எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் வீட்டில் இந்த விளக்கில் தீபம் ஏற்றி வைக்காதீர்கள். இந்த விளக்கை ஏற்றுவதால் பலனும் இல்லை! பணவரவும் இல்லை!

deepam9

தினம்தோறும் தீபவழிபாடு நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் இருளை போக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இருளைப் போக்குவதோடு, வீட்டிலிருக்கும் வறுமையைப் போக்கக் கூடிய சக்தியும் இந்த தீப ஒளிக்கு உண்டு. ஆனால், வளர்ந்து வரும் இந்த நவீன காலகட்டத்தில் எல்லாம் மாறியது போல, விலங்குகளின் வகைகளும், அதன் வடிவமைப்புகளும் மாறிவிட்டது. அதை தவறு என்று சொல்லவில்லை. இருப்பினும் நம்முடைய வீட்டில், நம் பாரம்பரியமாக எந்த விளக்கை தொடர்ந்து ஏற்றி வருகின்றோமோ, அந்த விளக்கில் தீபம் ஏற்றுவதுதான் நல்லது. அந்த வரிசையில் நம் வீட்டில் எந்த விளக்கில் தீபம் ஏற்றக்கூடாது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

deepam4

நம்மில் நிறைய பேருக்கு, நில வாசற்படிக்கு வெளியே இரண்டு பக்கமும் மண் அகல் தீபம் ஏற்றி வைக்கும் பழக்கம் இருக்கும். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. சிலபேரது வீட்டு பூஜை அறையில் பித்தளை விளக்கு, வெள்ளி விளக்கு, குத்து விளக்கு, குபேர விளக்கு என்று பல விளக்குகள் வைத்திருந்தாலும், கட்டாயம் ஒரு மண் அகல் விளக்கை ஏற்றும் பழக்கத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். அதிலும் எந்த தவறும் கிடையாது.

குறிப்பிட்டுச் சொல்லப் போனால், நம்முடைய வீட்டில் தங்கத்தினால், வெள்ளியினால் செய்யப்பட்ட விளக்குகள் இருந்தாலும் கூட, மண்ணால் செய்யப்பட்ட விளக்கு ஒன்றை கட்டாயம் ஏற்றிவைக்க வேண்டும் என்றுதான் சாஸ்திரம் சொல்கிறது. மண் அகல் விளக்கிலே இப்போதெல்லாம், சாதாரணமாக மண் அகல் விளக்குகளும் கிடைக்கின்றது. அதே மண் அகல் விளக்கைப் போன்று கொஞ்சம் மொழு மொழு என்று வர்ணம் தீட்டப்பட்டு, செயற்கை முறையில் தயாரிக்கப்படும் மண் அகல் தீபங்களும் விற்கப்படுகின்றது. இரண்டு வகையான மண் அகல் விளக்குகள் உள்ளது உங்களுக்கும் தெரியும் அல்லவா?

deepam7

உங்களுக்கு வித்தியாசம் புறிகின்றதா? செயற்கையான மண் அகல் தீபத்தில் பூ போல அச்சடிக்கப்பட்டு, ஓம் என்று அச்சடிக்கப்பட்டு, எல்லாம் விதவிதமாக மண் அகல் விளக்குகள் இப்போது வருகின்றது. முடிந்தவரை செயற்கை பொருட்கள் கலந்து தயாரிக்கப்படும் அப்படிப்பட்ட புதுவிதமான மண் விலங்குகளை தவிர்த்துவிட்டு, சாதாரண மண் அகல் விளக்குகளை நம்முடைய வீட்டில் ஏற்றினால் மட்டுமே பலன் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

சாஸ்திரம் எதற்காக இப்படி சொல்கின்றது? என்ற காரணத்தையும் நாம் தெரிந்து கொள்வோம். அதாவது அசல் மண் அகல் விளக்கு என்பது, பஞ்சபூதங்களின் சக்தியையும் உள்ளடக்கி வைத்துள்ளது. நிலத்தில் இருந்து எடுக்கப்படும் மண், நீரூற்றி பிசைந்து, காற்றில் ஆரவைக்கப் பட்டு, நெருப்பில் சுட்டு, ஆகாயத்தில் இருந்து பெறப்படும் ஒளி கதிர்களின் கதிர்வீச்சுகளும் சேர்ந்து அதன் பின்புதான், முழுமையான அகல் தீபாவாக மாற்றப்படுகின்றது.

deepam6

இப்படியாக ஒரு மண் அகல் தீபத்திற்கு பஞ்சபூதங்களின் சக்தியும் அடங்கியுள்ளது. இந்த தீபத்தை நாம் ஏற்றி வைக்கும் போது, நம்முடைய வீட்டிலும் பஞ்சபூதங்களின் ஆற்றல் நிறைந்திருக்கும். செயற்கையாக தயாரிக்கப்படும் மண் அகல் தீபத்தை தவிர்த்துவிட்டு இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த மண் அகல் விளக்கை நம் வீட்டில் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

deepam5

குறிப்பாக நில வாசப்படிக்கு கீழே செயற்கையாக தயாரிக்கப்பட்ட மண் அகல் தீபத்தை வைத்து ஏற்றாதீர்கள். உங்களால் மண் அகல் தீபத்தை வைத்து பராமரிக்க முடியவில்லை என்றாலும், பரவாயில்லை. சிறிய அளவில் அகல்தீபம் போன்று பித்தளையில் விலங்குகள் இருக்கின்றன. அதை வாங்கியும் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, செயற்கையாக, அழகுக்காக தயாரிக்கப்படும் மண் அகல் தீபங்களை வாங்கி வைத்து இனி உங்கள் வீட்டு பூஜை அறையிலோ அல்லது கார்த்திகை தீபத்தன்றோ அல்லது நில வாசற்படிக்கு கீழே ஏற்ற வேண்டாம்.

deepam8

இன்னும் சில நாட்களில் கார்த்திகை தீபம் வரப் போகின்றது அல்லவா? நீங்கள் வாங்கப் போகும் விளக்கு கட்டாயம் மண்ணால் செய்யப்பட்ட விலக்காக இருந்தால், அதன் மூலம் ஏற்றப்படும் தீப ஒளியின் மூலம், நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிச்சயம் முழுமையாக நிலைத்திருக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
வாழ்க்கையில் வரக்கூடிய பல கஷ்டங்களுக்கு, நாம் சாப்பிடும் சாப்பாடும் ஒரு காரணம்! சாப்பாட்டில் தோஷம் எப்படி வரும்! அந்த தோஷம் நம்மை தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.