உங்களை முன்னேற விடாமல் தடுக்கும் எதிரிகளை எப்படி எதிர்ப்பது? சாணக்கியர் கூறும் நீதி.

Chanakya

நம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது சிலருக்கு பிடிக்காமல் இருக்கும். அவர்களையே நம்முடைய எதிரிகளாக காண்போம். இந்த எதிரிகள் என்பது மனித உருவில் இருக்கும் எதிரிகளையும் குறிக்கும். நம் மனதிற்குள் நம்மை முன்னேற விடாமல் தடுக்கும் எண்ணங்களையும் கூட ‘எதிரி’ என்று தான் கூறுவார்கள். உங்களை முன்னேற விடாமல் தடுக்கும் மனித உருவில் இருக்கும் எதிரிகளாக இருந்தாலும் சரி. உங்கள் எண்ணங்களில் இருக்கும் எதிரிகளாக இருந்தாலும் சரி. அவைகளை எப்படி எதிர்ப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவு.

Chanakya

பயம் இல்லாமல் வாழவேண்டும்:
உங்களை முன்னேற விடாமல் முதலில் தடுப்பது உங்களுக்குள் இருக்கும் பயம் தான். உங்கள் எதிகளை கண்டு நீங்கள் பயந்து ஓடினால், அவர்கள் உங்களை விடாமல் துரத்திக் கொண்டுதான் இருப்பார்கள். ஒருமுறை உங்களது மனதில் இருக்கும் பயத்தை தூக்கி எறிந்துவிட்டு தைரியமாக திரும்பி நின்று பாருங்கள். உங்கள் எதிரிகள் உங்களை கண்டு பயப்படுவார்கள். உங்கள் எதிரிகள் உங்களுக்கு செய்யும் சூழ்ச்சியை கண்டு பயப்படாமல் இருப்பதே, அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் பெரிய தண்டனை தான். பயத்துடன் நாம் ஒரு முயற்சியில் ஈடுபடுவதற்கும், தைரியமாக ஒரு முயற்சியில் ஈடுபடுவதற்கும் வித்தியாசம் அதிகமாகவே இருக்கும். மனதில் பயத்தை வைத்துக்கொள்ளும் ஒருவரால் கஷ்டத்தை எதிர்த்துப் போராட முடியாது. பயம் உங்களுக்குள் வருவதற்குள், அதை நீங்கள் விரட்டி அடித்து விடுங்கள் என்கிறது சாணக்கிய தத்துவம்.

இன்று சாதிக்க வேண்டும் என்று செயல்படுங்கள்:
ஒரு மனிதனின் மன நிலமையானது வெற்றி அடையும்போது ஒரு விதமாக இருக்கும். அதுவே தோல்வியை அடைந்துவிட்டால், அந்த மன நிலமையில், அவரால் எதையுமே சாதிக்க முடியாது. உங்களுடைய தோல்வியை காணும் எதிரிகளுக்கு சந்தோஷம் அதிகமாகத்தான் இருக்கும். அந்தசமயம் எதிரிகளுக்கு உங்களது மௌனத்தையே பதிலாக கொடுங்கள். நமக்கு கெட்ட காலம் வரும்போது பொறுமையுடன் தான் செயல்பட வேண்டும். நாளை என்ன நடந்துவிடுமோ என்று பயப்படவும் வேண்டாம். நேற்று நடந்ததை நினைத்து வருத்தப்படவும் வேண்டாம். இறந்துபோன நேற்றைய நாட்கள், பிறக்காத நாளைய நாட்கள், இன்று மட்டுமே நிஜம் என்பதை மனதில் கொண்டு, நிகழ்காலத்தில் வாழுங்கள் என்று கூறுகிறது சாணக்கிய தத்துவம்.

மகிழ்ச்சியோடு வாழ்வது:
நமக்கு கஷ்டம் ஏற்படும்போது தானே நமது எதிரிகளுக்கு சந்தோஷம் அதிகமாக இருக்கும். நம்முடைய எதிரியின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டுமென்றால் நம் கையில் இருக்கும் முதல் ஆயுதம் நம்முடைய மகிழ்ச்சிதான். நம்மை வருத்தப்பட வைக்க வேண்டும் என்பதுதானே எதிரிகளின் சூழ்ச்சி. சூழ்ச்சியை முறியடித்து மகிழ்ச்சியோடு இருந்தால், ‘யாரால் நன்மை என்ன செய்துவிட முடியும்’. இந்த இடத்தில் உங்கள் எதிரி தான் தோல்வியை அடைவார். ஆகவே உங்களுடைய மகிழ்ச்சியே உங்கள் எதிரிக்கு நீங்கள் கொடுக்கும் தண்டனை என்கிறது சாணக்கிய தந்திரம்.

- Advertisement -

உங்களுக்கு மனோபலம் இருப்பதாக காட்டிக் கொள்ளுங்கள்:
பலம் கொண்டவர்கள் தான், பலவீனம் உடையவர்களிடம் சண்டைக்கு வருவார்கள்.  உங்களையே நீங்கள் பலம் உள்ளவர்களாக மாற்றிக் கொண்டால், உங்கள் எதிரிகள் பலவீனமாகி விடுவார்கள் அல்லவா? நம் மனதிற்குள் நம்மை அறியாமலேயே ஏதாவது ஒரு பயம் இருந்தால் கூட அதை எதற்காக வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும்? தைரியமாக இருப்பது போல் நம்மை வெளிக்காட்டிக் கொண்டாலே போதும். நம் எதிரிகளுக்குப் பயம் தானாக வந்துவிடும். எதிரிகளிடம் உங்களை வலிமையானவர்களாக சித்தரித்து கொள்ளுங்கள் என்று கூறுகிறது சாணக்கிய தத்துவம்.

Chanakya

இந்த சாணக்கிய தத்துவங்களை உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை உபயோகப்படுத்தி தான் பாருங்களேன், உங்களுக்கு கிடைக்கும் வெற்றியை. இந்த சாணக்கிய ரகசியங்களை உங்களுக்குள் ரகசியமாக வைத்துக் கொண்டு உங்கள் எதிரிகளை எதிர் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.

இதையும் படிக்கலாமே
வலம்புரிச் சங்கை இப்படி பிரதிஷ்டை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Edhirigalai vella chanakyar koriyathu Tamil. Ethirigalai vellum chanakya neethi Tamil. Edhirigalai ventru munnera chanakya neethi. How to handle your enemies Tamil.