வீட்டில் தவறியும் செய்யக்கூடாத 1 தவறு! இந்த தவறு மகாலட்சுமி வரவை தடை செய்யும் தெரியுமா?

slipper-lakshmi

புராண காலம் முதல் இந்தக் காலம் வரை ஒவ்வொருவர் வீட்டிலும் காலையில் மகாலட்சுமி கதவை தட்டுவதாக கூறப்பட்டு வருகிறது. விடி காலையில் எழுந்ததும் வாசல் தெளித்து கோலம் போடுவதும் இதனால் தான். பிரம்ம முகூர்த்தத்தில் ஒவ்வொருவருடைய வாசலிலும் தேவர்களும், மகாலட்சுமியும் உலா வருவதாக சாத்திரங்கள் கூறுகின்றன. அப்படி அவர்கள் வருகை தரும் பொழுது யாருடைய வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இருக்கிறதோ? அந்த வீட்டில் அவர்கள் நுழைவதாக ஐதீகம் உள்ளது.

mahalakshmi

அவ்வகையில் அவர்கள் நம் வீட்டிற்கு வரும் பொழுது முதலில் அவர்கள் கண்களுக்கு தென்படுவது தலைவாசல். தலைவாசலில் நாம் செய்யும் இந்த ஒரு தவறு அவர்களுடைய வருகையை தடை செய்து, நாமே அவர்களை விரட்டி அடிப்பதற்கு சமமாக கருதப்படுகிறது. அப்படி நாம் செய்யும் அந்த ஒரு தவறு என்ன? அதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நாம் தெரிந்தோ, தெரியாமலோ இந்த தவறை பலமுறை செய்திருப்போம். ஆனால் இனிமேல் இந்த தவறை செய்யக் கூடாது. ஒரு வீட்டில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்து இருக்க முதலில் அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்களில் எதிர்மறை எண்ணத்திற்கு வாய்ப்புகள் இல்லை. நேர்மறை சிந்தனையும், செல்வ செழிப்பும் ஒருசேர நமக்குக் கிடைக்க வீட்டை முதலில் லட்சுமி கடாட்சத்துடன் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். எப்போதும் வீட்டை சுத்தமாக வைத்திருந்து விளக்கேற்றி வந்தாலே அந்த வீட்டில் மகாலட்சுமி குடியிருப்பாள்.

seruppu

வீட்டிற்குள் நுழைந்ததும் முதலில் நம் பார்வை வாசலை நோக்கி தான் செல்லும். அந்த இடத்தில் நம்முடைய காலணிகளை கன்னா பின்னாவென்று அலங்கோலமாக போட்டு வைத்திருந்தால், அந்த வீட்டிற்குள் எப்படி நல்ல சக்திகள் நுழையும்? இரவு நேரத்தில் துஷ்ட சக்திகள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க செருப்பு, துடைப்பம் போன்றவற்றை வாசலில் போட்டு வைப்பது வழக்கம். ஆனால் விடிகாலையில் நீங்கள் எழுந்ததும் முதலில் சரிசெய்ய வேண்டியது அவற்றை தான்.

- Advertisement -

ஒரு சில வீடுகளில் தலைவாசலுக்கு நேரே குப்பை போல் அத்தனை செருப்பு வகைகளும் கொட்டிக் கிடக்கும். நீங்கள் செய்யும் இந்த ஒரு தவறும் உங்களுக்கு பண வரவை தடை செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாசலில் எப்போதும் காலணிகளை நேராக விடாமல் இரண்டு ஓரங்களிலும் ஏதாவது ஓரத்தில் ஜோடியாக கழட்டி வைக்கலாம். அதற்கென விற்கப்படும் ஸ்டாண்டுகளில் அழகாக அடுக்கி வைப்பது இன்னும் சிறப்பாக இருக்கும்.

seruppu-slipper

காலணிகள் காலை நேரத்தில் தலைவாசலில் கிடந்தால் நிச்சயம் அந்த வீட்டில் நல்ல சக்திகள் நுழைவது தடுக்கப்படும். இனியும் அந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். எழுந்ததும் காலணிகளை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு வாசனை கூட்டி, பெருக்கி சுத்தம் செய்து விடுங்கள். இந்த வேலையை முதலில் செய்து விட்டு அடுத்த வேலையை பார்க்க துவங்குங்கள். இவ்வாறு செய்வதால் ஒரு நாள் இல்லை என்றாலும் ஒருநாள் உங்களுடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்குவாள்.

vasal-kathavu

அவர்கள் மூலம் பெரும் அதிர்ஷ்டத்தையும், தங்கு தடை இல்லா வருமானமும் பெருகும். அமைதியான சூழ்நிலைக்கு நேர்த்தியான வீட்டின் அழகும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சோம்பேறியாக இருப்பவர்களை இடத்தில் மகாலட்சுமி எப்பொழுதும் இருக்க விரும்புவதில்லை. சுறுசுறுப்புடன் உற்சாகத்துடன் செயல்படுங்கள் நல்லது நடக்கும்.

இதையும் படிக்கலாமே
எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் வீட்டில் இந்த விளக்கில் தீபம் ஏற்றி வைக்காதீர்கள். இந்த விளக்கை ஏற்றுவதால் பலனும் இல்லை! பணவரவும் இல்லை!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.