நீங்கள் காபிக்கு அடிக்க்ஷனா இருக்கீங்களா? அதிக அளவு காபி ஆபத்தானது தெரியுமா? காபிக்கு பதிலா ஆரோக்கியமா இதை ட்ரை பண்ணுங்க, காபி மாதிரியே தான் இருக்கும்.

malli-coffee
- Advertisement -

2020 ஆம் ஆண்டில் இத்தாலிய காபி பிராண்ட் ஒன்று எடுத்த் கணக்கெடுப்பின்படி உலகில் 94% சதவீதம் பேர் தங்களுடைய நாளை காபியை குடித்து தொடங்குகிறார்கள் என்றும், அதில் 50 சதவீதம் பேர் அதற்கு அடிமையாக இருக்கிறார்கள் என்றும் கண்டறிந்துள்ளனர். காபியில் இருக்கும் கஃபைன் குறைந்த அளவு எடுத்துக் கொள்ளும் பொழுது ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் அதிகமாகும் பொழுது, அதாவது காபி குடிக்கும் எண்ணிக்கை அதிகமாகும் பொழுது ஆரோக்கியத்திற்கு பிரச்சினை வருகிறது.

காபியில் இருக்கும் இந்த கஃபைன் உடலுக்கு உடனடி எனர்ஜி கொடுக்கிறது. இதனால் பருகியதும் சுறுசுறுப்பாக நாம் உணருகிறோம். இந்த கஃபைன் சாக்லேட், கோலா, எனர்ஜி ட்ரிங்க்ஸ், டீ போன்றவற்றிலும் காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது. அதிகளவு கஃபைன் எடுத்துக் கொள்ளும் பொழுது அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். அதே போல இதயத்துடிப்பின் வேகம் கணிசமாக அதிகரிக்கும். இதனால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். இத்தகைய ஆபத்தான பானமாக இருக்கும் காபியை கூடுமானவரை தவிர்ப்பது தான் நல்லது.

- Advertisement -

எப்போதாவது காபி குடிப்பதால் பிரச்சனை இல்லை ஆனால் ஒரு நாளைக்கு நாலு கப், ஐந்து கப் காபிகள் கூட சிலர் குடிப்பது உண்டு. இத்தகையவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இது முதலில் நம்முடைய மைய நரம்பு மண்டலத்தை தூண்டி, மூளையில் இருக்கும் நரம்புகளை பாதிக்க செய்யும். இதனால் ரத்த அழுத்தம் ஏற்படும். ஏற்கனவே ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காபியை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இது மேலும் உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.

அது மட்டுமல்லாமல் காபி குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் திடீரென அதிக அளவில் காபி குடித்தாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்களும் அதிக அளவில் காபி குடிப்பவர்களாக இருப்பார்கள். காபி குடித்தால் தூக்கம் வருவதில் இடைஞ்சல் ஏற்படும். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கோப்பைகளுக்கு மேலே காபி அருந்தக்கூடாது. அப்படி நீங்கள் காபி அருந்தினால் உங்களுடைய ஆயுட்காலம் கண்டிப்பாக குறைந்து விடும்.

- Advertisement -

சரி இந்த காபிக்கு அடிமையானவர்கள் எப்படி அதிலிருந்து மீள்வது?
அரை கிலோ அளவிற்கு தனியா விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இதை வாணலியில் போட்டு லேசாக வாசம் வர வறுத்துக் கொள்ளுங்கள். தனியா வறுபட்டதும் அதில் அதே அளவிற்கு அரை கிலோ சர்க்கரை சேர்த்து கரைய விடுங்கள். சர்க்கரை உருகி பழுப்பு நிறமாக மாறும். பின்னர் நன்கு கரைந்து கொதித்த பின்பு அடுப்பை அணைத்து நன்கு ஆறவிட்டு விடுங்கள். இது கெட்டியாக மாறிவிடும். இந்த உலர்ந்த கெட்டியான சர்க்கரை மற்றும் தனியா துண்டுகளை உடைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக பவுடர் போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை ஒரு பாட்டில் அல்லது காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் காபி குடிக்கும் எண்ணம் ஏற்படும் பொழுது பால் அல்லது தண்ணீர் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு கப் அளவிற்கு கொதிக்க விடுங்கள். கொதிக்கும் தண்ணீரில் தேவையான அளவிற்கு இந்த தனியா-சர்க்கரை தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் இந்த பானத்தை பருகி வர, காபியின் மீது இருக்கும் மோகம் மறையும். ஆரோக்கியமான இந்த பானம் உங்களுக்கு கூடுதல் ஆயுளை நீட்டிக்க செய்யும்.

- Advertisement -