எந்த தெய்வத்தின் அருள் இருக்கிறதோ இல்லையோ நம்முடைய குலதெய்வத்தின் அருள் நமக்கு இருந்தால்தான் நம் வாழ்க்கை நல்லவிதமாக அமையும். ஏன் மற்ற தெய்வங்களின் அருளை பெறுவதற்கு கூட குலதெய்வத்தின் அருள் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். அதனால் தான் பலரும் குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து மேற்கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட குலதெய்வத்தை வசியம் செய்வதற்கு ஆனி அமாவாசை நாளில் செய்ய வேண்டிய ஒரு மந்திர வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
குலதெய்வ வசியம் உண்டாக
எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தில் தடைகள் ஏற்படக்கூடாது என்றால் நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்வோம். அதேபோல் தான் விநாயகப் பெருமானை வழிபாடு செய்து விட்டு அடுத்ததாக நம்முடைய குலதெய்வத்தை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் குலதெய்வத்தின் அருளால் நாம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் நம்மால் வெற்றியைப் பெற முடியும். குலதெய்வ வழிபாட்டிற்கு பிறகு தான் மற்ற தெய்வ வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்று கூட கூறப்படுகிறது. சாதாரணமாக நாம் ஏதாவது ஒரு தெய்வத்தை நினைத்து விரதம் இருக்க போகிறோம் என்றால் கூட முதலில் விநாயகப் பெருமானையும் அடுத்ததாக குலதெய்வத்தையும் வழிபாடு செய்துவிட்டு தான் அந்த விரதத்தை இருக்க ஆரம்பிக்க வேண்டும், அப்பொழுதுதான் அந்த விரதத்தின் பலனை நம்மால் முழுமையாக பெற முடியும். அந்த அளவிற்கு குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அப்படிப்பட்ட குலதெய்வத்தை வசியம் செய்து நம் வீட்டிற்கு வரவழைப்பதற்கு உகந்த நாளாக திகழ்வதுதான் அமாவாசை வரக்கூடிய நாள். அமாவாசை தினத்தில் யார் ஒருவர் தொடர்ச்சியாக குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்கிறார்களோ அவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த அமாவாசை தினத்தில் குலதெய்வத்தை வசியம் செய்வதற்காக வீட்டில் இருந்து கொண்டே ஒரு எளிமையான வழிபாட்டு முறையை நாம் பின்பற்றலாம்.
இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி இருந்தால் போதும். ஜூன் மாதம் 25ஆம் தேதி மதியம் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் இந்த மந்திர வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். இதை நம்முடைய வீட்டு பூஜை அறையில் அமர்ந்து கொண்டும் செய்யலாம் அல்லது வீட்டில் ஏதாவது ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கொண்டும் செய்யலாம். வலது கையில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை வைத்துக் கொள்ளுங்கள். வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு அல்லது நின்று கொண்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரத்தை கூறுவதற்கு உங்களுடைய குலதெய்வத்தின் பெயர் உங்களுக்கு தெரிய வேண்டும். அப்படி குலதெய்வத்தின் பெயர் தெரியவில்லை என்றால் குலதெய்வமே என்று பொதுவாக கூறியும் இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம். இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்து முடித்த பிறகு அந்த பச்சரிசியை எறும்புகள் இருக்கக்கூடிய இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான வினைகளும் நீங்கி குலதெய்வத்தின் அருளை பெற முடியும். குலதெய்வ வசியமும் உண்டாகும்.
மந்திரம்
“ஓம் ஸ்ரீம் கிலிம் குலதெய்வத்தின் பெயர் நம”
இதையும் படிக்கலாமே: பணவசியத்தை ஏற்படுத்தும் அமாவாசை
இந்த முறையில் அமாவாசை தினத்தில் குலதெய்வத்தை வழிபாடு செய்பவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.