இந்திய அணி திகழும். இளம் வீரர்களை கொண்ட இந்த அணி முழுஉத்வேகத்துடன் உள்ளது. என்று கூறி தனது கருத்தினை பதிவு செய்தார் கும்ளே.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங் பலவீனமானது – இயான் சேப்பல்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -