கற்றாழைச் செடியை வாசல் முன் வளர்க்கக்கூடாதா?

aloe-vera1

கற்றாழை செடியை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. கற்றாழையின் மகத்துவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது என்றே கூறலாம். அவ்வளவு அரிய பயன்களை தரும் இந்தச் செடியை ஆன்மிக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் எடுத்துக் கொண்டோமேயானால் அபரிமிதமான பலன்களை தரவல்லது. இதனை சோற்றுக்கற்றாழை என்று அழைக்கின்றனர். கற்றாழையின் சிறப்பம்சங்கள் மற்றும் ஏன் கற்றாழைச் செடியை வீட்டு வாசல் முன் வளர்க்கக்கூடாது என்று கூறுகின்றனர் என்பதை பற்றி அலசும் பதிவு தான் இது.

kan-thirushti

பெரும்பாலான வீடுகளில் திருஷ்டி பரிகாரத்திற்கு கற்றாழைச் செடியை வேரோடு பிடுங்கி வாசலில் தொங்க விட்டிருப்பார்கள். இப்படி செய்வதன் மூலம் எந்தவித கண் திருஷ்டியும் அந்த வீட்டில் இருப்பவர்களை அணுகாது என்று நம்பப்படுகிறது. காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி பல மாதம் வரை உயிர் வாழக்கூடிய தன்மை கொண்டது இந்த கற்றாழைச் செடி. எனவே இதை வீட்டுவாசலில் கட்டினாலும் பல மாதம் வாடாமல் அப்படியே இருக்கும்.

இந்த கற்றாழைச் செடி தன்னுள் நிலத்தடி நீரை உறிஞ்சி தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. மேலும் இது ஒரு முறை நட்டு வைத்தால் புதர் போல் மண்டி வளரக்கூடியது. அவ்வாறு புதர் போன்று மளமளவென வளர்வதால் விஷ ஜந்துக்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதனால்தான் இதனை வீட்டு வாசல் முன் வைக்கக் கூடாது என்று கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல் இந்த செடிக்கு வெப்பநிலையை சீராக்கும் ஆற்றல் இருக்கிறது. இதனால் பலவிதமான பூச்சிகளை வரவழைக்க ஏதுவாக அமைந்து விடுகிறது. இதனால் குழந்தைகள் விளையாடும்போது ஆபத்து நேரலாம் என்பதற்காக வீட்டு வாசல் முன் வளர்க்கக்கூடாது என்று கூறப்படுகிறது. மேலும் அதன் தழையின் ஓரத்தில் இருக்கும் முள் குழந்தைகளின் கைகளில் காயம் ஏற்படுத்தி விடக்கூடாது என்ற காரணமும் இதனுள் அடங்கி இருக்கிறது. நம் முன்னோர்கள் எதைக் கூறினாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்பது இதிலிருந்து தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? எனவே இதை செய்யாதே அதை செய்யாதே என்று எதையாவது கூறினால் அதை அலட்சியம் செய்யாமல் எதனால் அப்படி கூறப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வது நல்லது.

கற்றாழை செடியில் இருக்கும் மருத்துவ குணங்கள் எண்ணற்றவை. அதிலும் குறிப்பாக உடல் உஷ்ணத்தைத் தணிக்கக் கூடிய அபரிமிதமான சக்தி தன்னகத்தே கொண்டுள்ளது. நன்கு முற்றிய ஒரு சோற்றுக்கற்றாழையை எடுத்து அதனுள் இருக்கும் வெண்மையான பகுதியை பிரித்தெடுத்து நல்ல தண்ணீரில் நன்றாக பல முறை அலசி விட்டு மோருடன் கலந்து உட்கொள்வதால் உடம்பில் உள்ள உஷ்ணம் குறையும். உடல் வெப்பநிலை சீராகி பல நோய்களிலிருந்து நம்மை காத்தருள்கிறது.

- Advertisement -

ஒரு மனிதனுக்கு தேவையான அத்தனை அமினோ அமிலங்களும் கற்றாழை செடியில் நிறைந்துள்ளது வியக்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. கற்றாழையை முறையாக பயன்படுத்தினால் இளமை மாறாமல் இருக்கலாம் என்று சித்தர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கற்றாழை சரும பராமரிப்பு, மருத்துவ குணங்கள், ஆன்மீகப் பயன்கள் என்று அனைத்து விதமாகவும் உபயோகப்படுகிறது.

aloe-vera

கற்றாழையை சர்க்கரை நோயாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு மருந்து உட்கொள்வோர், கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக் கொள்வது நல்லது.

இதையும் படிக்கலாமே
உங்களை முன்னேற விடாமல் தடுக்கும் எதிரிகளை எப்படி எதிர்ப்பது? சாணக்கியர் கூறும் நீதி.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Aloe vera secrets in Tamil. Aloe vera palangal in Tamil. Aloe vera payangal in Tamil. Sothu kathalai maruthuvam Tamil.