நவராத்திரியின் நற்பலன்கள்! வாழ்நாள் முழுவதும் பகைவர்கள் இல்லாத வாழ்க்கையை வாழ, நவராத்திரியின் மூன்றாம் நாள் வழிபாட்டை வீட்டிலேயே சுலபமாக எப்படி செய்வது?

நவராத்திரியின் மூன்றாவது நாள், துர்க்கை அம்மன் வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டிய நாள். ராகுகாலம் என்றாலே அந்த நேரத்தில் நல்ல விஷயங்களை செய்யக்கூடாது என்று நாம் ஒதுக்கி வைத்து விடுவோம். ஆனால் துர்க்கை அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த காலமாக சொல்லப்பட்டுள்ள நேரமே, இந்த ராகு கால நேரம் தான். ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு, ஒருவருடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டுவரும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடிய தீராத பிரச்சினைகள் தீர, திருமணத்தடையை போக்க, வெள்ளிக்கிழமைகளிலும் செவ்வாய்க் கிழமைகளிலும் துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சை பழ தீபம் ஏற்றுவது என்பது நல்ல பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. (எலுமிச்சை பழ தீபத்தை, ராகு கால நேரத்தில் மட்டுமே, கோவில்களில் ஏற்றப்பட வேண்டும் என்பதையும் இந்த இடத்தில் நாம் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும். ராகுகாலம் தவிர்த்த மற்ற நேரங்களில் அகல் தீபம் ஏற்றுவதே நன்மை தரும்.)

blue-durga

திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அலுவலகத்திற்கு வேலைக்கு செல்பவர்கள், வெள்ளிக் கிழமைகளில், செவ்வாய் கிழமைகளில் ராகுகால நேரத்தில் அம்மனுக்கு தீபமேற்ற முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் அது உங்களுக்கு நல்ல இல்லற வாழ்க்கையை, நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடி தரும் என்பதில் சந்தேகமே இல்லை.

சரி, துர்க்கை அம்மனின் வழிபாட்டை நிறைவு செய்யும் இந்த நவராத்திரி தினத்தின் மூன்றாவது நாள் எந்த அம்பாளை, எந்த முறையில், சுலபமாக நம்முடைய வீட்டில் வழிபட வேண்டும் என்பதை பற்றி இன்று, இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா? நவராத்திரியின் மூன்றாவது நாளை வாராஹி அம்மனை நினைத்து வழிபட வேண்டும்.

Varahi amman

வாராஹி அம்மன் என்றாலே எதிரிகளை துவம்சம் செய்பவள். எதிரிகள் தொல்லை இல்லாமல் வாழவதற்கு வாராஹி அம்மன் வழிபாடு மிகச் சிறந்ததாக, நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட அந்த வாராஹி அம்மனை, இந்த நவராத்திரி தினத்தில் மூன்றாவது நாளில் வழிபட்டால் நம்முடைய கண்ணுக்கு தெரிந்த, கண்ணுக்குத் தெரியாத எதிரிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் நமக்கு எதிர்மறை ஆற்றலினால், கெட்ட சக்தியினால், கண் திருஷ்டி செய்வினை கோளாறுகள் இருந்தாலும் கூட, அவை அனைத்தையும் துவம்சம் செய்யக்கூடிய சக்தியும் இந்த வாராகி அம்மனிடம் உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. வாராஹி அம்மனுக்கு உகந்த நிறம் நீல நிறம்.

varahi

காலையில் உங்களுடைய வீட்டில்  பூக்களால் அலங்கரிக்கப்பட்ட, பூ கோலங்களை போடலாம் அம்மனுக்கு சம்பங்கி பூவால் அலங்காரம் செய்ய வேண்டும். சர்க்கரை பொங்கலை நைவேத்தியமாக வைக்க வேண்டும். நீல நிறத்தில் வளையல்களை கன்னிப் பெண்களுக்கும், சுமங்கலிப் பெண்களுக்கும் தானமாக கொடுக்கலாம்.

Varahi amman

வீட்டில் இருக்கும் பெண்கள் நீல நிற புடவையை அணிந்து கொள்வது மிகவும் நல்லது. ரவிக்கைதுணி தானம், வஸ்திர தானம் செய்வதாக இருந்தால் அந்த வஸ்திரத்தை நீல நிறத்தில் கொடுப்பது மிகவும் நல்லது என்றும் சொல்லப்பட்டுள்ளது. நாம் அனைவரும் பகை இல்லாத, சந்தோஷமான வாழ்க்கையை வாழ, மூன்றாவது நாள் நவராத்திரி தினத்தில் வாராஹி அம்மனை மனதார வேண்டி பிரார்த்தனை செய்து கொள்வோமா?

இதையும் படிக்கலாமே
நவராத்திரியின் நற்பலன்கள்! வீட்டில் தன தானியங்கள் நிறைந்திருக்க, இரண்டாம் நாள் வழிபாட்டை சுலபமாக எப்படி செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.