தீர்த்த யாத்திரை செல்வதால் ஏற்படும் பலன்கள்

Ayyappan

மனிதனை அவனின் தற்போதைய நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு உயர்த்துவதே அனைத்து மதங்களின் நோக்கமாக இருக்கின்றன. இன்று உலகில் இருக்கும் எல்லா மதங்களும் அந்த மதங்களை பின்பற்றுவர்களுக்கு சில கடமைகளை வலியுறுத்தியுள்ளன. அதில் ஒன்று தான் புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்வது ஆகும். நமது “சனாதன தர்மமாகிய” “இந்து மதத்தில்” இதை “தீர்த்த யாத்திரை” மேற்கொள்ளுதல் என கூறுவர். இந்த தீர்த்த யாத்திரை மேற்கொள்வதற்கான காரணங்களையும், அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றியும் இங்கு அறிந்து கொள்வோம்.

ganga

நமது இந்து மதத்தில் பன்நெடுங்காலமாகவே “காசி, ராமேஸ்வரம், கயிலாயம்” போன்ற புனித தலங்களுக்கு வாழ்வில் ஒரு முறையேனும் சென்று தரிசிக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இந்த புனித பயணத்தை தீர்த்த யாத்திரை செல்லுதல் என்று கூறுவதற்கு சில காரணங்களும் இருக்கின்றன. இந்து மதத்தில் தண்ணீர் ஒரு முக்கிய இடம் பெறுகிறது. இந்த தண்ணீர் தாவரங்கள், மனிதர்கள், இன்ன பிறவுயிர்கள் வாழ அவசியமாக இருக்கின்றன. மேலும் தண்ணீர் எதையுமே தூய்மைப்படுத்தும் ஆற்றல் உடையது. புனித நதிகள் மற்றும் கடல் நீர் ஒரு மனிதனின் எத்தகைய பாவங்களையும் போக்க வல்லது.

இதன் காரணமாகவே நீர் என்பது இறைத்தன்மை கொண்ட ஒரு பஞ்சபூதமாக கருதப்பட்டு இந்து மதத்தில் இறைவனுக்குரிய வழிபாடு மற்றும் சடங்குகளில் ஒரு முக்கிய இடம் நீருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே பெரும்பாலான இந்து மத கோவில்கள் ஏதேனும் ஆறு, கடல், எரிக்கரைகளின் ஓரத்திலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் வைணவ மத கடவுளான “நாராயணன்” பாற்கடலில் வசிப்பவர் என்பது பெரும்பாலானவர்கள் அறிந்ததே. இந்த நாராயணன் ஒவ்வொரு புண்ணிய தல தீர்த்தம் எனப்படும் நீர்நிலையில் வசிப்பதாகவும் அங்கு சென்று வழிபடும் போது அந்த நாராயணனான “மகாவிஷ்ணுவின்” அருளாசி ஒருவருக்கு கிடைப்பதாகவும் கருதப்படுகிறது. இத்தகைய புண்ணிய தீர்த்தம் எனப்படும் நீர்நிலைகளுக்கு அருகிலுள்ள கோவில்களுக்கு சென்று வழிபடுவதால் இது தீர்த்த யாத்திரை என அழைக்கப்படுகிறது.

Thiruchendur Murugan Temple

மேலும் இத்தகைய புண்ணிய தீர்த்தங்களுக்கு பல நூறு ஆண்டுகளாக பல ஞானிகள் சென்று வழிபட்டு வருவதால், அவர்களின் நேர்மறையான சக்தி அதிர்வுகள் அக்கோவிலையும் அதை சார்ந்த பகுதிகளிலும் நிறைந்திருக்கும். இப்படிப்பட்ட கோவில்களில் இருக்கும் நீர்நிலைகளில் தலை முழுகி குளித்து, முடித்து அந்த ஆலயங்களின் இறைவனை வழிபடுவதால் நமது பாவங்கள் நீங்குகிறது. பிறப்பு, இறப்பு எனும் சுழற்சியை தீர்ப்பதற்கான வழியையும் அந்த இறைவன் காட்டுவார்.

இதையும் படிக்கலாமே:
பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு எத்தகைய சக்தி உண்டு தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we described what is Theertha yathra and Theertha yathra benefits in Tamil.