நாளை மஹாளய அமாவாசை படையல் சாப்பாட்டில் இதை பொருளை மட்டும் சேர்க்கக் கூடாது.

Amavasai Padaiyal
- Advertisement -

கடன்களிலே பெரிய கடன் என்றால் அது பித்ரு கடன் தான். நம்முடைய பித்ரு கடனை தீர்க்காமல் நீங்கள் எந்த வழிபாடு செய்தாலும் எத்தனை கோவில் குளம் சென்றாலும் எத்தனை தான தர்மங்கள் செய்தாலும் எதுவும் பலன் தராது. இவ்வளவு ஏன் நம்முடைய குலதெய்வமே கூட நமக்கு அருள் புரிய வேண்டும் எனில் பித்ருக்களில் அருள் இருந்தால் மட்டுமே கிடைக்கும்.

அப்படி தலையாயக் கடமையான இந்த பித்ரு கடனை தீர்க்க வழிபடும் முறை தான் இந்த அமாவாசை வழிபாடு. அதிலும் நாளைய மகாளய பட்ச அமாவாசை மிகவும் முக்கியமான தினமாக பார்க்கப்படுகிறது. வருடத்தில் எந்த நாட்களில் அமாவாசை வழிபாடு தவறினாலும், இந்த நாளில் தவறாது வணங்க வேண்டும் என்று நம்முடைய சாஸ்திரங்கள் சொல்கிறது.

- Advertisement -

அப்படியான இந்த அமாவாசை வழிபாட்டில் இரண்டு விஷயங்கள் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஒன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது. மற்றொன்று நம்முடைய பித்ருகளுக்கு படையல் இட்டு வணங்குவது. இந்த படையல் இட்டு வணங்குவதிலும் ஒரு சில நியமங்களை நாம் சரியாக பின்பற்ற வேண்டும் என்று ஆன்மிகம் சொல்கிறது அதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அமாவாசை படையல் வழிபாட்டில் சேர்க்க வேண்டிய காய்கறிகள்

இன்றைய நாளில் நாம் முன்னோர்களுக்கு பிடித்தமான பலகாரங்களை செய்து அவர்கள் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து படையல் இட்டு வணங்க வேண்டும். அதன் பிறகு வணங்கிய அந்த சாதத்தை காக்கைகளுக்கு உணவாக வைக்க வேண்டும். இப்படி காக்கைகளுக்கு வைக்கும் போது நம் முன்னோர்களே வந்து உண்பதாக ஒரு ஐதீகம் உண்டு.

- Advertisement -

இந்தப் படையல் சாப்பாட்டில் ஒரு சில உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அன்றைய தினத்தில் அகத்திக்கீரையை தவிர வேறு எந்த கீரையும் சமைக்க கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது போல அன்று சமைக்கப்படும் முக்கிய உணவான சாம்பாரை துவரம் பருப்பு கொண்டு வைக்காமல் பாசிப்பருப்பு கொண்டு வைக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த இரண்டு விஷயங்களை கடைப்பிடிப்பதோடு மேலும் இந்த படைகளில் காய்கறிகளை சேர்த்தால் நம்முடைய பித்ரு கடன் விரைவில் தீரும் என்பதையும் பார்க்கலாம். வாழைக்காய், கத்திரிக்காய், சுண்டக்காய் , பாகற்காய், அவரைக்காய், சேப்பங்கிழங்கு, கொத்தவரங்காய், பிரண்டை, புடலங்காய், சக்கரவள்ளி கிழங்கு, சேனைக்கிழங்கு, வெள்ளை பூசணி, மஞ்சள் பூசணி, மா இஞ்சி, உளுந்து வடை (வெங்காயம் சேர்க்காமல்) சாதம் சாம்பார், ரசம், பாயசம் இத்துடன் இளநீர்.

- Advertisement -

இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்து காய்களையும் சமைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்த காய்கறிகளில் உங்கள் முன்னோருக்கு விருப்பமான உங்களால் முடிந்த காய்கறிகளை படைகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். இளநீரை மட்டும் கட்டாயமாக வைத்து விடுங்கள்.

இந்த வழிபாடு செய்வதே நாம் முன்னோர்களை சாந்தப்படுத்தி அவர்களுடைய ஆசிர்வாதத்தை பெறுவதற்கு தான். அப்படியான இந்த வழிபாட்டில் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் நாம் மனநிறைவோடு செய்ய வேண்டும். அப்படி சமைக்கும் இந்த சாப்பாட்டை யாரேனும் ஒருவரை வீட்டிற்கு அழைத்து போட்டாலும் சரி அல்லது யாருக்காவது தானமாக உணவு வாங்கிக் கொடுத்தாலும் சரி, இந்த இரண்டையும் செய்யும் போது நம்முடைய முன்னோரே அவர்கள் மூலமாக வந்து உணவருந்தி நம்மை ஆசிர்வதிப்பதாக ஐதீகம் உண்டு.

இதையும் படிக்கலாமே: நாளை நடக்கவிருக்கும் சூரிய கிரகணத்தில் அதிர்ஷ்டம் பெற போகும் 3 ராசிக்காரர்கள்.

ஆகையால் இந்த மகாளய பட்ச அமாவாசை படையலை நல்ல முறையில் சமைத்து இலை நிரப்ப படையல் இட்டு முன்னோர்களின் அருளையும் ஆசியும் பெற்று இன்பமுற வாழ வழி தேடி கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -