உன் அம்மா இறந்து விட்டார்கள் வீட்டிற்கு விரைவாக திரும்பு -மே.இ வாரியம் – நான் போட்டியை முடித்துவிட்டு செல்கிறேன் – நெகிழ்ச்சியான தருணம்

joseph

இங்கிலாந்து அணி தற்போது மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி ஆண்டிகுவா நகரில் நடந்தது.

alzaari

இந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கும் முன் மேற்கு இந்திய தீவுகள் அணியை சேர்ந்த வீரரான அல்சாரி ஜோசப் அவர்களின் அம்மா இறந்ததாக தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அவரை வீட்டிற்கு செல்ல கிரிக்கெட் வாரியம் அறிவித்தது அவருக்கு பதிலாக மாற்று வீரரை அணி விளையாட யோசனை சொன்னது. ஆனால், ஜோசப் நான் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு செல்கிறேன் என்று தொடர்ந்து விளையாடினார்.

alzari

இதனை இரு அணி வீரர்களும் கண்டு அவரை தேத்தினர். இரு அணி வீரர்களும் துக்கத்தை தெரிவிக்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

இதையும் படிக்கலாமே :

நாம ஜெயிச்சிட்டோம். பலே பலே மாஸாக வெற்றியை கொண்டாடிய தவான். என்ன சார் இப்படி பண்றிங்க

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்