அமாவாசை அன்று இந்த தூபம் போட்டால், வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் வெளியேற்றப்படும். முன்னோர்கள் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.

amavasai
- Advertisement -

அமாவாசை தினத்தன்று நல்ல சக்திகளின் நடமாட்டமும் ஆதிக்கமும் எந்த அளவிற்கு உள்ளதோ, அதே அளவிற்கு கெட்ட சக்திகளின் நடமாட்டமும் அதிகமாக தான் இருக்கும். நம்முடைய வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியான எதிர்மறை ஆற்றலை விரட்டியடிக்க, பித்ருக்கள் சந்தோஷமாக நம் வீட்டிற்குள் வருகை தர, நம்முடைய வீட்டில் எந்த தூபம் போட வேண்டும் என்பதைப்பற்றிய ஆன்மீக ரீதியான தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

amavasai

நம்முடைய வீட்டில் பொதுவாகவே வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை அன்று வீடு முழுவதும் வாசனையாக இருக்க, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் வெளியேற்றப்பட சாம்பிராணி தூபம் போட வேண்டும். குறிப்பாக அமாவாசை தினத்தன்று நம்முடைய வீட்டில் தலைதூக்கும் கெட்ட சக்திகளை வெளியேற்ற வேண்டும் என்றால் வெள்ளருக்கன் வேரின் தூபம் போட வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

வெள்ளெருக்கு வேரினை எடுத்து காயவைத்து பொடி செய்யது தயாரிக்கப்படுவது தான் வெள்ளெருக்கன் வேர் பொடி. நம்மால் வெள்ளருக்கன் வேரிலிருந்து, வேரை எடுத்து பொடி செய்வது என்பது முடியாத காரியம். ஆகையால் இந்த வெள்ளருக்கன் வேர் பொடியை நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

Vellerukkam

எப்போதும் போல உங்களுடைய வீட்டில் நெருப்பு மூட்டி, அதில் சாம்பிராணி புகையை போட்டு, அதன் மேலே கொஞ்சமாக இந்த வெள்ளெருக்கன் வேர் பொடியையும் தூவி விட்டு விட வேண்டும். இந்த புகையை உங்கள் வீடு முழுவதும் எல்லா இடங்களிலும் காட்டுங்கள். இந்த வெள்ளெருக்கன் வேர் புகை வீடு முழுவதும் பரவும் போது மூலைமுடுக்குகளில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல் கூட விலகிவிடும்.

- Advertisement -

பித்ருகாரகன் என்று சொல்லப்படும் வெள்ளெருக்கன் வேர் புகையின் வாசத்திற்கு, நம்முடைய வீட்டிற்குள் நம்முடைய முன்னோர்கள் சந்தோஷமாக வருவார்கள். வெள்ளெருக்கன் வேரின் மகிமை பித்ருக்களுக்கு மட்டுமல்ல. குலதெய்வம் நம்முடைய வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தால், வீட்டிற்குள் வருவதற்கு ஏதாவது தடை இருந்தால் அந்தத் தடையைத் தகர்க்க கூடிய சக்தியும் இந்த வெள்ளருக்கன் வேருக்கு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது.

dhupam

வெள்ளருக்கன் வேரில் இருந்து எடுக்கப்பட்ட பொடியாக இருந்தாலும் சரி, அல்லது வெள்ளெருக்கன் வேர் ஆகவே கிடைத்தாலும் அதை நன்றாக உலர வைத்து பயன்படுத்திக் கொண்டாலும் சரி, வெள்ளருக்கன் இலைகள் கிடைத்தாலும் அதனை காய வைத்து பொடி செய்து எடுத்துக்கொண்டாலும் சரி இதில் எதை வேண்டுமென்றாலும் நீங்கள் தூபம் போட பயன்படுத்திக் கொள்ளலாம். அது நம்முடைய வீட்டிற்கு பல நன்மைகளை தரும். குறிப்பாக அமாவாசை தினத்தில் இந்த தூபம் போடுவது பித்ருக்களின் ஆசீர்வாதத்தையும் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தையும் பெற்றுத்தரும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -