மாதம் தோறும் வரக்கூடிய அமாவாசை திதி, பௌர்ணமி நாளுகெள்ளாம் ஒரு தனி சிறப்புகள் இருக்கிறது. இந்த நாளில் நாம் செய்யக்கூடிய பரிகாரங்கள் நமக்கு பல மடங்கு பலனை தரும். சாதாரண நாளில் பரிகாரத்தை செய்தால் பலன் 3மாதத்தில் கிடைக்கும் என்றால், இப்படிப்பட்ட விசேஷமான நாட்களில் பரிகாரங்களை செய்யும் போது ஒரே மாதத்தில் பலனை நம்மால் நிச்சயம் பெற முடியும்.
அந்த அளவுக்கு சக்தி பாசிட்டிவ் எனர்ஜி, அமாவாசை நாளுக்கும், பௌர்ணமி நாளுக்கும் இருக்கிறது. அந்த வகையில் தை மாதத்தின் அமாவாசை திதியானது ஜனவரி மாதம் 29ஆம் தேதி, புதன்கிழமை அன்று வரவிருக்கிறது. இன்றைய தினம் பின் சொல்லக்கூடிய இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பணம் உங்கள் வீடு தேடி தானாக வரும். அந்த பரிகாரத்தை எப்படி செய்வது. பரிகாரத்திற்கு தேவையான வேர் என்ன. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.
காரிய தடை விலக தை அமாவாசை பரிகாரம்
பரிகாரத்தை செய்து விட்டால் கூரையை பிச்சிக் கொண்டு பணம் கொட்டும். நீங்கள் சும்மாவே இருக்கலாம் என்பது அர்த்தம் கிடையாது. பணம் சேர வேண்டும் என்று ஆசை இருக்கு. தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசை இருக்கு. எல்லா முயற்சிகளும் மேற்கொள்கின்றோம். ஆனால் முயற்சிகளில் தடை. லோன் கிடைக்கவில்லை, ஒரு கடை வைத்து வியாபாரம் செய்யலாம் என்று நினைக்கின்றேன்.
கடை வைக்க இடம் கிடைக்கவில்லை, யாருடைய சப்போர்ட்டும் கிடைக்கவில்லை என்று தனி மரமாக நீங்கள் நிற்கிறீர்கள். இந்த பரிகாரத்தை அமாவாசை நாளில் செய்து பாருங்கள். எல்லோருடைய சப்போர்டும் உங்களுக்கு கிடைக்கும். வங்கியில் லோன் கூப்பிட்டு கொடுப்பாங்க. எதிர்பாராத இடத்தில் கடை வைக்க சூப்பரான இடம் கிடைக்கும். இதையெல்லாம் ஒரு உதாரணத்திற்குத்தான். இதுபோல உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். படிக்காமல் திணறிக் கொண்டிருக்கும் மாணவர்களுடைய அறிவுத்திறன் கூடும். மேல் படிப்புக்காக முயற்சி செய்து காலேஜில் சீட்டு கிடைக்கவில்லை வெளிநாட்டில் இடம் கிடைக்கவில்லையா, நல்ல இடத்தில் சீட்டு கிடைக்க வேண்டும் என்றால் என்ன செய்வது, யாரை பிடித்தால் சீட்டு வாங்கலாம் இதற்கான வழிகள் எல்லாம், அடைத்திருக்கும் பாருங்க. அந்த வழிகளை எல்லாம் திறக்கக்கூடிய பரிகாரம்தான் இது. ஆகவே பரிகாரத்தை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையானது குப்பைமேனி வேர். அதி சக்திவாய்ந்த வேர். அமாவாசைக்கு முந்தைய நாளே இந்த வேரை எடுத்து வந்து வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். வேரை பிடுங்கும்போது செடிக்கு வணக்கம் சொல்லிவிட்டு இந்த வேரை நல்ல விஷயத்திற்காகத்தான் பயன்படுத்தப் போகிறேன் என்று செடியிடம் சின்னதாக மன்னிப்பையும் கேட்டுக்கொண்டு வேரை எடுத்து வாருங்கள்.
வேரில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருள் எதுவும் படக்கூடாது பார்த்து நறுக்கி எடுக்கவும். வேரில் இருக்கும் மண்ணை எல்லாம் எடுத்து விட்டு கொஞ்சம் மஞ்சள் தண்ணீரில் அலசி, காய வைத்துக் கொள்ளுங்கள். அமாவாசை காலையில் முன்னோர்கள் வழிபாட்டை எல்லாம் முடித்து விடுவீர்கள்.
அமாவாசை மாலை 6:00 மணி அளவில் பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து, ஒரு தாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளே இந்த குப்பைமேனி வேர் போட்டு விட வேண்டும். ஒரு சிட்டிகை விபூதி, கொஞ்சம் பச்சை கற்பூரத்தை நுணுக்கி அந்த தாயத்துக்குள் போட்டு தாயத்தை அடைத்து, ஒரு சிவப்பு கயிறில் கோர்த்து உங்கள் வீட்டில் குலதெய்வத்தின் திரு உருவப்படம் இருக்கும் அந்த படத்திற்கு கீழே ஒரு கிண்ணத்தில் இந்த தாயத்தை வைத்து, மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
குலதெய்வத்தின் திரு உருவப்படம் இல்லை என்றால் இஷ்ட தெய்வத்திற்கு முன்பாக வைத்து குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு அந்த தாயத்தை கையில் எடுத்து என் வாழ்க்கையில் இருக்கும் தடைகள் அனைத்தும் என்னை விட்டு விலக வேண்டும். என்னுடைய முன்னேற்றம் வானளவு உயர வேண்டும். செல்வ செழிப்பு வானளவு உயர வேண்டும் கடன் ஒரு ரூபாய் கூட இருக்கக் கூடாது கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையை கொடுக்காதே, பிறகு உங்களுடைய வாழ்க்கைக்கு என்னவெல்லாம் தேவை அதையெல்லாம் வேண்டி, இந்த தாயத்தை கழுத்தில் கட்டிக் கொள்ளுங்கள். அல்லது கை புஜங்களில் கட்டிக் கொள்ளுங்கள். இடுப்பில் கட்ட வேண்டாம்.
பெண்களாக இருந்தால் தாயத்து வெளியில் தெரியக்கூடாது, இந்த தாயத்தை செயினுக்கு உள்ளே கட்டி எப்போதுமே டிரஸ்ஸுக்கு உள் பக்கம் போட்டுக் கொண்டாலும் தவறு கிடையாது. இப்படி இந்த பரிகாரத்தை ஆண்கள் பெண்கள் யார் வேண்டும் என்றாலும் அணியலாம். தாய் தந்தையர் இந்த தாயத்தை தயார் செய்து உங்களுடைய குழந்தைகளுக்கும் இந்த தாயத்தை கழுத்தில் கட்டிவிடலாம்.
இதையும் படிக்கலாமே: அழிந்து வரும் ஜடாமாஞ்சில் பயன்கள்
உங்களுக்கு நீங்களாகவே தயார் செய்து கொள்ளக்கூடிய தாயத்து இது. ஒரு வருடம் வரை இதனுடைய சக்தி இருக்கும். அடுத்த தை அமாவாசை வரும் வரை இதை நீங்கள் உங்களுடைய கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். இத்தனை சக்தி வாய்ந்த இந்த எளிய பரிகாரத்தில் முழு நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது என்றால் செய்து பலன் அடையுங்கள்.