என்னோட தலையில் முடி வளர வைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம். முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. வழுக்கை தெரியும் என்றால் பாருங்களேன். அந்த அளவிற்கு தலை முடியில் பிரச்சனை. எந்த ஹேர் பேக் போட்டாலும் எவ்வளவு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு வந்தாலும் முடி வளர வில்லை என்பவர்கள், சிரமம் பார்க்காமல் இந்த ஒரு டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க. வாரத்தில் ஒரு நாள் ட்ரை பண்ணி பாருங்க. மொத்தமாக பத்து முறை இந்த ஹேர் பேக்கை போட்டு விட்டு உங்களுடைய தலைமுடியில் வித்தியாசத்தை டெஸ்ட் பண்ணி பாருங்க. ரிசல்ட் உங்களுக்கே நிச்சயமா தெரியும்.
இதற்கு நாம் பயன்படுத்த போவது அலோ வேரா ஜெல். இயற்கையாகக் கிடைக்கக்கூடிய கற்றாழையில் இருந்து எடுத்த ஜெல் இருந்தால் நல்லது. இயற்கையாக அலோ வெற ஜெல் கிடைக்காத இடத்தில் நீங்கள் இருந்தால், எந்த கலரும் சேர்க்கப்படாத, எந்த வாசனை திரவியங்களும் சேர்க்கப்படாத அலோ வேரா ஜெல்லைப் வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஒரு சிறிய கிண்ணத்தில் அலோ வேரா ஜெல் உங்களுக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு 1/4 கப் அலோ வேரா ஜெல் இருந்தால் அதில், 2 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து இந்த ஜெல்லை உங்களுடைய தலையின் மண்டையோட்டில் படும்படி, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அதாவது மயிர்க்கால்களில் இந்த அலோவேரா ஜெல் நன்றாக படவேண்டும்.
அதன் பின்பு முடிக்கு மேல் பக்கம் மேலிருந்து கீழ் பக்கம் வரை முடி முழுவதும் இந்த ஜெல்லை அப்ளை செய்து தலையை ஒரு கொண்டை கட்டிக்கொள்ளுங்கள். 30 நிமிடத்திலிருந்து 1 மணி நேரம் வரை இந்த ஜெல் உங்களுடைய தலையில் ஊறலாம். அதன் பின்பு மைல்டான ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து விடுங்கள். இப்படி வாரத்தில் ஒருநாள் செய்தாலே போதும். மாதத்தில் 4 நாட்கள் கணக்கு வரும். மொத்தமாக 3 மாதத்தில் உங்களுடைய தலைமுடியில் வித்தியாசத்தை காண முடியும். ட்ரை பண்ணி பாருங்க.
இந்த அலோ வெற ஜெல் லோடு விளக்கெண்ணை மட்டும் தான் சேர்க்க வேண்டுமா, என்றால் கிடையாது. விளக்கெண்ணை பிடிக்காதவர்கள் விளக்கெண்ணையை தலையில் போட்டால் தலை பாரம் வரும் என்பவர்கள், விளக்கெண்ணெய்க்கு பதிலாக தேங்காய்ப் பால் சேர்த்துக் கொள்ளலாம். தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கொள்ளலாம். இப்படி இதில் உங்களுக்கு என்ன ரொம்ப பிடிக்குமோ, அந்த ஒரு பொருளை மட்டும், இந்த அலோ வேரா ஜெல் லோடு சேர்த்து கலந்து பேக்காக உங்களுடைய தலைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஹேர் பேக்கை அப்ளை செய்வதற்கு முன்பாக தலையில் இருக்கும் சிக்கு அனைத்தையும் எடுத்து விட வேண்டும். தலையில் கட்டாயமாக நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயை அப்ளை செய்து கொள்ள வேண்டும். அதன் பின்புதான் ஹேர் பேக் அப்ளை செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீங்க ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.