அமாவாசை தினமான இன்று, இந்த ஒரு பரிகாரத்தை செய்ய தவறாதீர்கள்! உங்கள் தலையெழுத்தை மாற்றி எழுதக்கூடிய சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு.

amavasai-lemon
- Advertisement -

அமாவாசை தினத்தன்று முன்னோர் வழிபாடும், குலதெய்வ வழிபாடும் அதிகப்படியான நன்மையை கொடுக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். இதே போல், இந்த அமாவாசை தினத்தன்று நாம் வேண்டிய வேண்டுதலும் உடனடியாக பலிக்க வேண்டும் என்றால், சில தாந்த்ரீக வழிபாட்டு முறைகளும் நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில் மிக மிக சுலபமான, நமக்கு நன்மை தரக்கூடிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

amavasai1

இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களுக்கு வரக்கூடிய கெடுபலன்கள் குறைந்து, நல்லது நடக்க ஆரம்பிக்கும். நம்பிக்கையோடு முன்னோர்களை நினைத்து, குலதெய்வத்தை நினைத்து ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து, இந்த அமாவாசை அன்று இந்த பரிகாரத்தை செய்து தான் பாருங்களேன். வாழ்க்கையில் நீங்கள் எதிர்பாராத மாற்றங்கள் உங்களைத் தேடி வரும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடங்கலாமா?

- Advertisement -

இந்த பரிகாரத்தை அமாவாசை தினத்தில், மதியம் 12 மணிக்கு மேல் 3 மணிக்குள் செய்யலாம். ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த எலுமிச்சை பழத்தை நான்கு துண்டுகளாக வெட்ட வேண்டும். நான்கு துண்டுகளும் உங்கள் கையில் நான்காக பிரித்து வரக்கூடாது. எலுமிச்சை பழத்தை நான்கு பாகங்களாக வெட்டி, ஒரு எலுமிச்சை பழம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

lemon

அந்த எலுமிச்சை பழத்தின் நடுவே கொஞ்சம் குங்குமத்தையும் தடவிக் கொள்ளுங்கள். அந்தப் பழத்தை எடுத்து உங்கள் தலையை 27 முறை சுற்றிக் கொள்ளுங்கள். இந்த எலுமிச்சை பழத்தை சுற்றுவதற்கு முன்பாக உங்கள் கையில் எலுமிச்சை பழத்தை வைத்துக் கொண்டு, உங்களிடம் இருக்கக்கூடிய கெடுபலன்கள் அனைத்தும் உங்களை விட்டு வெளியேற வேண்டும். உங்களுடைய வாழ்க்கையின் நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்னோர்களிடமும், குலதெய்வத்திடமும் சொல்லி மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

முடிந்தால் இந்த பழத்தை கொண்டு போய் கால் படாத இடத்தில் ஒரு பேப்பரை வைத்து மடித்து தூக்கி போட்டுவிடலாம். வெளியில் கொண்டு போய் போட முடியாதவர்கள் ஒரு பேப்பரில் இந்த பழத்தை நன்றாக மடித்து குப்பைக் கூடையில் போட்டு வீட்டிற்கு வெளியே வைத்து விடுங்கள்.

lemon1

தேவலோகக் கனி என்று சொல்லப்படும் இந்த எலுமிச்சை பழத்தை வைத்து மேல் சொன்ன பரிகாரத்தை, அமாவாசை தினத்தில் செய்வதன் மூலம் உங்களுடைய வாழ்க்கையில் பல நன்மைகள் தொடர்ந்து நடப்பதை உங்களால் அனுபவபூர்வமாக உணர முடியும். அடுத்தபடியாக இந்த அமாவாசை தினத்தில் ராகுவையும் கேதுவையும் வழிபட்டால் நம்முடைய விதியின் பயன் எதுவாக இருந்தாலும், அந்த விதியின் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களின் தாக்கம் குறையும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

Rahu Kethu

அமாவாசை தினத்தில் ராகு காலத்தில் ராகு பகவானுக்கு உரிய மந்திரத்தையும், எமகண்ட வேளையில் கேது பகவானுக்கு உரிய மந்திரத்தையும் மூன்று முறை உச்சரித்தால் கூட போதும். நிச்சயம் உங்களுடைய தலையெழுத்து மாறும். உங்களுக்காக ராகு கேது பகவானின் மந்திரங்கள் இதோ.

ragu

ராகு பகவானின் மந்திரம்:
நாக த்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்!

கேது பகவானின் மந்திரம்:
அச்வ த்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்!

amavasai1

மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இரண்டு பரிகாரத்தையும் செய்யலாம் ராகு பகவானுக்கும், கேது பகவானுக்கும் உரிய இந்த இரண்டு காயத்ரி மந்திரங்களை குறிப்பாக அமாவாசை தினத்தன்று உச்சரிக்கும்போது உங்களுக்கு ராகு கேதுவால் இருக்கக்கூடிய தோஷங்களும் குறைக்கப்படும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நவராத்திரியின் நற்பலன்கள்! வாழ்நாள் முழுவதும் பகைவர்கள் இல்லாத வாழ்க்கையை வாழ, நவராத்திரியின் மூன்றாம் நாள் வழிபாட்டை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -