இன்று பங்குனி வளர்பிறை ஏகாதசி – இதை செய்தால் மிகுதியான பலன் உண்டு

vishnu
- Advertisement -

தமிழ் வருடங்களில் இருக்கும் 12 மாதங்களில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு திதி தினமாக வருகிறது. அப்படி அனைத்து மாத காலங்களிலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் 11 ஆவது திதி தினமாக வருவது ஏகாதசி திதி தினமாகும். ஏகாதசி திதி பெருமாள் வழிபாட்டிற்குரிய திதி தினமாகும். அதிலும் பங்குனி மாதத்தில் வருகிற வளர்பிறை ஏகாதசி மிக சிறப்பான ஒரு தினமாகும்.

vishnu

பங்குனி மாதத்தில் வருகிற வளர்பிறை ஏகாதசி திதி ஆமலகி ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. ஆம்லா என்றால் வடமொழியில் நெல்லி என்று பொருள். இந்த பங்குனி வளர்பிறை ஏகாதசி தினத்தில் லட்சுமி தேவியின் அம்சமான நெல்லி மரத்திற்கடியில் பூஜைகள் செய்து வழிபடுவதால் இதற்கு ஆமலகி ஏகாதசி என்று பெயர் உண்டானது.

- Advertisement -

இந்த பங்குனி வளர்பிறை ஏகாதசி தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளை வழிபட்ட பின்பு, வீட்டிற்கு வந்து பெருமாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபமேற்ற வேண்டும். பின்பு உங்கள் வீட்டிலோ அல்லது அருகில் எங்கேனும் நெல்லி மரம் இருக்கும் பட்சத்தில் அம்மரத்திற்கு தீப ஆராதனை காட்டி, லட்சுமி தேவியின் மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். உடல் நிலை நன்கு உள்ளவர்கள் இத்தினத்தில் காலை முதல் மாலை வரை எதுவும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும் அல்லது துளசி இலைகள் இடப்பட்ட தீர்த்த நீரை அருந்தி விரதம் இருக்கலாம்.

keezhanelli

அன்றைய நாள் முழுவதும் பெருமாளுக்குரிய மந்திரங்கள், விஷ்ணு புராணம் போன்றவற்றை பாராயணம் செய்வது நல்லது. மாலையிலும் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்பு வீட்டிற்கு திரும்பி பால் பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். மேலும் இந்த ஆமலகி ஏகாதசி தினத்தன்று ஒரு கலசத்தில் ஏழு வகையான தானியங்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து, மகாவிஷ்ணுவை வழிபட்டால் நீங்கள் ஈடுபடும் அனைத்து காரியங்களும் சிறப்பான வெற்றிகளை பெற்று மிகுந்த நன்மைகளை உண்டாக்கும். உங்களுக்கு வாழ்வில் கடன், பணப்பற்றாக்குறை போன்றவை ஏற்படாமல் தடுக்கும். ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலன் கிடைக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
தொழில், வியாபாரம் சிறக்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Amalaki ekadasi in Tamil. It is also called as Panguni valarpirai ekadasi in Tamil or Panguni matham in Tamil or Ekadasi thithi in Tamil.

- Advertisement -