அமாவாசை இரவு ஏற்ற வேண்டிய விளக்கு

amavasai
- Advertisement -

பொதுவாகவே இந்த அமாவாசை நாளில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யக்கூடாது என்று சொல்லுவார்கள். காரணம் நமக்கு நிலவு ஒளியானது முழுமையாக மறைந்திருக்கும். மனோ காரகனான நிலவு வெளிச்சம் இல்லாத சமயத்தில் நம்முடைய மனதும் குழப்ப நிலையில் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த அமாவாசை இருட்டில் நம்முடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒரு பரிகாரத்தையும் நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

அமாவாசை இரவு இருளை விலக்கி, விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து, நாம் பிரபஞ்சத்தில் வைக்கும் வேண்டுதல் உடனடியாக பலிக்கும். அதற்கு நாம் அமாவாசை இரவு ஒரு விளக்கை ஏற்றி வைத்து நம்முடைய பிரச்சனைகளை சொல்லி இறைவனிடம் முறையிட வேண்டும். அம்மாவாசை இரவு ஏற்ற வேண்டிய அந்த விளக்கை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவல்களை விரிவாக இன்று இந்த பதிவின் மூலம் நாமும் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

அமாவாசை இரவு ஏற்ற வேண்டிய விளக்கு

10.1.2024 இரவு 8 மணிக்கு அமாவாசை திதியானது பிறந்து விடுகிறது. ஆகவே இந்த விளக்கை இன்று இரவு, அதாவது புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு மேல் இரவு 11.00 மணிக்கு முன்பாக எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் நம்முடைய வீட்டில் ஏற்றலாம். நாளைய தினம் தான் அமாவாசை வழிபாடு செய்ய வேண்டும். 11.1.2024 மாலை 5.30 மணி வரை அமாவாசை திதி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, இன்று இரவு விளக்கு ஏற்ற என்னென்ன பொருட்கள் தேவை. ஒரு பெரிய தாம்பல தட்டு, கொஞ்சமாக பச்சரிசி, 1 ரூபாய் நாணயம், ஒரு அகல் விளக்கு, நல்லெண்ணெய், பஞ்சுத்திரி. இந்த விளக்கு ஏற்ற உங்களுடைய வீட்டின் வெட்ட வெளியான பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும். அமாவாசை இருட்டானது இந்த விளக்கில் பட வேண்டும்.

- Advertisement -

உங்க வீட்டு பால்கனி, மொட்டை மாடி, வெளியில் தோட்டம், பின்பக்கம் தோட்டம் எந்த இடத்தை தேர்ந்தெடுத்தாலும் சரிதான். வீட்டுக்கு வெளியே விளக்கேற்ற இடமே இல்லை, நாங்கள் அப்பார்ட்மெண்டில் குடியிருக்கிறோம் என்றால் ஜன்னல் பக்கமாக ஒரு டேபிள் போட்டு, ஜன்னல் வழியாக இருட்டு உள்ளே வரும் இடத்தில் இந்த விளக்கை ஏற்றலாம்.

முதலில் ஒரு தாம்பூல தட்டை கீழே வைத்து, அதில் ஒரு கைப்பிடி பச்சரிசியை போட்டு, அந்த பச்சரிசிக்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வையுங்கள். அந்த ஒரு ரூபாய்க்கு மேலே மண் அகல் விளக்கு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி விடுங்கள். கும்மிரட்டில் நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் இந்த விளக்கு பிரகாசமாக எரியும். அந்த தீபச்சுடருக்கு முன்பாக அமர்ந்து உங்களுடைய கஷ்டத்தை இந்த பிரபஞ்சத்திடம் சொல்லுங்கள். குலதெய்வத்திடம் சொல்லுங்கள்.

- Advertisement -

முன்னோர்களை நினைத்து சொல்லுங்கள். 10 லிருந்து 15 நிமிடம் உங்களுடைய பிரார்த்தனையை வைத்தால் போதுமானது. அதன் பிறகு அந்த விளக்கு ஒரு மணி நேரம் எரிந்தாலும் தவறு கிடையாது எரியட்டும். உங்களுடைய வேண்டுதலை நிறைவு செய்து கொள்ளுங்கள் அவ்வளவுதான் வழிபாடு முடிந்தது. அந்த விளக்கு எரிந்து முடிந்த பிறகு மறுநாள் காலை கூட வந்து நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

மறுநாள் அந்த தட்டில் இருக்கும் பச்சரிசியை காக்கை குருவிகளுக்கு போட்டு விடுங்கள். இந்த அமாவாசை திதி இரவில் இந்த அடர் இருட்டில் தீப ஒளியில் நீங்கள் வைக்கக் கூடிய வேண்டுதல் அந்த விளக்கு எரிந்து முடிவதற்குள் நிறைவேறும் என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் நீங்கள் வைக்கக் கூடிய வேண்டுதலை எந்த மன சஞ்சலமும் இல்லாமல், இது நடந்தே தீரும் என்று வையுங்கள்.

இதையும் படிக்கலாமே: அனுமன் ஜெயந்தி அன்று செய்ய வேண்டிய தானம்

குறிப்பாக ஏதாவது ஒரு கோரிக்கையை வைத்து இந்த விளக்கை ஏற்றி பாருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். விளக்குக்கு கீழே வைத்திருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து சுப செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவும் மார்கழி மாதம் வந்திருக்கக் கூடிய இந்த அமாவாசை தினத்தில் இந்த பரிகாரம் செய்வது நமக்கு நிறைய நன்மைகளை தரும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -