நாம ஜெயிச்சிட்டோம். பலே பலே மாஸாக வெற்றியை கொண்டாடிய தவான். என்ன சார் இப்படி பண்றிங்க

dhawan

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி வெலிங்டன் நகரில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி. பேட்டிங்கை முதல் 10 ஓவர்களில் இந்திய அணி சரியாக விளையாடாமல் முதல் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது.

hitman

பிறகு பின்வரிசை வீரர்களின் அதிரடியால் இந்திய அணி 252 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பில் ராயுடு 90, ஷங்கர் மற்றும் பாண்டியா 45 ரன்கள் ஷங்கர் நியூசிலாந்து பாண்டியா ஹென்றி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு நியூசிலாந்து அணி 253 ரன்கள் என்ற இலக்கினை எதிர்த்து விளையாடியது. நியூசிலாந்து அணி 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

வெற்றியை இந்திய அணி வீரர்கள் கொண்டாடிய நிலையில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ஷிகார் தவான் மைதானத்தில் நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பஞ்சாபி முறையில் நடனமாடி ரசிகர்களுடன் தனது மகிழ்ச்சியை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார்.

இந்திய அணியின் இந்த வெற்றியினை உலகின் உள்ள பல்வேறு கிரிக்கெட் வீரர்களும், விமர்சகர்களும் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் இந்திய அணியை வாழ்த்தி வருகின்றனர். இந்திய அணி தற்போது பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

இதையும் படிக்கலாமே :

என்னப்பா இப்படி பண்ணிட்டீங்க. இந்திய அணியை புகழ்ந்து தள்ளிய விராட் கோலி – ட்விட்டர் பதிவு

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்