- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇன்று அமாவாசை கடைசி 1 மணி நேர வேண்டுதல்

இன்று அமாவாசை கடைசி 1 மணி நேர வேண்டுதல்

- Advertisement -

நம்முடைய நிம்மதியை கெடுக்கக்கூடிய கஷ்டங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதிலிருந்து உடனடியாக நாம் விடுபட வேண்டும். நிம்மதி கெட்டுப் போய்விட்டால், ஆரோக்கியம் கெட்டுப் போய்விடும். ஆரோக்கியம் கெட்டுப் போய்ட்டால், தூக்கம் கெட்டுப் போய்விடும். இதெல்லாம் கெட்டுப் போய்விட்டால் நாம் வாழ்வதற்கே தகுதி இல்லாதவர்களாக மாறிவிடுவோம். வாழ்க்கை நரகமாக மாறும். இதையெல்லாம் நமக்கு தேவையா.

உங்களுடைய வாழ்க்கையில் உங்கள் மன நிம்மதியை கெடுக்கும் துன்பத்திலிருந்து விடுபட செய்ய வேண்டிய ஒரு எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இன்று அமாவாசை. மதிய நேரத்தில் முன்னோர்களுக்கு படையல் இட்டு திதி தர்ப்பண காரியங்களை எல்லாம் முறையாக செய்து முடித்து இருப்பீர்கள். இன்று மாலை 5 மணியோடு அமாவாசை திதி நிறைவடையவிருக்கிறது.

- Advertisement -

இந்த அமாவாசை திதி முடியும் தருவாயில், இன்று மாலை 4 மணியிலிருந்து 5 மணிக்கு, அமாவாசையின் கடைசி 1 மணி நேரம், இந்த நேரத்தில் திருவாதிரை நட்சத்திரம் சேர்ந்திருப்பது நமக்கு கூடுதல் பலம். இந்த ஒரு மணி நேரத்தில், ஐந்து நிமிடமுமோ, பத்து நிமிடமோ, உங்களால் எவ்வளவு நேரம் முடியுமோ, ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து கண்களை மூடி முன்னோர்களை வணங்கி, முன்னோர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.

இன்று நீங்கள் வாழும் வாழ்க்கை முன்னோர்கள் கொடுத்தது. மறைந்த முன்னோர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, ஈசனை மனதார நினைத்துக் கொண்டு இந்த அமாவாசை திதி முடியும் தருவாயில், என்னுடைய கஷ்டமும் இதோடு முடிந்து போக வேண்டும். இன்றோடு என்னுடைய துன்பத்திற்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதற்கு கடவுளின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று பிரபஞ்சத்திடம் நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வீட்டில் இருந்தால் அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து இந்த வேண்டுதலை வைக்கலாம். பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும் ஊதுபத்தி ஏற்ற வேண்டும் எந்த கட்டாயமும் இல்லை. அமைதியாக அமர்ந்து கண்களை மூடி வேண்டுவது மட்டும் தான் இந்த பரிகாரம்.

வெளியிடங்களில் இருக்கிறீர்கள் அலுவலகத்தில் இருக்கிறீர்கள் எனும் பட்சத்தில் ஒரு நிமிடம் கண்களை மூடி இருந்த இடத்திலிருந்து முன்னோர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு என்னுடைய கஷ்டங்கள் எல்லாம் இன்றோடு முடிந்து போக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டாலும் நிச்சயம் உங்களுக்கான நல்லது நடக்கும்.

- Advertisement -

சிவ சிவ சிவ சிவ சிவ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். இன்று அமாவாசை திதி முடியும் தருவாயில், திருவாதிரை நட்சத்திரம் சேர்ந்து இருப்பதால், இந்த நேரத்திற்கு சக்தி அதிகம். இந்த நேரத்தில் வேண்டும்போது நம்முடைய வேண்டுதல் சீக்கிரம் இந்த பிரபஞ்சத்தை சென்றடையும் நாம் கேட்ட வரங்கள் உடனே கிடைக்கும் என்பதற்காக தான் இந்த வழிபாட்டு முறை.

முன்னோர்களுக்கு அறிந்தும் அறியாமலும் செய்த பாவத்திற்கும் ஒரு மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பாருங்கள். ஏதாவது ஒரு குறிப்பிட்ட வேண்டுதல், ஒரு குறிப்பிட்ட கஷ்டம் சரியாக வேண்டும் என்பதற்காக கூட, நீங்கள் இந்த பிரார்த்தனையை வைக்கலாம் உங்கள் கடன் தீர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வ வசியம் உண்டாக

வருமானம் பெருக வேண்டும் ஆரோக்கிய குறைபாடு சரியாக வேண்டும். நீண்ட நாள் ஆசை கனவு நிறைவேற வேண்டும். வேலை கிடைக்க வேண்டும் எந்த வரம் வேண்டும் என்றாலும் நீங்கள் கேட்டுக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல் நிச்சயம் நம்பிக்கை உள்ளவர்களுக்கு நல்ல பலனை தரும் என்ற தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்