துர் சம்பவங்களோ, விபத்தோ ஒரு வீட்டில் நடக்காமல் இருக்க அமாவாசை அன்று செய்ய வேண்டிய வழிபாடு!

amavasai
- Advertisement -

இந்த காலகட்டத்தில் துர் சம்பவங்களும், விபத்துகளும் அன்றாடம் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது. முந்தைய காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தற்போது நிகழக்கூடிய விபத்துக்களின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. வேலைக்கு வெளியில் செல்பவர்கள் பத்திரமாக வீடு திரும்புவதற்குள் வீட்டில் இருப்பவர்களுக்கு நிம்மதியே இல்லை. காலம் இப்படி சென்று கொண்டிருக்க என்ன காரணம். நம்முடைய வீட்டில் துர்மரணம் விபத்துகள் நடக்காமல் இருக்க அமாவாசை தினத்தில் நாம் என்ன வழிபாடு செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

amavasai

ஒருவருடைய வீட்டில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது என்றால் அவர்கள் கர்ம வினையினால் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது, அவர்களுடைய வீட்டில் முந்தைய தலைமுறையில் யாராவது தாமாக உயிரை மாய்த்துக் கொண்டு இருந்தால் அந்த வீட்டில் கட்டாயம் இப்படிப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அந்த கர்ம வினை காண பலனை கட்டாயம் அனுபவித்தே ஆகவேண்டும். அதிலிருந்து யாராலும் தப்பித்துக்கொள்ள முடியாது. இருப்பினும் அந்த பாதிப்பினை குறைக்க என்ன செய்வது.

- Advertisement -

அமாவாசை தினத்தில் அதர்வண தெய்வங்களின் வழிபாட்டை செய்வது மிகவும் சிறப்பான பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுடைய வீட்டின் அருகில் பிரத்யங்கிரா தேவியோ, வாராஹி அம்மனோ, சரபேஸ்வரர், நரசிம்மர் இப்படியாக மனித உடலும், மிருகத்தின் தலையும் கொண்ட தெய்வங்களின் கோவில்களுக்கு சென்று மஞ்சளை தானமாக கொடுக்க வேண்டும். தேன் தானமாக கொடுக்க வேண்டும். அந்த பொருட்களால் அவர்களுக்கு அபிஷேகம் செய்யப்படுவதன் மூலம் ஒரு வீட்டின் ஏற்படக்கூடியது மரணங்களையும் விபத்துக்களையும் இயன்றவரை தடுக்க முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதேபோல் கர்மவினையை குறைக்கக்கூடிய சக்தி தானத்திற்கு உள்ளது. தன்னுடைய வாழ்க்கையை வாழவே வழியில்லாமல் ஆதரவற்று இருப்பவர்கள் இந்த பூமியில் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆதரவற்ற ஆசிரமங்கள், முதியோர் இல்லங்கள் இப்படிப்பட்ட இடங்களுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு உங்களுடைய பிறந்த நாள் அன்றும், அமாவாசை தினத்தன்றும் உங்களால் இயன்ற உதவியை செய்து வரலாம். உங்களுடைய வாழ்நாள் முழுவதும் உதவி செய்து வாருங்கள். இத்தனை நாள் தான் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது.

- Advertisement -

Prathyangara devi

அடுத்ததாக, உங்களுடைய வீட்டில் தென்மேற்கு மூலையில் கழிவறை, கிணறு, போர், செப்டிக் டேங்க், குழி, சமையலறை, தென்மேற்கு மூலையில் வாசல் திறந்தபடி இருந்தால் கட்டாயம் உங்களுடைய வீட்டில் இருப்பவர்களுக்கு விபத்துக்கான பிரச்சனை வந்து கொண்டேதான் இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. முடிந்தவரை அதை செய்து சரி செய்து கொள்ள பாருங்கள்.

dhaanam

அமாவாசை தினம் என்றாலே அன்று ராகுவின் ஆதிக்கம் குறைவாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அன்றைய தினம் முன்னோர்களது வழிபாட்டை மறக்காமல் செய்யுங்கள். அதர்வன தெய்வங்களை மனதார நினைத்து வேண்டிக் கொண்டார்கள். உங்களால் முடிந்த உதவியை வாழ்நாள் முழுவதும் அடுத்தவர்களுக்கு செய்யுங்கள். நிச்சயம் உங்கள் வீட்டில் துர் மரணம், விபத்து நடப்பதை தவிர்க்க முடியும் என்று ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -