- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

எத்தகைய தீயதையும் போக்கும் அமானுஷ்ய பரிகாரம் பற்றி தெரியுமா ?

அமானுஷ்யம் என்ற சமஸ்கிருத சொல் மனித சக்திகளை மீறியது என்ற பொருள் கொண்டதாகும். இந்த உலகத்தில் நாம் கண்களால் காணமுடிந்த விடயங்களை மட்டுமே நம்புகிறோம். ஆனால் நம்மையும் மீறிய சில எதிர்மறை ஆற்றல்கள் உலகெங்கிலும் உள்ளன. அது சிலசமயங்களில் சிலரின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தி, அவர்களுக்கு பலவகையான துன்பங்களை தருகின்றது. அந்த அமானுஷ்ய தாக்கங்களை முறியடிக்கும் பரிகார முறைகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நமது வீடு மற்றும் தொழில் வியாபார கூடங்களில் துஷ்ட சக்திகள் ஏதேனும் இருந்தால் அதன் காரணமாக வியாபார மந்த நிலை, லாபமின்மை, கடன் சுமை, அக்கம்பக்கத்தவர்களுடன் பிரச்சனைகள் போன்றவை ஏற்படும். இதை தடுக்க உங்கள் வீடு தொழில் கூடம் போன்ற இடங்களில் 8 அல்லது அதற்கும் மேற்பட்ட காய்ந்த கற்பூரவள்ளி இலைகளை கொளுத்தி, அதை உங்களுக்கு வேண்டிய அனைத்து இடங்களிலும் தூபம் காட்டினால் எப்படிப்பட்ட துஷ்ட சக்திகளும் நீங்கும்.

- Advertisement -

தேவையில்லாத பிரச்சனைகள், விவகாரங்கள் நம்மை அவ்வப்போது தொல்லைப்படுத்திவந்தால், அந்த பிரச்சனையையோ அல்லது அந்த பிரச்சனையை ஏற்படுத்தும் நபரின் பெயரையோ ஒரு வெள்ளை தாளில் எழுதி, அத்தாளை சிறிதாக மடித்து உங்கள் ஷூ அல்லது செருப்புக்குள் வைத்து, அதை அணிந்து கொண்டு இரவு 8 மணிக்கு மேல் தெருவில் சில அடிதூரம் நடந்த பின்பு, வீட்டிற்கு வெளியே ஒரு பள்ளம் தோண்டி அக்காகிதத்தை புதைத்து விடவேண்டும். இதனால் உங்களுக்கு ஏற்படும் பிரச்சனையின் எதிர்மறை தன்மையை பூமி ஈர்த்து கொண்டு எவ்விதமான பிரச்சனைகளும் விலகும்.

உங்களின் வீட்டில் மருதாணி செடியை வளர்த்தாலும், அல்லது வாரமொருமுறை மருதாணி செடியின் இலைக்கொத்துகளை வீட்டின் வாயிலில் தொங்கவிடுவதால் வீட்டினுள் எவ்வித தீய சக்திகளும் எதிர்மறையதிர்வுகளும் நுழையாதவாறு தடுக்கும். வாரமொரு முறை வீட்டின் நீர்தொட்டிகளை நன்றாக கழுவி சுத்தம் செய்வதால் வீட்டிலிருப்பவர்களின் உடலாரோக்கியம் மேம்படும் பண முடக்கம் ஏற்படாமல் தடுக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
தீர்த்த யாத்திரை செல்வதால் ஏற்படும் பலன்கள் பற்றி தெரியுமா?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள், ஜோதிட குறிப்புகள் என பலவற்றை அறிய தெய்வீகம் மொபைல் ஆப் – ஐ டௌளோடு செய்துகொள்ளுங்கள்.

English Overview:
Here we described the Amanushya pariharam in Tamil. We explained three different Amanushya pariharam which will be very useful.

- Advertisement -