உங்கள் தலைமுடிக்கு இதைவிட பெஸ்ட் ‘ஹேர் பேக்’ வேறு எதுவுமே இந்த உலகத்துல இல்லைங்க! நீங்க நினைச்சு கூட பாக்க முடியாத அளவுக்கு முடி அடர்த்தியா வளர ஆரம்பிக்கும்.

hair2
- Advertisement -

தலை முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எத்தனையோ ஹேர் பேக் உள்ளது. ஆனால், அது எல்லாவற்றையும் விட ஒரு சிறந்த ஹேர் பேக்கை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இயற்கையாகக் கிடைக்கக்கூடிய இந்த 1 பொருளை வைத்து, வாரம் ஒரு முறை தலையில் ஹேர் பேக் போட்டு வந்தால் போதும். ஒவ்வொரு முடியும் தடிமனாக வளர ஆரம்பிக்கும். முடி உதிர்வு குறையும். வேர்கள் வலுப்பெறும். முடி வளர்ச்சி மயிர்க்கால்களில் நெருக்கமாக வளரும். முடி சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினையும் உங்களுக்கு வராது. அது எந்த பொருள்? அதை எப்படி தலையில் அப்ளை செய்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

hair3

தலைமுடிக்கு உறுதியைக் கொடுக்கக்கூடிய அந்த பொருள் நாம் எல்லோரும் அறிந்த ‘சோற்றுக் கற்றாழை’. இந்த ‘ஆலோவேரா ஜெல் ஹேர் பேக்’ முடிக்கு மிகமிக நன்மை தரக்கூடியது. இயற்கையாகவே அலோவேரா செடியிலிருந்து பறித்தெடுத்த ஜெல்லை தான் இந்த ஹேர் பேக்குக்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடதக்கது. கடையில் இருந்து எவ்வளவு நல்ல பிராண்ட் உள்ள அலோ வேரா ஜெல்லைப் வாங்கினாலும் அதில் ஒரு சிறிதளவாவது பிரசர்வெட் கலக்காமல் இருக்காது. கட்டாயம் கெமிக்கல் கலந்த பொருளை நம்முடைய தலைமுடிக்கு அப்ளை செய்யும்போது சில பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.

- Advertisement -

சிறிய துண்டு சோற்றுக்கற்றாழையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஓரளவுக்கு சிறிய துண்டுகளாக வெட்டி நல்ல தண்ணீரில் போட்டு, நன்றாக அலசிக் கொள்ள வேண்டும். கற்றாழையில் இருக்கக் கூடிய மஞ்சள் நிற ஜெல்லை எப்போதும் நாம் பயன்படுத்தக் கூடாது. தண்ணீரில் கழுவி எடுக்கும்போது அந்த மஞ்சள் நிற ஜெல் அனைத்தும் தண்ணீரோடு சென்றுவிடும்.

alovera

அதன்பின்பு கற்றாழையை குறுக்கே வெட்டி உள்ளே இருக்கும் வெள்ளை ஜெல்லை கத்தியாலோ அல்லது ஸ்பூனிலோ எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஜெல்லை அப்படியே மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். உங்கள் தலை முடிக்கு எவ்வளவு ஜெல் வேண்டுமோ அந்த அளவிற்கு எடுத்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன்பின்பு இந்த ஜெல்லை உங்களுடைய முடியின் வேர்க்கால்களில், முதலில் நன்றாகப் படும்படி தடவ வேண்டும். அதன் பின், கீழே முடியில் நீளவாக்கில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். தலை முழுவதும் அப்ளை செய்த பின்பு தலையை லேசாக கொண்டை போட்டு வைத்துக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் அப்படியே ஊறட்டும். அதன் பின்பு சீயக்காய் போட்டு தலையை அலசி கொண்டால் போதும்.

hair-massage

பின்பு உங்களது முடியில் உள்ள வித்தியாசத்தை உங்களாலேயே உணர முடியும். நன்றாக தலையை உலரவைத்து முடி சீவினால் உங்களுடைய முடி அழகாகவும், நீளமாகவும் இருக்கும். ஸ்டைட்னிங் செய்தது போலவே ஒரு லுக்கு கூட இதனால் கிடைக்கும். இத ட்ரை பண்ணி பார்த்தா நிச்சயம் உங்களுக்கு புரியும்.

long-hair

வாரம் ஒரு முறை இந்த பேக் போட்டால் போதும். உங்களுடைய உடல் மிகவும் குளிர்ச்சியான உடலாக இருந்தால், இந்த ஹேர் பேக் போட்டால் நிச்சயம் சளி பிடிக்கத்தான் செய்யும். சூடு உடம்பு உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை. குளிர்ச்சி தன்மை கொண்ட உடலைக் கொண்டவர்கள் 10 நிமிடங்கள் மட்டுமே பேக்கை தலையில் போட்டு விட்டு, அதன் பின்பு தலையை அலசி விடுங்கள். ட்ரை பண்ணி பாருங்க நிச்சயம் நல்ல ரிசல்ட் தெரியும்.

- Advertisement -