அனுமன் ஜெயந்தி அன்று செய்ய வேண்டிய தானம்

hanuman dhanam
- Advertisement -

நாம் வணங்கக் கூடிய ஒவ்வொரு தெய்வங்களும் அதிசக்தி வாய்ந்தவை தான். அந்த தெய்வங்களை வணங்குவதற்குரிய நாளில் வணங்கும் போது அதற்கான பலன் பெருமளவு கிடைக்கும். அந்த வகையில் ஒவ்வொரு தெய்வங்களும் அவர்கள் அவதரித்த நாளில் அவர்களை போற்றி வணங்கும் போது நாம் பலவிதமான நன்மைகளை பெற முடியும். வாயுப்புத்திரன் அனுமன் ராமனின் பரம பக்தனாக விளங்கி, இராமன் உடன் துணை நின்ற தெய்வம்.

ராமாவதாரத்தில் ராமருடன் இருந்த அனைவருக்கும் தேவலோகத்தில் இடம் அளிக்கும் போது அனுமன் மட்டும் இந்த பூலோகத்தில் மானிடர்களுக்கு அருள் பாளிக்க அருள் புரியுங்கள் என்று கேட்ட அற்புதமான கடவுள். இவர் அனுமன் அவதரித்த நாளான அனுமன் ஜெயந்தி அன்று நம்முடைய பிரச்சனைகள் தீர எப்படி வழிபாடு செய்வது பற்றியும் அன்றைய நாளில் செய்ய வேண்டிய தான முறைகளை பற்றியும் இந்தப் ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

அனுமன் ஜெயந்தி அன்று செய்ய வேண்டிய தானம்

இந்த வருடம் அனுமன் ஜெயித்தியானது 11.1.2024 அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் கீழ் வரும் இந்த தானங்களையும் வழிபாடுகளையும் செய்ய வேண்டும். தீராத கடன் பிரச்சனையாலும் பணப்பிரச்சனையாலும் அவதிப்படுபவர்கள் அனுமன் ஜெயந்தி அன்று வெண்ணை தானம் செய்ய வேண்டும்.

அதே போல் குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை இல்லாமல் எப்போதும் பிரச்சனையில் இருப்பவர்கள் அனுமன் ஜெயந்தி அன்று கருப்பு உளுந்தில் வெங்காயம் போடாமல் வடை செய்து அதை தானமாக கொடுக்க வேண்டும். சனி தோஷம், கிரக தோஷம் ஏழரை சனி, அஷ்டம சனி போன்ற சனியின் எந்த தாக்கமாக இருந்தாலும் அனுமன் ஜெயந்தி அன்று கருப்பு நிற வஸ்திரத்தை தானமாக தர வேண்டும்.

- Advertisement -

வீட்டில் குழந்தைகள் உங்கள் சொல் பேச்சு கேட்க நல்ல முறையில் படிக்க இனிப்புகளை தானமாக வழங்க வேண்டும். எல்லா விதமான தோஷங்களும் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்து சகல சௌபாக்கியமும் கிடைக்க வேண்டும் என்பவர்கள் அனுமன் ஜெயந்தி அன்று நெய் தானம் செய்யுங்கள்.

இந்த தானங்களை நீங்கள் அனுமன் கோவில் ராமர் கோவில் போன்ற இடங்களில் சென்று செய்யலாம். அப்படி செய்ய முடியாதவர்கள் உங்கள் வீட்டில் அருகில் உள்ளவர்களுக்கு கூட இவைகளை தானமாக கொடுக்கலாம். இந்த தானங்களுடன் அனைவரும் ஜெயந்தி அன்று வீட்டில் அனுமன் படம் ராமர் பெருமாள் படம் இருந்தாலும் அந்த படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபம் ஏற்றுங்கள்.

- Advertisement -

இந்த தீபம் வடக்கு பார்த்து எரிய வேண்டும். அனுமனுக்கு மிகவும் பிடித்த பால் பழம் இனிப்பு சர்க்கரை பொங்கல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று வைத்து வணங்குங்கள். இந்த நேரத்தில் தீபத்தின் முன்பாக அமர்ந்து ஓம் வாயுபுத்ராய நமஹ என்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: தங்கம் சேர தங்கமான பரிகாரம்

இந்த கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக மானிடருக்கு நன்மை செய்வதற்காகவே அவதரித்த இந்த அனுமதி ஜெயந்தி என்று இந்த முறையில் வழிபட்டு சகல சௌபாக்கியத்தையும் பெறந்தான் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -